நமக்கே அறியாமல் நாம் பொதுவாக பயன்படுத்தும் சில விசேஷமான பொருட்களின் துவக்கம் NASAவில் உள்ளது, கிட்டத்தட்ட 6300 கண்டுபிடிப்பின் காப்புரிமைப் பட்டயம் பெற்றிருக்கிறது. அதில் 1800 கண்டுபிடிப்புகள் Spin Off Technology யாகப் பயன்படுகிறது.
அப்படிப்பட்ட பயன்பாட்டின் பொருட்களில் சிலவற்றை பார்போம்…..
தொடுப்பில்லா கருவிகள் (CORDLESS TOOLS):
நீங்கள் வீட்டில் உபயோகிக்கும் தொடுப்பில்லா Cordless Drillerஉருவாக உதவியது,NASA நிலவின் கற்கள் மற்றும் பாறைகளின் துண்டுகள் எடுக்கச் செய்த முயற்சி தான்.
1960 ல் APPOLLO விண்வெளி ஓடத்தை வானில் செலுத்தும் ஏற்பாட்டின் பொழுது அங்கு நிலவின் மேற்பரப்பை ஆழமாக தோண்டக்கூடியசிறிய மற்றும் குறைந்த எடையிலான கருவி தேவைப்பட்டது, அதற்காக NASAவும்BLACK & DECKER கம்பெனி இணைந்து BATTERY யில் இயங்க கூடிய காந்த இயந்திரபோரியை உருவாக்கின. இதுவே பிற்காலத்தில் பல தொடுப்பில்லா கருவுகளின் கண்டுபிடிப்புக்கு மூலதனம்.
அடுத்ததாக நாம் பார்ப்பது காது வெப்பமானி (EAR THERMOMETER):
எல்லா வீட்டிலும் முக்கியமாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் நாம் பார்க்கும் பொருள் பாதரச வெப்பமானி….
பாதரச வெப்பமானி கொண்டு காச்சல்அளவு பார்ப்பது சுகாதாரமற்ற மற்றும் பாதரசதில் நச்சுத்தன்மை உள்ளதால் நாக்கின் அடியில் வைப்பது அவ்வளவு நல்லதல்ல, இப்பிரச்சினையை போக்கியது NASAவின் கண்டுபிடிப்பு!
நட்சத்திரங்களின் வெப்பநிலையை அறிந்து கொள்ள பயன்படுத்திய INFRARED வெப்பமானியை உபயோகித்து 1991ல் காது வெப்பமானியை NASAவின் JET PROPULSION LAB உடன் இணைந்து கண்டுபிடித்து DIATEK.
இது சில நொடிகளில் நமது காதின் வெப்பநிலையை அறிந்து காச்சல் அளவை தெரிவிக்கிறது.
மூன்றாவதாக நம்மில் பலர் பயன்படுத்தும் மூக்கு கண்ணாடி (EYE GLASSES):
கண்ணாடியிலான மூக்கு கண்ணாடியை விட பிளாஸ்டிக் மிகவும் விலை குறைவு , எடை குறைவு மற்றும் பாதுக்காப்பானது, ஆனால் பிளாஸ்டிக்கில் சீக்கிரம் கீறல் விழ வாய்ப்பு உள்ளது…
கீறல் விழாமல் இருக்கும் மேற்பூச்சுடன் உள்ளபிளாஸ்டிக் மூக்கு கண்ணாடி உருவானதின் பின்னணியில் NASA தனது விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் தலைக்கவசம் மாசு படியாமல் தெளிவாக இருக்க கண்டுபிடித்த CARBON மற்றும் SILICON கலந்து உருவான மேற்பூச்சு. இந்தப் பூச்சு கொண்ட மூக்கு கண்ணாடி 10 மடங்கு SCRATCH RESISTENT ஆகும்.
கடைசியாக நாம் பார்ப்பது போம் மெத்தைகள்(OPEN CELL PLASTIC FOAM):
நம்மில்நிறைய பேர் நிம்மதியாக தூங்குவதற்கு NASAஒரு காரணம்…..
விமானம்தரையிறங்குவதில் ஏற்படும் அதிர்வுகளை குறைக்க உருவான விமான பயணி சீட்டுகள் OPEN CELL POLYURETHANE-SILICON பிளாஸ்டிகினால் உருவாக்கப்பட்டுள்ளது. இது தன் இயல்புநிலையை விட 10 மடங்கு அழுத்தபட்டாலும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும்.இது விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. தற்பொழுது இது விமானம் , கார், இரு சக்கர வண்டிகளில் பயன்படுத்தபடுகிறது.
விண்வெளியில் மட்டும் அல்ல நமது வீட்டிலும் அற்புதங்கள் செய்கின்ற NASAவுக்கு நமது நன்றிகள்……
No comments:
Post a Comment