பண்டைய இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள காலடி என்னும் இடத்தில் சங்கரர் பிறந்தார்.
இளவயதிலேயே தந்தையை இழந்தார்.... தாயாரால் வளர்க்கப்பட்டார்.
இளவயதிலேயே தந்தையை இழந்தார்.... தாயாரால் வளர்க்கப்பட்டார்.
சங்கரர் ஒரு குளத்தில் குளிக்கச் செல்ல, அங்கு அவர் காலை ஒரு முதலை கவ்வி பிடிக்கிறது. அதை பார்த்த தாய் கதறி துடிக்கிறார்....
உடனே சங்கரர், "என் ஆயுள் முடிந்தது அம்மா! நான் சன்னியாசம் போக, நீங்கள் சம்மதித்தால், இந்த முதலை என்னை விட்டுவிடும். ஏனென்றால் சன்னியாசம் என்பது மறுபிறவி அம்மா" என்று கூறுகிறார்.
அந்தத்தாயும் மகன் உயிருடன் இருந்தால் போதும் என்று, "சம்மதம் மகனே" என்று கூற.... முதலை சங்கரர் காலை விட்டுவிடுகின்றது.
அவர் தன் தாயிடம், "அம்மா! உன் அந்திம நேரத்தில் எங்கிருந்தாலும் நான் உன்னிடம் வந்துவிடுவேன்..... நீ கவலைப்படாதே" என்று வாக்கு தந்துவிட்டுத்தான்.......
7 வயது இளம் பிள்ளை சங்கரரும், சன்னியசம் வாங்கிக்கொண்டு அன்றைய பாரதம் முழுவதும் 3 முறை பாதயாத்திரை மூலம் சுற்றி வந்து இந்து மதத்திற்க்கு புத்துயிர் கொடுத்தார்.
சன்னியாசம் என்றால் அங்கு எந்த உறவும் இல்லை. எந்த பந்தமும் இல்லை. இங்கு அந்த தாய்க்கு வேறு மகன் இல்லை. சங்கரர் ஒருவரே குழந்தை. அந்த தாய்க்கு ஈமக்கிரியை செய்ய யாருமில்லை.
அனைத்து பந்தங்களையும் துறந்துவிட்ட துறவி ஆனாலும்..... 'கர்பக்கடன்', அதாவது உடல் உருவாக தன் கர்பத்தில் அந்த தாய் இடம் கொடுத்து, அதனால் ஏற்ப்பட்ட துன்பங்களை அன்புடன் , கருணையுடன் பொறுத்து பெற்று வளர்த்த கடன் உள்ளது.
சங்கரர், ஒரு நாள் பாதயாத்திரையில், தன் சிஷ்யர்களுக்கு தர்மத்தை போதித்துக் கொண்டிருக்கும் பொழுது, 'தன் தாய், அந்திமத்தை அடைந்ததை' உணர்ந்து.....
உடனே அங்கு சென்று தன் தாய்க்கு ஆறுதல் கூறி, தாய்க்கு மோட்சம் அருளுகிறார்.
அந்தக்காலத்தில் அவர் தாய் வாழ்ந்த இடத்து உறவினர்கள், ஈமக்கிரியைக்கு உதவிபுரிய மறுக்க.....
சங்கரர் வீட்டின் பின் புறத்தில், பச்சை வாழைமட்டையில் தன் தாயின் உடலை வைத்து தன் சக்தியால் அதை கொழுந்துவிட்டு எரியவைத்து தன் தாயினுடலை அக்கினிக்கு தந்ததாக வரலாறு உள்ளது.
No comments:
Post a Comment