Thursday, May 26, 2016

மதுவினால் தனக்கு ஏற்படும் இழப்பை உணராத ஒருவனால் மது அருந்துவதை நிருத்த மாட்டான்

வாழ்க வளமுடன்
நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆண்டாண்டு காலமாகத்தொடரும் மதுவிலக்கு ஒரு முக்கியப் பங்கு வகித்தது.
இது சம்பந்தமாக அரசியல்வாதிகளிடம் நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
மதுவை சட்டத்தின் மூலமாகத்தான் ஒழிக்க முடியும் என்று கூறுகிறீர்களே சட்டத்தால் ஒழிக்கமுடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா?
சட்டம் போட்டால் கள்ளச்சாராயம் பெருகும் என்பதோ அதனால் பல உயிர்கள் பலியான கதைகளோ உங்களில் யாருக்கும் தெரியாதா?
மது ஒழிப்பு என்பது மக்களின் மனங்களில் ஏற்பட வேண்டிய மாற்றம். திருடனாய்ப பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது. என்ற பட்டுக் கோட்டையார் கூறியது உங்களுக்குத் தெரியாதா?
இது உண்மைதான் என்று உங்களுக்கத் தோன்றினால், அந்த மாற்றத்தை உங்கள் கட்சி அங்கத்தினர்களிடமிருந்து நீங்கள் துவக்கலாமே?
அரசாங்க சட்டத்தை மாற்ற காந்தி எடுத்த ஆயுதம் என்ன? ஒத்துழையாமைதானே? அதை உங்களால் ஏன் கையிலெடுக்க முடியவில்லை?
ஏனென்றால் அந்த ஆயுதத்தை நீங்கள் கையில் எடுத்தால் கட்சி உறுப்பினர்களில் 75 சதம்பேர் கட்சியை விட்டு விலகுவார்களே தவிர, மதுவை விடமாட்டார்கள் என்பது உங்களுக்கும் தெரிந்ததுதான். அதனால்தான் மக்களிடம் வைக்க வேண்டிய கோரிக்கையை அரசிடம் வைத்து உங்கள் பொறுப்பைத் திசைமாற்ற முயல்கிறீர்கள்.
என்னைப் பொருத்தவரை, மதுவினால் தனக்கு ஏற்படும் இழப்பை உணராத ஒருவனால் மது அருந்துவதை நிருத்த மாட்டான் என்பதேயாகும்.
நான் பார்த்தவரை மது ஒழிப்பில் அதிகமான முழக்கங்களை எழுப்பியவர்கள். மதுவை அதிகம் அருந்துகிற அங்கத்தினர்களைக் கொண்டக் கட்சிக் காரர்கள்தான்.
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்தில் எல்லாம் உளன். என்ற வள்ளுவன் கூறிய குறளை இனியாவது மனதில் நிறுத்தி செயல்படுங்கள். அப்போதுதான் மக்கள் மனங்களில் உங்களால் குடியேறமுடியும். அதன்பிறகுதான் உங்களால் ஆட்சிக்கட்டிலில் உட்காரமுடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...