உடலுக்கு உடற்பயிற்சிபோல, முகத்திற்கு முகப் பயிற்சி! – எப்போதும் இளமையான முகப்பொலிவிற்கு . . .
உடலுக்கு உடற்பயிற்சிபோல, முகத்திற்கு முகப் பயிற்சி! – எப்போதும் இளமையான முகப்பொலிவிற்கு . . .
பொதுவாக உடலுக்குஉடற்பயிற்சி இருப்பதுபோல், நமது முகமும் பொலி வாக, இளமையாக, ஆரோக்கியமாக,
அழகாக காட்சியளிக்க முகத்திற்கும் சிலபயிற்சிகள் உண்டு. அந்த பயிற்சியினையும் செய்யும் முறைகளையும் இங்கு காண்போம்.
முகத்தில் இருக்கும்தாடைகளுக்கு பயிற்சிவேண்டும் என் றால், A, E, I, O, U போன்ற எழுத்துக்களை அழுத்தமாக சத்தமாக சொல்லவும்.
கண்களுக்கு நல்லபயிற்சியாக இருக்கவேண்டும் என்றா ல், கண்களை வட்டவடிவில் சுற்றிப்பாருங்கள். அதாவது ஒரு பெரிய வட்டத்தை கண்களால் சுழற்றி பார்ப்பது போல் பார்க்க வேண்டும்.
விரல்களை நெற்றியில் வைத்து வட்டவடிவில் சுற்றி சுற்றி மசாஜ் செய்யலாம். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் அதி கரிக்கும். அதே சமயம் நெற்றியில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.
மேலும் கண்ணங்கள் உப்பி இருக்கவேண்டும் என விரு ம்புபவர்கள், வாயில் காற்றை நிறைத்து கண்ணங்களை உப்ப வைத்து 10நொடிகள் இருக்கலாம். இவ்வாறு 10
முறை செய்தால் கண்ணங்கள் புசுபுசுவென்று மாறும்.
இரண்டு காதுகளையும் உள்ளங்கைகளால் அழுத்திப் பிடி த்துக்கொள்ளுங்கள். உங்களால் எவ்வளவு அழுத்தமாக பிடிக்க முடியுமோ அவ்வளவு அழுத்தமாக பிடித்தபடி 25 வரை எண்ணுவும். இவ்வாறு செய்தால் காது கேட்கும் திறன் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment