Wednesday, November 26, 2014

கருணாநிதி சட்டசபைக்கு வர வேண்டும்: முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு

'சட்டசபைக்கு வந்து பேசக்கூடிய தைரியம், கருணாநிதிக்கு உள்ளது என்றால், அவர் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும், சட்டசபை கூட்டத் தொடருக்கு வந்து, தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:



சட்டசபையை கூட்டாதது, தமக்கு வருத்தம் அளிப்பதாக, கருணாநிதி கூறியதற்கு, கடந்த 22ம் தேதி, விரிவான அறிக்கை வெளியிட்டேன். ஆனால், கருணாநிதி கேள்வி - பதில் அறிக்கையில், நான் பிதற்றியிருப்பதாக, தரம் தாழ்ந்து விமர்சித்ததோடு, சட்டசபையை கூட்ட, நான் பதற்றப்படுவதாக தெரிவித்திருந்தார். எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில், ஜெயலலிதா சட்டசபைக்கு வந்து பேசும்போது, தி.மு.க., உறுப்பினர்கள் கட்டுப்பாடு காத்து, அமைதியாக இருந்து, உரையை கேட்டதாகவும், அப்போது தி.மு.க., உறுப்பினர்கள் கடைபிடித்த கண்ணியத்தை போல, இப்போது அ.தி.மு.க., உறுப்பினர்கள் நிச்சயம் கடைபிடிப்பார்கள் என்ற உறுதிமொழியை அளித்தால், வருவதற்கு தாம் தயாராக இருப்பதாக, கருணாநிதி தெரிவித்துள்ளார். தி.மு.க., அரசு நடந்தபோதெல்லாம், அமைச்சர்களும், தி.மு.க., உறுப்பினர்களும், நடந்து கொண்ட இழி செயல்களைத்தான், கண்ணியம் என கருணாநிதி குறிப்பிடுவாரேயானால், அதுபோன்று நாங்களும், இழிவாக நடந்து கொள்வோம் என்ற உறுதிமொழியை, நிச்சயம் எங்களால் அளிக்க இயலாது என்பதை, கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, சட்டசபையில், தமிழக அரசை விமர்சிப்பதற்கு, ஏதேனும் பொருள் இருக்கிறது என, கருணாநிதி கருதினால், எம்.எல்.ஏ., என்ற முறையில், கருணாநிதி, டிசம்பர் 4ம் தேதி கூட்டப்பட்டுள்ள, சட்டசபை கூட்டத் தொடருக்கு வந்து, தனது ஜனநயாக கடமையை ஆற்ற வேண்டும். இவ்வாறு, பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


சட்டசபைக்கு செல்ல கருணாநிதி முடிவு?



அடுத்த மாதம் 4ம்தேதி, தமிழக சட்டசபை கூட்டம் கூடுகிறது. இதில், தி.மு.க., தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு, மக்கள் பிரச்னைகளை பேச திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து ஆலோசிக்க, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், வரும் 3ம் தேதி, அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயலலிதா, முதல்வர் பதவியை இழந்த பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், இதில் கலந்து கொள்ள, கருணாநிதி முடிவு செய்துள்ளார். இதற்கிடையில், கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளித்த முதல்வர் பன்னீர்செல்வம் 'சட்டசபைக்கு வந்து பேசக்கூடிய தைரியம், உள்ளது என்றால், டிசம்பர் 4ம் தேதி நடைபெறும், சட்டசபை கூட்டத் தொடருக்கு வந்து, கருணாநிதி ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். இதனால், சட்டசபை கூட்டத் தொடரில், பங்கேற்பது என, கருணாநிதி முடிவெடுத்துள்ளார். அதற்காக, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டத்தை வரும் 3ம் தேதி கூட்டியிருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...