Friday, May 20, 2016

கைநிறைய சம்பளத்துடன் நீங்கள் விரும்பும் வேலை நொடியில் கிடைத்திட சில ஆலோசனைகள்

கைநிறைய சம்பளத்துடன் நீங்கள் விரும்பும் வேலை நொடியில் கிடைத்திட சில ஆலோசனைகள்

கைநிறைய சம்பளத்துடன் நீங்கள் விரும்பும் வேலை நொடியில் கிடைத்திட சில ஆலோசனைகள்
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தங்களுடைய அடிப்ப‍டை தேவைகளையும் அவர்களது
குடும்பத்தினரின் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற‍ பொருளாதா ரம் வேண்டும். அந்த பொருளாதாரம் எப்ப‍டி வரும் சொந்தமாக தொழில் செய்ய‍ வேண்டும். அதற்கு முதலீடு பெரும் உடலுழைப்பும் தேவை சரி இதனை ஒருபுறம் ஒதுக்கி வைப்போம். மற் றொரு வழி என்ன‍ பார்த்தால் வேலைக்கு செல் வது அதுவும் கைநிறை சம்பளத்துடன் நீங்கள் விரும்பும் வேலை நொடியில் கிடைத்தால், கிடைக்கும் நிம்ம‍திக் கும் சந் தோஷத்துக்கும் வானமே எல்லை எனலாம். அத்தகை வேலை நமக்கு கிடைக்க‍ முதலில் நமக்கு ஒரு ஆயுதம் தேவை. அந்த ஆயுதத்தை பற்றித்தான் கீழே காண்போ ம் வாருங்கள்.
ரெஸ்யூம் தயாரிக்க சூப்பர் டிப்ஸ் !

ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறுதல் என்ற போர்க்கள த்தில், ரெஸ்யூம் என்பது ஒருவரின் சிறந்த ஆயுதம் போ ன்றது. எனவே, அந்த ஆயுதத்தை எப்படி வடிவமைப்பது என்ற கலையை கற்றுக்கொள்பவர் வெற்றிய டைவார். அது தொடர்பான விரிவான ஆலோசனைகளை இக் கட்டுரை அலசுகிறது.
எது முக்கியம்
ஒருவர், முதல் தடவை தனது ரெஸ்யூமை தயார் செய்ய தொட ங்கும் அவர் செய்த சில முக்கிய சாதனைகள், அவரின் சிறப்பா ன திறமைகள் மற்றும் ஆற்றல்கள் குறித்து குறிப்பிட மறந்து விடுவார். மாறாக, வாங்கிய பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பி ற்கான சான்றிதழ்களின் விபரங்கள், படித்துமுடித்த வருடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகிய விஷயங்களை மட்டுமே பிரதானமாக குறிப்பிடுவார். இந்த தவறை பலரும் செய்கிறார்கள்.
மாறாக, ரெஸ்யூம் எழுதுபவர்கள், இரைச்சலும், தொந்தரவும் இல்லாதஒரு தனியிடத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும். தாங்கள் எந்தப் பணிக்கு விண்ணப்பிக்க போகிறோமோ, அதுதொட ர்பாக செய்த சில முக்கிய சாதனைகள், பெற்ற சிறப்பு பயிற் சிகள், தனக்கு இருக்கும் தனித்திறன்கள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும், முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்பிட வேண்டும்.
உங்களின் ஆலோசனைகள்
நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை தெளிவாக அறிந்துகொள்வது அவசியம். இணையதளத்தில் விபரங் களை தேடினால், குறிப்பிட்ட அளவு தகவல்களே கிடை க்கும். எனவே, அந்த குறிப்பிட்ட நிறுவத்தில் பணிபுரியு ம் யாரேனும் சில ஊழியர்களை சந்தித்துப் பேசி, தே வையான விபரங்களைதெரிந்துகொண்டு அங்கே என்ன விதமான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையும் தெரிய முயற்சிக்க வேண்டும்.
