Thursday, November 13, 2014

ஏடிஎம் கார்டு மூலம் நூதன திருட்டு..! உண்மை சம்பவம்..!

டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் தான் பர்சேஸ் செய்கிறேன் என் பணம் திருடுபோக வாய்ப்பில்லை என்பவர்களை கடந்த சனிக்கிழமை தின்டிவனத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. போலி ஆப்ஸ்கள் மற்றும் கார்டு குளோனிங் முறையில் தின்டிவனத்தை சேர்ந்த ஒருவர் தன் பணத்தை தவறவிட்டிருக்கிறார்.இந்த உண்மை சம்பவம் எடிஎம் கார்டு பயன்படுத்தி பர்சேஸ் செய்பவர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சிகரமான சம்பவமாக தான் இருக்கும்.

நாணயம் விகடனை இன்று தொலைபேசியில் அழைத்த வாசகர் ஒருவர் திண்டிவனத்தில் கடந்த சனிக்கிழமையன்று அவர் வங்கி கணக்கிலிருந்த பணம் 39000 ரூபாய் திருடப்பட்டதாக தெரிவித்தார். இது குறித்து வங்கியில் புகார் செய்துள்ளதாகவும், சைபர் க்ரைம் பிரிவில் எப்படி புகார் செய்வது போன்ற வழிமுறைகள் குறித்தும் கேட்டார். அவருக்கு நடந்த சம்பவம் உண்மையில் சற்று அதிர்ச்சிகரமானது தான்.

அவரது டெபிட்கார்டை எங்குமே சமீபத்தில் பயன்படுத்தவில்லை. ஆனால் சனிக்கிழமை அவரது கணக்கிலிருந்து 39000 ரூபாய்க்கு மும்பையில் உள்ள ரெடிமேட் ஷோரூம் ஒன்றில் இவரது கார்டு மூலம் பர்சேஸ் செய்யப்பட்டுள்ளது. திண்டிவனத்தில் இருக்கும் நபரது டெபிட் கார்டு எப்படி மும்பையில் இயங்குகிறது என்று கேட்டால் அவரது டெபிட் கார்டு திருடு போகவும் இல்லை ஆனால் அதே போன ஒரு போலி கார்டை தயார் செய்து நூதன முறையில் திருடி இருக்கிறார் அந்த நபர்.


நீங்கள் உங்கள் கார்டை வேறு எங்காவது பயன்படுத்தும் போது க்ளோன் செய்யப்பட்டதா என்று கேட்டால் அவருக்கு அது பற்றிய விவரமும் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் அவர் ஒரு ஆப்ஸை டவுன்லோட் செய்திருக்கிறார். அதில் பிரபல வங்கியின் பாதுகாப்பான பணப்பரிவர்த்தனை ஆப்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. இவரும் அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஆப்ஸ் தானே என்று தகவல்களை அளித்துள்ளார். ஆனால் அது தற்போது பாதுகாப்பு குறைந்த போலி ஆப்ஸாக இருக்குமோ அதன் மூலம் தகவல் திருடப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது என்றார்.

சமீபத்தில் இதுபோன்ற ஆப்ஸ்களாலும், டெபிட் கார்ட் வைத்திருப்பவர் எங்காவது டெபிட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது ஸ்கிம்மர் கருவி மூலம் உங்களது தகவல்களை திருடும் முறை அதிகமாகியுள்ளது. உங்கள் கணக்கிலிருந்து பனத்தை திருட அல்லது போலி கார்டை உருவாக்க அவர்களுக்கு அதிகம்  தேவைப்படுவது. உங்கள் டெபிட் அல்ல்து கிரெடிட் கார்டு எண்ணும் அதன் பின் உள்ள CVV எண் மற்றும் உங்கள் பெயர் இவ்வளவு தான் இது இருந்தால் உங்கள் கார்டு போன்ற போலி கார்டை உருவாக்க முடியும் என்கின்றனர் சைபர் செக்கியூரிட்டி வல்லுனர்கள்.

இது போன்ற போலி ஆப்ஸ்களால் பாதிக்கப்படாமல் இருக்க வங்கிக்கே சென்று உங்கள் வங்கிக்கு என்று ஆப்ஸ் உள்ளதா என கேட்டு அவர்கள் தரும் ஆப்ஸ் மூலமாக பணபர்வத்தை செய்யுங்கள். பொது இடங்களில் கார்டை உபயோகிக்கும் போது அதனை உங்கள் கண் எதிரே மட்டும் பயன்படுத்த அனுமதியுங்கள். மேலும் அதில் ஏதேனும் கருவி இணைக்கப்பட்டுள்ளதா? என பார்த்து ஸ்வைப் செய்யுங்கள்.போலி ஆப்ஸ்களாலும் மோசடி கும்பலாலும் உங்கள் பணத்தை இழக்க நேரிட்டால் உடனடியாக சைபர் க்ரைம் துறையை அணுகி புகார் தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...