ஐன்ஸ்டீன், தனது UNIFIED CONCEPT THEORYஎன்ற கோட்பாட்டை அறிவித்து, அது உலகம் முழுதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சமயம் நடந்த நிகழ்ச்சி.
ஐன்ஸ்டீன் நியூயார்க்கில் தனது நண்பரின் வீட்டில்2,3 நாட்கள் தங்கி இருந்தார். பிறகு அவர் தன் சொந்த ஊரான பிரின்ஸ்டனுக்குப் போனார்.
அவர் சென்றதும், அவர் தங்கி இருந்த அறையை வேலைக்காரப் பெண்மணி பெறுக்கப் போனார் . அறை சுவற்றைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் சுவர் பூராவும் ஏதேதோ எண்கள் எழுதப்பட்டிருந்தன. அத்துடன் குறிப்புகளும் எழுதப்பட்டிருந்தன. ஐன்ஸ்டீன் ஏதோ கிறுக்கித்தள்ளி இருந்தார்.
வேலைக்காரப் பெண்மணி தன் எஜமானரைக் கூப்பிட்டுக் காண்பித்தார். எல்லாம் கணித சூத்திரங்களாக இருந்தன.
ஐன்ஸ்டீனின் நண்பர் உடனே இரண்டு பேருக்குப் போன் செய்தார். முதலில் ஐன்ஸ்டீனுக்குப் போன் பண்ணி, அந்த சுவரில் எழுதி இருப்பதைப் பற்றிக் கேட்டார். " ஓ, அவையெல்லாம் என் தியரி தொடர்பான சூத்திரங்கள்”‘என்றார்.
‘அப்படியா..சரி” என்று சொல்லிவிட்டு, போனை வைத்து விட்டார்அடுத்து,அவர் பெரிய கண்ணாடி கடைக்குப் போன் பண்ணினார். ஐன்ஸ்டீன் ‘கிறுக்கிய’ கணித சூத்திரங்கள் பாதுகாப்பாக இருக்க, சுவர் அளவு கண்ணடி சட்டம் போட ஆர்டர் கொடுத்தார்!
* * *
ஒரு சமயம் ஐன்ஸ்டீனுக்கு ஒரு கடிதம் வந்தது. “ நீங்கள் மிகச் சிறந்த சிந்தனையாளர் . உங்களுடைய மிகச் சிறந்த ஆறு எண்ணங்களை, எங்கள் கமிட்டிக்குத் தெரியப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்” என்று கேட்டிருந்தார்கள்.
இதற்கு ஐன்ஸ்டீன் எழுதிய ஆறு வார்த்தைப் பதில்: கடவுள், தேசம், மனைவி, கணிதம், மனித சமுதாயம்,உலக அமைதி!”

No comments:
Post a Comment