கண்கள் சிவப்பு நிறம் ஆகிவிட்டது என்றாலே மெட்ராஸ் ஐ என்று அர்த்தமில்லை என்று கண் சிறப்பு மருத்துவர் குமார் கூறுகிறார்.
எப்போதுமே ஐப்பசி மாதத்தில்தான் மெட்ராஸ் ஐ எனப்படும் ஒருவகை வைரஸ் கண்களைத் தாக்கி, மூன்று நாட்கள் பாடாய்ப் படுத்தி எடுத்துவிடும். இதற்கு உடனடித் தீர்வு என்று ஒன்றுமே இல்லை என்றாலும் இப்போதெல்லாம் மருத்துவர்கள் ஓரளவுக்காவது,கண்களில் ஒதுங்கும் அழுக்குகள், மற்றும் வடியும் நீரைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை செய்கிறார்கள். அதோடு கண்களில் ஏற்படும் அரிப்பையும் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்து விடுகிறார்கள் என்று கண் சிறப்பு மருத்துவ நிபுணர் குமார் கூறுகிறார்.
இவர் மெட்ராஸ் ஐ என்று பெயர் வந்தது எதனால் என்று கேட்டபோது,1970ம் ஆண்டு கண்களில் சிவப்பு ஏற்பட்டு, அரிப்பும் கூடவே வந்து, கண்ணீரும் எப்போதும் வழிந்துக் கொண்டு இருப்பதுபோல ஒரு வைரஸ் மெட்ராஸ் மக்களைத் தாக்கியதாம், கூடவே கண்களின் ஓரத்தில் அழுக்குகளும் தேங்கி கொண்டே இருந்ததாம். அப்போதுதான் இது புதுவித வைரஸ், மெட்ராசில் மட்டுமே பரவியுள்ளது என்று கண்டறியப்பட்டு, அதற்கு மருத்துவர்கள் மெட்ராஸ் ஐ என்று பெயர் சூட்டினார்களாம்.
டாக்டர் குமார் மேலும் கூறுகையில், மெட்ராஸ் ஐ இப்போது அனைத்து ஊர்களிலும் பரவிவிட்டாலும் பெயர் மற்றும் மாற்றம் பெறவில்லை. எனினும் கண் சிவந்தால் மெட்ராஸ் ஐ என்று அர்த்தம் இல்லை. வேறு ஏதேனும் கூட இருக்கலாம், எனவே கண் சிவந்தால் மருத்துவரிடம் செல்வதே சிறந்தது. அத்து பார்மசியில் தாங்களே ஐ டிராப்ஸ் வாங்கிப் போட்டுக் கொள்வதால் கண்களுக்கு பெரும் ஆபத்து வந்து ஒரு கண்கள் பறிபோகக் கூடும். அல்லது உயிருக்கேக்கூட ஆபத்து விளைய நேரும் என்று எச்சரித்து இருக்கிறார்.
இந்த வகை வைரசை உடனடியாக குறைத்து மெட்ராஸ் ஐயை முழுவதுமாக குணப்படுத்த, கண்களில் ஒதுங்கும் அழுக்குகளை சேகரித்து அதிலிருக்கும் வைரசைப் பிரித்தெடுத்து பெங்களூருவுக்கு ஆய்வுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் நடைப்பெற்றுக் கொண்டுள்ளன என்றும் குமார் கூறியுள்ளார். மெட்ராஸ் ஐ என்றால் உடனடியாக டாக்ரை பாருங்கள். அரிப்புக் குறைய வேண்டும் என்றால் சுத்தமான நீரை இதமான சூட்டில் சுத்தமான வெள்ளைத் துணியில் நனைத்து வெந்நீரில் அடிக்கடி ஒத்தடம் கொடுத்து வாருங்கள். கண்களைக் கூச வைக்காத கறுப்புக் கண்ணாடி கண் மருத்துவ மனைகளில் விற்கும். அந்தக் கண்ணாடியை மட்டும் வாங்கி அணிந்துக் கொள்ளுங்கள்.
பிறரை உங்கள் சிவந்த கண்களால் பார்ப்பதால் மட்டுமே பார்ப்பவர்களுக்கு மெட்ராஸ் ஐ வந்துவிடாது. அவர்கள் கண்களை கசக்கிவிட்டு, அதே கையோடு உங்களைத் தொடும்போதோ, அல்லது உங்கள் பொருட்களை அவர்கள் பயன்படுத்தி திருப்பி உங்களிடம் தரும்போதோ இப்படித்தான் மெட்ராஸ் ஐ வைரஸ் மற்றவர்களையும் உடனடியாகத் தாக்கி வீட்டில் அனைவருக்கும், ஊரில் அனைவருக்கும் என்று மெட்ராஸ் ஐ வந்துவிடுகிறது. எனவே, மிக எச்சரிக்கையாக இருங்கள் என்று டாக்டர் குமார் அறிவுறுத்துகிறார்.
No comments:
Post a Comment