Sunday, May 8, 2016

எத்தனை நடிகர்கள் இப்படி சமூக அக்கறையோடு முன்வருவார்கள் என்பது ஒரு கேள்விக்குறி என்றால் அது மிகையில்லை!


அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கச் சொல்லி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு. சமுத்திரக்கனி அவர்கள் !
விருத்தாசலம் அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தி திரைப்பட இயக்குனர்
திரு. சமுத்திரக்கனி அவர்களின் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
தற்காலத்தில் தனியார் பள்ளிகள் மீதான மோகத்தின் காரணமாக பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் மோகம் அதிகரித்து வருகிறது.
இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இப்படியே போனால் எதிர்காலத்தில் அரசு மூடப்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வலியுறுத்தி விருத்தாசலம் அருகே உள்ள கோ.ஆதனூரில் பெற்றோர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோ.ஆதனூர் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் திருமதி.
தமிழ்ச்செல்வி தலைமையில் விழிப்புணர்வுப் பேரணியொன்று
நடைப்பெற்றது.
இப்பேரணியில் திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்ததுடன், வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்று அரசு பள்ளியில் சேர்ப்பதன் அவசியத்தையும், அரசு பள்ளிகளின் சிறப்புகளையும் வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு முழுக்கங்கள் எழுப்பி சென்றனர்.
தனியார் கல்வி முதலாளிகள் கொடுக்கும் லட்சக்கணக்கான ரூபாய்களுக்காக பல நடிகர்கள் தனியார் கல்வி நிறுவன நிகழ்வுகளில் பங்கேற்கும் போது அரசு பள்ளிகள் மீதான சமுத்திரகனியின் சமூக அக்கறை பாராட்டுக்குரியது..
எத்தனை நடிகர்கள் இப்படி சமூக அக்கறையோடு முன்வருவார்கள் என்பது ஒரு கேள்விக்குறி என்றால் அது மிகையில்லை!
சமூக அக்கறை உள்ள நல்ல உள்ளங்கள் இப்பதிவை விருப்பமிட்டு பகிர்ந்தாலே போதுமான ஒன்று!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...