Monday, May 30, 2016

காசியின் சிறப்பு!!!...........

காசியில் கருடன் பறப்பதில்லை!!!
காசியில் கருடன் பறப்பதில்லை, கவுளி ஒலிப்பதில்லை ஏன்???
இராவண சம்ஹாரம் முடிந்ததும் ராமேஷ்வரம் வந்த ஸ்ரீராமர் சிவபெருமானை பூஜிக்க விரும்பி லிங்கம் ஸ்தாபிக்க நினைத்தார்.
ஹனுமானை அழைத்து காசிக்குப்போய் ஒருசிவலிங்கம் எடுத்துவா என்று கட்டளையிட்டார்.
காசிக்குச் சென்ற ஆஞ்சநேயர் அங்கு அதிகமாக லிங்கம் இருந்த இடத்துக்குச் சென்று எது சுயம்பு லிங்கம் எப்படிக் கண்டு எடுத்து செல்வது என்று தடுமாறினார்!
அப்போது ஒரு சிவலிங்கத்துக்கு மேலே கருடன் வட்டமிட்டார்!
அதுதான் சுயம்புலிங்கம் என்று கண்டு கொண்ட ஆஞ்சநேயர் இதை எடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தார்.
அதை ஆமோதிப்பது போல் பல்லி சத்தமிட்டு ஆதரித்தது.
அந்த சுயம்புலிங்கத்தை எடுத்துக் கொண்டு அவர் வெளியே வரும்போது காலபைரவர் இது என் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
என்னைக் கோட்காமல் நீ எப்படி எடுத்துச் செல்லலாம் என்று கூறி தடுத்தார்.
அவரோடு வாக்குவாதம் செய்யும்போது கவுளி என்ற பல்லியும் கருடனும் ராமர் காரியத்துக்கு உதவி செய்தார்கள் என்று ஹனுமன் கூறினார்!
என் கடமைக்கு குந்தகம் உண்டாக்கிய பல்லியே நீ இனி காசியில் ஒலிக்கக் கூடாது!
ஏ கருடா!
நீ காசியில் பறக்கக் கூடாது என்று காலபைரவர் சாபம் இட்டார்!
எனவே இப்போதும் கருடன் காசியில் பறப்பதில்லை!
கவுளி சப்தமிடுவதில்லை இந்த அதிசயம் இன்றும் காசியின் அதிசயம்!
காசி விசுவநாதர் கோயில் (ஹிந்தி:काशी विश्वनाथ मंदिर, காசி விஸ்வநாத் மந்தீர்) என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம் வாராணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பெற்றாலும் பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது.
விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.
தல வரலாறு
தசாஸ்வேமேத் (காட்) நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு கோயில் பக்கம் செல்கிறது. இந்தக்கோயில் 1785இல் மகாராணி அகல்யா பாயினால் (இந்தோர்) கட்டப்பட்டது.
தலபெருமை
இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்துகொள்கின்றனர். சிவனை இலைகளைப் போல் நிறைய நல்ல பாம்புகளுடன் அலங்கரித்த நிழல்கள் இருக்கும்போது அவர் தலையில் கங்கை நீரை ஊற்ற வைத்தும், ஐந்து தடவை செய்யும் ஆரத்தி முக்கியமானது. பூஜை நடக்கும்போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசிக்கும்போது கோயிலின் உள்ளே நுழைய மிகவும் உற்சாகம் கொடுக்கிறது.
கோயில் அமைப்பு
இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது. காலையிலும் மாலையிலும் விசுவநாதருக்கு பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காசி விசுவநாதரால் காசி முக்கிய ஸ்தலமாக இருக்கிறது. கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது.
அன்னபூர்ணா கோயில்

அன்னபூர்ணா கோயில் காசி விசுவநாதர் கோயிலின் அருகே உள்ளது. இது பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்றது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் வலப்புறம் இக்கோயில் உள்ளது.
காசி விசாலாட்சி கோயில்
காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே காசி விசாலாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லலாம்.
கங்கா ஆர்த்தி
வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் தினமும் கங்கை ஆறுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்பெறுவது கண்கொள்ளாக்காட்சியாகும். இந்நிகழ்வை கங்கா ஆர்த்தி என்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கங்கா ஆர்த்தியை ஆர்வமுடன் பார்க்க வருகின்றார்கள்.
கட்டுப்பாடு
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் கோவிலுக்குள் வர வேண்டும். டவுசர், கை பகுதி இல்லத மேல் சட்டை அணிந்து கோவிலுக்குள் வர அணுமதி கிடையாது.
சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன். அவன் அசுவமேத யாகம் செய்தான். இதனால் இந்திரன் தனது பதவி பறிபோய்விடும் எனப் பயந்து அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத் துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். ஆனால் முனிவரின் கோபப்பார்வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முத்தி அடைய வில்லை. அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.
கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை, ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான். அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பின் பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே காசியின் சிறப்பு ஆகும்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...