உங்களின் விண்ணப்பத்தில், பிரச்சனை என்னவென்று குறிப்பிடாமல்,அதேசமயம், அதற்கான தீர்வுகளை உங்களின் ஆலோ சனை வடிவில் எழுதியனுப்பவேண்டும். உயர் நிர்வாக கமிட்டியில் இருப்பவர்கள், இதுபோன்ற ஆலோசனை களால் கவரப்படுவார்கள். எனவே, உங்களுக்கான நேர் முகத்தேர்வு அழைப்புக் கடிதம் இதன்மூலம் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
படிப்பதற்கு எளிதாக…  
உங்களின் ரெஸ்யூம் தெளிவாகவும், தரமாகவும் இருக்கும் அதே நேரத்தி ல், படிப்பவருக்கு எளிதாக இருப்பதும், மிக முக்கிய மான அம்சம்.
ரெஸ்யூம் எத்தனை பக்கம்
ரெஸ்யூம் தயாரிப்பை பொறுத்தவரை, சில கட்டுப் பெட்டியான விதிகள் வலியுறுத்தி சொல்லப்படுகின் றன. அதாவது, ரெஸ்யூம், பொதுவாக, ஒரு பக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது. ஆனால், இந்த விதி பெரும் பாலும் புதிதாக படிப்பை முடித்த பட்டதா ரிகளுக்கு பொருந்தினாலும், அதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய முக்கிய விஷயங்கள் இருந்தால், 2 பக்க ரெஸ் யூம் தயார் செய்யலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், 2 பக்கங்களு க்கு மிகாமல் ரெஸ்யூம் தயார் செய்யப்பட வேண்டும்.
தகவல் பரிமாற்றம்
உங்களின் ரெஸ்யூமில், உங்களின் பலவித தொடர்பு கொள்ளும் விபரங்க ளைத் தெரிவிப்பது மிக்க நன்று. உங்களின் வீட்டு விலாசம், மொபைல் எண், வீட்டு தொலைபேசி எண், ஈ-மெயில் முகவரி உள்ளிட்ட விஷயங்க ளை தெரிவிக்கவும். ஏனெனில், உங்களை எந்த நேரத்திலும் எளிதாக தொடர்புகொள்ளும் வசதியை, வேலை வழங்குநருக்கு, இவற் றின் மூலமாக நீங்கள் வழங்க வேண்டும்.
இவற்றை தவிருங்கள்
நீங்கள் ரெஸ்யூம் தயாரிக்கும்போது, I, My, Me, Mine ஆகிய தனிப் பட்ட pronoun -களை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக,
I was incharge of the entire purchase function in the ———- company என்று எழுதுவதற்கு பதில், Incharge of the entire purchase function of the ——- company என்று எழுதலாம்.
 
முன்அனுபவ விபரம்
உங்களின் முன்அனுபவ விபரங்களைப் பற்றி குறிப் பிடும்போது, சற்று கவனமாக செயல்படுவது நல்ல து. உதாரணமாக, எந்த நிறுவனம், உங் களின் பணி நிலை, காலகட்ட விபரம், நிறுவனத்தின் பெயர் மற்றும் விலாசம் ஆகிய விபரங்களைத் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மேலும், அவற்றின் காலவரிசையை சரியாக குறிப்பிட வேண்டும். உதாரணமாக, தற்போது பணிபுரிந்து கொண் டிருக்கும் நிறுவன விபரத்தை முதலிலும், இதற்கு முன் னர் இருந்ததை அடுத்ததாகவும், பின்னர் மற்றதை, அடுத்தடுத்த வரிசையிலும் குறிப்பிடலாம்.
தொழில்நுட்ப சவால்
பல நிறுவனங்களில், ரெஸ்யூம்களின் ஆரம்ப ஸ்கிரீனிங் பணியை,கணி னிகளே மேற்கொள்கின்றன. நீங்கள், ரெஸ்யூமை பிரின்ட் வடிவில் (hard copy) அனுப்பினால், கீழ் கண் ட அம்சங்களை கவனத்தில் கொள்ள வும். அவை,
பிரின்ட் எடுத்த அசல் ரெஸ்யூமை அனுப்ப வேண்டும். எக்காரணம் கொ ணடும் அதன் நகலை(xerox) அனுப் பக்கூடாது. Times New Roman அல்லது Courier ஆகிய டைப் எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும். மேலு ம், எழுத்தின் அளவு 11 அல்லது 12 என்ற அளவில் இருக்க வேண்டும். அதே சமயம் bold facing -ஐ தவிர்க்க வேண்டும்.
