Monday, May 30, 2016

நண்பர்களைைப் பற்றி் பாறைல எழுந்துங்க இல்லன்னா மணலில் எழுந்துங்க ஆனா ஃபேஸ்புக் சுவற்றில் மட்டும் எழுதாதீங்க .

ராமுவும் சோமுவும் நண்பர்கள்..ஒரு நாள் இருவரும் கடற்கரைக்கு சென்றனர்..அங்கே அற்ப காரணத்திற்காக இருவருக்கும் கருத்து வேறுபாடு..கோபத்தில் ராமு சோமுவைப் பளார் என்று அறைந்து விட்டான்.இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சோமு துக்கம் தாளாமல் தனியாக போய் உட்கார்ந்துகொண்டு "இன்று என் நண்பன் ராமு என்னை அடித்து விட்டான்" என்று மணலில் எழுதினான்..கடலலை வந்து அதை அழித்து விட்டது..மனவேதனையோடு உட்கார்ந்திருந்த சோமுவை திடீரென்று ஒரு பெரிய அலை அடித்து இழுத்துக் கொண்டு போனது..இதைப் பார்த்த ராமு பதறி ஓடிப் போய் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கடலில் குதித்து சோமுவைக் காப்பாற்றினான்.."இன்று என் நண்பன் ராமு என் உயிரைக் காப்பாற்றினான்" என்று அருகில் இருந்த பாறையில் செதுக்கி வைத்தான்..

இப்படித்தான் அடுத்தவர்கள் நமக்கு செய்யும் தீங்குகளை மணலில் எழுதி மறந்து விட வேண்டும் ..அடுத்தவர்கள் செய்த உதவிகளை மட்டும் மனதில் எழுதி வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல வேண்டும்.
அடுத்தவர்களுடன் பிரச்சனை வந்தால்,அவர்களைக் குறித்த எதிர்மறை விஷயங்களை நினைக்காமல் அவர்கள் நமக்கு செய்த நல்ல விஷயங்களை ,உதவிகளை,நிகழ்ந்த இனிமையான உரையாடல்களை மட்டும் அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டிருந்தால் அது மீண்டும் உறவுகளைப் புதுப்பிக்க வில்லையென்றாலும் நம் உற்சாகத்தை இழக்க செய்யாமல் செய்யும்.. மனதும் காற்றில் பறப்பது போல் லேசாக இருக்கும்..
அவர்களிடம் இறு(ரு)க்கமாக இல்லாமல் லூசாக இருந்தாலே மனதும் லேசாக இருக்கும் என்றும் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...