கூண்டில அடைச்சி வச்சிருக்கிற பிராய்லர் கோழியின் ருசிக்கும் ஆர்கானிக் என்று சோ கால்ட் இயற்கையின் படி வளர்க்கப்படும் கோழிகளின் ருசிக்கும் வித்தியாசம் இருக்குமா?
நிச்சயம் சுவையில் வேறுபாடு உண்டு. பிராய்லர் கோழிகளின் தாய்க்கோழி White leghorn மரபில் வரும். அவை கோழிக்குஞ்சாக இருக்கும்பொழுதே மூக்கு வெட்டப்பட்டுதான் பண்ணையில் விடப்படும். இயற்கையாக ஒவ்வொரு தானியமாக கொத்தி தின்னும் கோழியை குத்து குத்தாக அள்ளி தின்னத்தான் இந்த ஏற்பாடு. அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த மக்காச்சோளம் மற்றும் ஒரு சில இரசாயனங்கள் தீனியில் தரப்படும். Feed conversion ratio (quantity of feed taken and the corresponding increase in body weight) மிக முக்கியம். எனவே தீனியில் நார்ச்சத்தைக் வயிற்றுப்போக்கு ஏற்படாத அளவுக்கு குறைத்துவிடுவர். இரவு முழுவதும் மின்விளக்குகள் எரிந்துகொண்டே இருக்கும். குளிர்காலத்தில் அவை தரையிலிருந்து ஒரு அடி உயரத்திலேயே இருக்கும். எனவே குளிரை தணிக்க ஆற்றல் வீணாகாது. இரவு பகல் தெரியாமல் வெளிச்சம் இருப்பதால் சிர்காடியன் ரிதம் உடைக்கப்பட்டு உணவு தொடர்ந்து செரிமானமாகி கொழுப்பாக மாறிக்கொண்டே இருக்கும். அதிக மூவ்மென்ட் இல்லாதவாறு அடைக்கப்படுவதால் ஆற்றல் விரயம் குறைந்து எடை மளமளவென ஏறும். பிராய்லரின் ஆயுள் ஆறு வாரம் மட்டுமே. 45 நாளுக்கு பின்னர் எடை குறையத்தொடங்கும். அதனால் 40-வது நாள் சந்தைக்கு அனுப்பப்படும்.
நாட்டுக்கோழிகளின் தாய்க்கோழி நம் உள்ளூர் wild breeds. மேலும் அதிக உடல் இயக்கம் இருப்பதால் தசைகள் வலுவாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும். உணவை அது கொத்தி தின்பதாலும், நார்ச்சத்து மற்றும் இதர inert matter நிறைய இருப்பதாலும் feed conversion ratio குறைவு. இரவு தூங்குவதால் சிர்காடியன் ரிதம் ஒழுங்காக இருக்கும். அதனால் தேவைக்கு அதிகமான உணவு கழிவாக வெளியேறும்.
பறவைகளில் portal circulation இருப்பதால் பிராய்லரின் ஈரலைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்கின்றனர். இதயத்திலிருந்து இரத்தம் வெளியேறி உடலில் பரவும் முறையில் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இது. உட்கார்ந்திருக்கும் பறவை திடீரென பறக்க மிக அதிக blood pumping அவசியம். அதனால் சில அடிப்படை மாறுபாடுகள் உண்டு.
No comments:
Post a Comment