உங்கள்படிப்பு உள்ளிட்ட விபரங்களைத் தெரி விக்கும் வகையில், அட்டவணை எதையும் பயன்படுத்த வேண்டாம்.
ரெஸ்யூமின் மேல் பகுதியில் உங்களின் பெயரை குறிப்பிட வேண்டும்.
அதேசமயம், உங்கள் ரெஸ்யூமை soft copy முறையி ல் வழங்கினால், குறிப்பிட்ட keyword-களை ரெஸ் யூம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், விண்ணப்பிக்கப்படும்  பதவிக்காக, வேலை வழங்கு நர்கள் அவற்றை எதிர்பார்க்கிறார்கள். அந்த key words, உங்கள் ஸ்பெஷலைசே ஷன் துறையுடன் தொடர்புடையவை.
கணினிகள் உங்கள் ரெஸ்யூமை ஸ்கிரீனிங் செய்கையில், அந்த வார்த்தைகளின் எண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட keywords-களை தேடும். எனவே, அவை இல்லை யெனில், உங்களின் ரெஸ்யூம் ஆரம்ப நிலையி லேயே  நிராகரிக்கப்பட்டுவிடும்.
சில நொடிகள்தான்…
பொதுவாக, உங்களின் ரெஸ்யூமை படிக்க, நேர்முகத் தேர்வாளர், அதிக பட்சமாக 10 முதல் 20 நிமிடங்களே எடுத்துக்கொள்வார். அந்த நேரத்திற்குள், அவரை ஈர்க்கும் விதமாக, நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு பொ ருத்தமாக, உங்களிடம் இருக்கும் தகுதிகளை highlight செய்து குறிப்பிட வேண் டும்.
ஒரே மாதிரி ரெஸ்யூமை, வேறுபட்ட நிறுவனங்களில், வேறுபட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கையில் வழங்கக்கூடாது. பல விஷயங்கள் ஒரே மாதிரியே இருந்தாலும், objective statement என்பது மாறும். குறிப்பிட்ட பணிக்கு தேவையான தகுதி நிலைகள் அதற்குள்தான் தெரிவிக்கப்பட்டிருக்கும். எனவே, பல மாதிரிகளில் ரெஸ்யூம்களை வடிவ மைத்து, அவற்றை pen drive மூலமாக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
தனித்தன்மை
வேலைதேடும் பல இளைஞர்கள், Microsoft Word -ன் ரெஸ்யூம் templatesமற்றும் wizards பயன்படுத்துகிறார்கள். இது தவறில்லை என்றாலும், உங் களின் சொந்த வடிவமைப்பை(design) பயன்படுத்துவதே சிறந்தது. ஏனெ னில், இதன்மூலம், நீங்கள் தனித்து அடையாளம் காணப்படுவீர்கள்.
அனுபவத்தை தெரிவித்தல் முறை
உங்களின் பழைய பணி அனுபவங்களை தெரிவிக்கையில்,
I was responsible for ———-
My duties included —————
I was incharge of ———
போன்ற நடைகளில் குறிப்பிடாதீர்கள். மாறாக,
My contributions were ———–
My accomplishments were ———
My interventions were ———–
போன்ற நடைகளில் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், வேலை வாய்ப்பு சந்தையில் உங்களுக்கான மதிப்பு உயரும்.
நேர்மறை அம்சங்கள்
உங்கள் ரெஸ்யூமில், நேர்மறை அம்சங்கள் இடம் பெறுவது முக்கியம். ஆனால், சிலருக்கு, தனது நேர்மறை விஷயமாக எதை குறிப்பிடுவது அல்லது எது இருக்கிறது என்ற சந்தேகமும், குழப்பமும் தோ ன்றும். அந்த நிலையில், உங்களுடன் முன்பு பணி யாற்றிய நபர்களிடம், நீங்கள் கண்டு ணர்ந்த குறைகளைப் பற்றி யோசி த்துப் பாருங்கள்.
