Wednesday, May 11, 2016

ஆளும் கட்சியே அரசின் சாதனைகளை மக்களிடம் முறையாக சொல்லவில்லை என்பதுதான் இதில் பெரிய ஆசோகம்....

எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும்
முதலமைச்சர் ஜெயலலிதா அரசு மீது சுமத்தும் குற்றங்கள் உண்மைக்கு மாறானவை என்றுதான் தோன்றுகிறது.
ளும் கட்சியே அரசின் சாதனைகளை மக்களிடம் முறையாக சொல்லவில்லை என்பதுதான் இதில் பெரிய சோகம்....
முதலமைச்சர் ஜெயலலிதா அரசின் ஒரு ஆய்வு இதோ செயல்படுத்தப்பட்ட இலவச திட்டங்கள் :-
� வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசி
� வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள 3 லட்சம் குடும்பங்களுக்கு பசுமை வீடுகள்
� 12 லட்சம் குடும்பங்களுக்கு மனைப்பட்டா
� 1 கோடியே 63 லட்சம் பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி.
� பயனாளிகளுக்கு கறவை மாடு அல்லது ஆடு - திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மாடுகளும் 28 லட்சம்
� பிரசவத்தின்போது உதவி திட்டத்தின்கீழ் 31 லட்சம் கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி
� திருமண உதவி திட்டத்தின் கீழ் 8 லட்சம் பெண்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், 4 கிராம் தங்கமும்.
� 32 லட்சம் மாணவ மாணவிகளுக்கு
மடிக்கணினியும் மற்றும் 31 லட்சம்
மாணவர்களுக்கு மிதிவண்டியும்.
� அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு செட் சீருடைக்கு பதில் நான்கு செட் சீருடைகள் மற்றும் புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப்பை, செருப்பு, உபகரணப்பெட்டி, போன்றவை.
� பள்ளியிலிருந்து நடுவில் நிற்காமல்
இருப்பதற்காக 1 கோடி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தலா ரூ.5,000.
� 31 லட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டம்.
� 33 லட்சம் கிராம பெண்களுக்கு
ஆண்டுதோறும் சானிடரி நாப்கின்.
**கல்வி**
� புதிதாக தொடங்கப்பட்ட
துவக்கப்பள்ளிகள் - 221
� நடுநிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட்டவை - 112
� உயர்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட்டவை - 810
� மேல்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட்டவை - 402
� நிரப்பப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் - 72843
� நிரப்பப்பட்ட ஆசிரியர் அல்லாத
பணியிடங்கள் - 14711
கல்விக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் காரணமாக கடந்த ஆண்டுகளில் பள்ளியிறுதி தேர்வுகளில் தேர்வு சதவீதம் அதிகரித்ததுடன் மாநில முதலிடங்களையும் அரசு பள்ளிகள் பெற்றது.
**சுகாதாரம்**
� முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற்றோர் - 13.3 லட்சம்
� அரசு மருத்துவமனைகளில் பயன் பெற்றோர் - 5.4 லட்சம்
� மருத்துவ காப்பீட்டிற்கு அரசு
செலவழித்த தொகை - 2759 கோடி.
� அரசு மருத்துவமனைகள் பெற்ற
வருமானம் - 1003 கோடி
(முந்தைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் பயன்பெற்றன)
� புதிதாக துவங்கப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்கள் - 172
� 30 படுக்கை மற்றும் பிறவசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்கள் - 122
� பணியமர்த்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் - 14707
**நெடுஞ்சாலைத் துறை**
� ரூ.165 கோடி செலவில் 12 புறவழி
சாலைகள்
� ரூ.3000 கோடி செலவில் 1793 பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள்
� ரூ.20,000 கோடி செலவில் 48980 கி.மீ. சாலைகள் மேம்பாடு மற்ற சாதனைகள்
� முல்லை பெரியார் நீர் மட்டத்தை 136
அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்தியது.
� காவேரி நடுவர் மன்ற ஆணையை அரசிதழில் வெளியிடச் செய்தது.
