Thursday, May 5, 2016

ஸ்டாலினுக்கு_ஒ௫_கேள்வி‬...

முக‌ஸ்டாலினுக்கு கேள்வி கேட்கின்றார்கள், நாமும் ஒன்று கேட்காவிட்டால் முகநூலில் இருக்க தகுதியற்றவன் என்பார்கள்
அய்யன்மீர், எத்தனையோ முறை உங்கள் தந்தை முதல்வராக இருந்தார், கடந்தமுறை திமுக ஆட்சியில் சில தவறுகள் நடந்ததென்று நீங்களே சொன்னீர்கள் நினைவிருக்கின்றதா?
அந்த தவறுக்கு யார் காரணம்? உங்கள் தந்தையா? சொல்லுங்கள், 5 முறை ஆண்டும் தவறுகளை திருத்திகொள்ளாத உங்கள் கட்சியினை இன்னும் எப்படி நம்புவது? ஏதும் உத்திரவாதம் உண்டா?
நெடுநாளாக எனக்கொரு கேள்வி, நீங்கள் 14 வயதிலே கட்சிக்கு வந்தவராம், அப்படியானால் நீங்கள் என்ன தொழில் செய்தீர்கள்? என்ன வருமானம்?
ஏதோ சலூன் கடையில் திமுக இளைஞரணி தொடங்கினீர்களாம், அக்கடையில் முடிவெட்டும் தொழிலாளியானால் கூட சம்பாதித்திருப்பீர்கள், ஆனால் அங்கும் கட்சிக்காக உழைத்து ஏழையாகத்தான் இருந்தீர்களாம்.
உங்கள் மகன் ரெட்ஜியண்ட் நிறுவணம் தொடங்கி படமெடுக்க அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?
அவரும் வேலை வெட்டிக்கோ, வெளிநாட்டு வேலைக்கோ சென்றதாக தெரியவில்லை? சென்னை பீச்சில் சுண்டல் விற்றதாக கூட தகவல் இல்லை.
இப்படி ஒரு வேலைக்கும் செல்லாத உங்கள் குடும்பத்திற்கு தொடர்ச்சியாக சினிமா தயாரிக்கவும், ஹம்மர் கார் வாங்கவும் என்ன வருமானம்?
இப்படி பெரும் தொழிலில் இறங்க நீங்கள் மெய்வயதிலே் செட்டியார், அண்ணாமலை செட்டியார் வம்சமோ அல்ல, திருகுவளையில் ஒரு ஏழை முத்துவேலரின் வாரிசுகள் நீங்கள்.
உங்களை யாரும் திடீரென தத்தெடுத்ததாக செய்தி ஒன்றும் படித்ததில்லை
உங்கள் தந்தை புகழ்மிக்க வசனகர்த்தா சந்தேகமில்லை, என்எஸ்கே காலத்திலே 10 ஆயிரம் வாங்கியவர், ஆனால் 3 மனைவிகள், 6 பிள்ளைகள் 2 சகோதரிகளுக்கு பங்கு வைத்தபின் என்ன மிஞ்சி இருக்கும்? ஒன்றும் இருக்காது.
சினிமாவில் உங்கள் தந்தையினை விட அதிகம் சம்பாதித்த என்எஸ்கே, கண்ணதாசன் போன்ற ஜாம்பவான்களின் வம்சமே திணறும் காலத்தில், 1950களில் வசனம் எழுதிய உங்களின் தந்தையின் சேமிப்பு எப்படி கைகொடுக்கமுடியும்.
இவ்வளவு பணம் எங்கிருந்து் வந்தது?
தெரியபடுத்துங்கள். கேட்க சொன்னீர்கள் கேட்க வேண்டியதாயிற்று...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...