அக்குறைகள் உங்களிடம் இல்லையெனில், அது வே உங்களின் நேர்மறை அம்சங்கள். எனவே, அவ ற்றை குறிப்பிட தயங்கவேண்டாம். உதாரணமாக,
Being punctual
Creative
Caring for minute details
Reliable
Following systems and procedure
Efficiency minded
Cost conscious
Waste control
போன்றவற்றை சொல்லலாம்.
முதல் நிலை ஆய்வு
உங்கள் ரெஸ்யூம் ஒரு நிறுவனத்தை அடைந்ததும், முதலில், மனிதவளத் துறையினரால்தான்(HR) பகுப்பாய்வு செய்யப்படும். அவர்கள், நிர்வாகப் பிரிவை சேர்ந்தவர்கள். அவர்க ளுக்கு, உங்களின் தொழில்துறையைப் பற்றிய நுணு க்கமான விஷயங்கள் தெரிந்திருக்கும் என்பதை சொல்ல முடியாது. எனவே, முடிந்தளவு, உங்களின் Professional jargon -களை பயன்படுத்த வேண்டாம்.
அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய, உலகளவில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளையே பயன்படுத்தவும். இதன்மூலம், உங்களின் ரெஸ்யூம் reader friendly என்பதை உறுதி செய்ய வேண்டும். அதே சமயம், உங்களின் பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் அனுபவங்களை குறிப்பிட தவறவே கூடாது.
இதை செய்யாதீர்கள்
உங்கள் ரெஸ்யூமில், Reference பற்றி குறிப்பிடாதீர் கள். நீங்கள் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பை பெற்றவுடன், அவர்களை , எதிர்கால தகவல் தொடர்புக்கு வைத்துக்கொள்ள முடியும். அதேசமயம், தேவைப்பட்டால், ரெபரன்ஸ் விபரம் அனுப்பப்படும் என்பதை ரெஸ்யூமி ல் இடம் இருந்தால் குறிப்பிடலாம். மேலும், ரெபரன்ஸ் நபர்களை தயாரா க வைத்திருப்பது அவசியம்.
இன்றைய நிலையில், பணிவழங்குநர்கள், நீங்கள் குறிப் பிட்ட ரெபரன்ஸ் நபர்களை மட்டுமே தொடர்பு கொள்வதி ல்லை. உங்களின் பழைய நிறுவ னங்கள் மற்றும் நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனங்களைக்கூட தொடர்பு கொள்கிறார்கள்.
எழுத்துப் பிழை
ரெஸ்யூம் தயாரானபிறகு, அதை எழுத்துப்பிழை சரிபார்க்க, கணினியின் உதவியை நாடுவதுபலரின் வழக்கமான உள்ளது. ஆனா ல், அதை மட்டுமே முழுமையாக நம்புவது தவறு. ஏனெ னில், பல கணினி அமைப்புகளில், அமெரிக்க ஆங்கில நடைமுறைதான் உள்ளது. நமக்கு அதிகம் தெரிந்தது பிரிட்டன் ஆங்கிலம். நமக்கு வேலை தரும் இந்திய நிறுவன அதிகாரிகளுக்கும் அப்படித்தான். அதே நேரத்தில், கணினியும் சில காரணங்க ளால், சில தவறுகளை சுட்டிக் காட்டாமல் விட்டுவிட வாய்ப்பு ண்டு.

எனவே, உங்கள் ரெஸ்யூமை hard copy எடுத்து, அதை ஒரு எழுத்துவிடாமல், ஒரு வரிவிடாமல் நீங்களே கவனமாக படி க்கவும். இதன்மூலம், எந்தவொரு தவறையும் எளிதாக கண்டுபிடிக்கலா ம். ஏனெனில், மனிதமூளையைவிட, வலிமையான கணினி என்று இந்த உலகில் எதுவுமில்லை. எதிர் காலத்திலும் இருக்க முடியாது. எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள், பணி வழங்கும் நிறுவனங் களுக்கு பிடிக்காத விஷயங்கள். உங்களின் ஒட்டு மொத்த மதிப்பை யே அது குலைத்துவிடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...