� சிறு பேருந்துகளை அறிமுகப்படுத்தியது மற்றும் 6500 புதிய பேருந்துகளை வாங்கியது
� மெட்ரோ ரயிலுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்து முதல் கட்ட பணியினை விரைவு செய்தது.
� 8500 கோயில்களில் கும்பாபிஷேகம்
� சென்னை சந்தித்த கடும் வெள்ளத்தில் கால்வாய் கரையோரம் வீடு இழந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் - 2313 குடும்பங்களுக்கு குடியிருப்பு வழங்கப்பட்டது.
� சென்னை கடும் வெள்ளம் காரணமாக, பெரிய சுகாதாரப் பிரச்சனைகள் வராமல் நடவடிக்கை எடுத்ததும் அதற்காக மத்திய குழுவின் பாராட்டு பெற்றதும்.
� எளியோர்க்கு பயன்படும் அம்மா
உணவகங்கள், அம்மா குடிநீர் போன்றவை
� காணொலி காட்சியின் மூலம்
அரசு விழாக்களை நடத்தி அரசுக்கு பலகோடி ரூபாய்களை மிச்சப்படுத்தியது. மதுவினால் அரசுக்கு வரும் வருமானம் குடிப்பவர் பெருகியதால் ஏற்பட்ட வருமானம்போல் பேசப்படுகிறது. இது தவறு. தனியாருக்கு போய்க்கொண்டிருந்த
வருவாயை, அரசே மது விற்பனையை ஏற்று நடத்தியதால் அரசுக்கு வருமானம் 10,000 கோடி ரூபாயிலிருந்து சுமார் 25,000 கோடியாக
உயர்ந்தது.
இதை கொச்சைப்படுத்தும் விதமாக கோவன் போன்றவர்கள் ஜெயலலிதாவே மதுவை ஊற்றிக்கொடுப்பது போல வீடியோ வெளியிட்டால் அதற்கு பெயரா கருத்து சுதந்திரம்.?
கருணாநிதி, தான் சந்தித்த ஒரே வழக்கான சர்க்காரியா வழக்கையே மொரார்ஜி தேசாயிடம் வாபஸ் பெற வற்புறுத்தியவர். ஜெயலலிதா மீது போடப்பட்ட 14 வழக்குகளில் அத்தனையும் நீதிமன்றத்தில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி விற்பனையில் முறைகேடுகள் காரணமாக தி.மு.க. அமைச்சர், நடுவண் அரசுக்கு பெற்றுத்தந்த வருமானம் ரூ.10,000 கோடி தான். ஆனால் 3 ஜி விற்பனையில் ஏலம் மூலம் அரசுக்கு வந்த வருமானம் ரூ.1 லட்சம் கோடி. மத்திய அரசுக்கு ஏற்பட்ட இந்த நட்டம் குறித்து தி.மு.க. மக்களிடம் விளக்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில், போலீஸ் வேடிக்கை பார்க்க சட்ட கல்லூரி மாணவர்கள் கொலைவெறித் தாக்குதலில் அன்று ஈடுபட்டதையும், நீதிமன்ற வளாகத்தில் 19.2.2009 அன்று போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் ஏற்பட்ட பெரிய கலவரத்தையும் இந்த தருணத்தில் நினைவுகூர்தல் நன்று.
ஜெயலலிதா மீது தனிநபர் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அரசின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிடுவது நியாயமற்றது. புதிதாக பொறுப்பேற்கும் எந்த அரசும் அ.தி.மு.க. அரசு உள்பட, மேற்சொன்ன புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்தே செயல்பட வேண்டியிருக்கும்.
மேற்சொன்ன மதிப்பீட்டுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். தன் குடும்பத்தை அரசியலில் நிலைநிறுத்திக்கொள்ள ஏற்றவாறு செயல்படும் கருணாநிதி நிச்சயம் ஜெயலலிதாவுக்கு மாற்று அல்ல.
இதுவரை சிறந்த. நிர்வாகத்தைதான் அம்மா அரசு வழங்கியுள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...