புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை முன்னிறுத்தி பிரசாரம் செய்தது.அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. எதிர்பார்த்தது போல் பிரதமராக மோடி பதவியேற்றார்.
மோடி பிரதமராக பொறுப்பற்றது நாள் முதல் இதுவரை பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் மோடியின் பிரசார யுக்தி பெருமளவு கை கொடுத்து வருகிறது. காங். கட்சியின் பிடியில் இருந்த அரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இன்று பா.ஜ. வசம் உள்ளன.
இந்நிலையில் தேசிய அளவில் மூன்றாவது அணிக்கு அடித்தளம் அமைக்க, தேசிய கட்சிகள் என கூறி வரும் சமாஜ்வாதி, (முலாயம்சிங் ) ராஷ்ட்ரீய ஜனதா தளம் (லாலு ), ஐக்கிய ஜனதா தளம் (சரதயாதவ், நிதிஷ்), மதச்சார்பற்ற ஜனதா தளம் (தேவகவுடா), மற்றும் சமாஜ்வாதி ஜனதா கட்சியின் கமல்மெர்கா, இந்திய தேசிய லோக் தள் கட்சியின் துஷ்யந்த் சவுதாலா ஆகிய தலைவர்கள் ஒன்றாக டில்லி
யில் கூடி ஆலோசித்துள்ளனர். இதில் பங்கேற்ற தலைவர்கள் எல்லாம் ஜனதா தளம் என்ற குடும்பத்தில் அங்கம் வகித்தவர்கள்
இன்னும் சொல்லப்போனால் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கினால் துவக்கப்பட்ட ஜனதா தள கட்சியை பல துண்டுகளாக கூறு போட்டவர்கள்.
இப்போது ஒன்றாக கூறி ஆலோசித்திருப்பது, அடுத்த ஆண்டு பீகார் மாநிலத்திற்கும், 2017-ல் உத்தரபிரதேச மாநிலத்திற்கும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதாலும் இனி வரப்போகும் சட்டசபைக்கான தேர்தல்களில் ஒன்றாக சேர்வது, பார்லி.யிலும் ஒன்றாக சேர்ந்து செயல்படுவது எனவும், கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளை கழற்றிவிட்டு தனியாக பலப்படுத்த பா.ஜ. முடிவு செய்திருப்பதால்,கழற்றிவிடப்படும் சிறிய கட்சிகளை இழுக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனதா தள கட்சி சிதறிப்போன வரலாறு:
மத்தியில் காங். அல்லாத ஆட்சியை அமைத்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜனதா கட்சியை துவக்கினார். அவரின் பிறந்த நாளன்று, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் , 1988-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி , லோக்தள், காங்கிரஸ் (எஸ்), ஜான் மோர்சா ஆகிய 3 கட்சிகளை இணைத்து ஜனதா தளம் என்ற கட்சியை துவக்கினார்.
*இக்கட்சியில் இருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், கட்சியை உடைத்துவிட்டு, 1990-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி சமாஜ்வாடி ஜனதா கட்சி என்ற கட்சியை துவக்கினார்.
*ஜனதா தளத்தின் உ.பி. மாநிலத்தை கவனித்து வந்த முலாயம்சிங் யாதவ் ,அக்கட்சியை உடைத்துவிட்டு, சமாஜ்வாதி கட்சியை 1992-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி துவக்கினார்.
*இவரை தொடர்ந்து, 1994-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதிஷ்குமார் இணைந்து சமதா கட்சியை துவக்கினர்.
* 1997-ம் ஆண்டு ஜுலை மாதம் 7-ம் தேதி பீகாரில், ராஷ்ட்ரீய ஜனதா தள் என்ற கட்சியை லாலு பிரசாத் யாதவ் துவக்கினார்.
* அரியானாவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா 1998-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி இந்திய தேசிய லோக் தள் என்ற கட்சியை துவக்கினார்.
* 1999-ம் ஆண்டு ஜுலை மாதம் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற கட்சியை முன்னாள் பிரதமர் தேவகவுடா துவக்கினார்.
*பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் என்ற கட்சி அம்மாநில முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் 2003-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி துவக்கினார்.
இப்படி தோன்றிய ஜனதா தள கட்சி பல துண்டுகளாக சிதறி, தனித்தனியாக ஆவர்த்தனம் செய்த கட்சி தலைவர்கள் இப்போது, பா.ஜ.வினை எதிர்த்து இப்போது ஒன்று கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment