Sunday, May 8, 2016

***உஷார்..உஷார்..உஷார்..

திமுகவும் , விவசாயிகளும்..
போலிக்கண்ணீர் கூட்டங்கள்..
இன்று விளம்பரத்தில் ஏமாற்றுகின்றார்கள்..!!
"கருணாநிதி தான் அன்றைய முதலமைச்சர்.." !!!
***1970ஆம் ஆண்டு இறுதியான காலகட்டத்தில் விவசாயிகள் மீதான தாக்குதல்கள் ஏராளம்..
இன்றைக்கு விளம்பரம் கொடுத்து மக்களை ஏமாற்றும் திமுக தான் அன்றைக்கு ஆட்சியில் இருந்தது.
அந்த காலகட்டத்தில் ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் திரு காமராஜர் இந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவை நல்கினார்.
விவசாயிகளின் ஒரே கோரிக்கை "ஒரே ஒருபைசா" மின்கட்டண உயர்வை குறைக்க அல்லது வாபஸ் வாங்க போராடினார்கள்..
சேலத்தில் பெத்தநாயக்கன் பாளையத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார் கருணாநிதி..
கோவில்பட்டியிலும் அதே நிலைதான்..
நானா இந்த கோவணாண்டி விவசாயிகளா என்று ஒருகை பார்த்துவிடுவோம் என்று சவால் விட்டு தனது போலீஸ் படையை எய்தி துப்பாக்கி சூடு நடத்தி விவசாயிகளை பயமுறுத்தி போராட்டத்தை ஒடுக்க பார்த்தார்..
சங்கரன்கோவில் , இராஜபாளையம், சாத்தூர், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கோவை, கோபிச்செட்டிப்பாளையம், காங்கேயம், ஈரோடு, கரூர், சேலம்-ஆத்தூர், நாமக்கல், மதுராந்தகம், திருத்தணி, வேலூர் போன்ற இடங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்..
இங்கெல்லாம் கண்ணீர் புகைகுண்டுகளும் தடியடிகளும் ஏராளமாக நடந்து பல விவசாயிகள் தங்கள் வாழ்வை இழந்தனர். ஊனமுற்றோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காது..
கருணாநிதியை போல ஒரு மோசமான அக்கிரமமான ஓர் நபரை பார்த்திடவே முடியாது என்பதற்கு இந்த போராட்டத்தை நசுக்குவதில் காட்டிய ஆர்வத்தை கொண்டே சொல்லிவிடலாம்..அந்த அளவுக்கு மிக மோசமான சர்வாதிகாரி இந்த கருணாநிதி..
காமராஜரும் அவரது சீடர்கள குமரி அனந்தன் பொன்னப்ப நாடார் (பா ஜ க பொன்னார் அவர்களின் தந்தை) போன்றோர் மகத்தான ஆதரவை நல்கினார்கள்..
இந்த காலகட்டத்தில்தான் கருணாநிதி தனது உக்கிரமான வார்த்தைகளை காமராஜர் மீது தொடுத்தார்..கருப்பட்டி மண்டையன்..கருவாட்டுகடைக்காரி மகன்..இப்படி பலபல அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தினார்..
மேலும் சட்டமன்றத்தில் அனந்த நாயகி கேள்விக்கு..துப்பாக்கி சூடு நடத்தினால் துப்பாக்கியிலுருந்து குண்டு பாயாமல் பூக்களா வந்து விழும் என்று கேலி பேசினார்..
சுமார் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் குண்டடிபட்டு இறந்துபோனார்கள்..பலர் குண்டுகாயங்களில் தங்கள் கால்களை இழந்தார்கள்..இப்படி பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்..
இவர்கள் கண்ணீர் வடிக்கின்றார்கள்..இப்போது விவசாயிகள் மீது..
இன்றைய சமுதாயம் இவர்களை இவர்களின் செயல்களை பற்றி அறிந்திடாமல் இருப்பதாலேயே இப்படிப்பட்ட கேவலமான விளம்பரங்களை தொலைகாட்சிகளில் கொடுக்கின்றார்கள்..
பலரும் அறியும்வண்ணம் பரப்புரை செய்யுங்கள்..
கொலைகார ஆட்சியாளர்கள் இந்த திமுகவினர் என்பதை உணரவைப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்..
செய்வோம்..பலரும் அறிந்திட மேடைப்பேச்சாளர்களுக்கு இந்த செய்திகளை சொல்லிக்கொடுங்கள்..
நன்றி நன்றி நன்றி..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...