Sunday, November 9, 2014

ஆதார் அட்டை இருந்தால்ஏர்போர்ட்டில் நுழைவது சுலபம்




மத்திய அரசின் அனைத்து மானிய பலன்களை எளிதில் பெறுவதற்கும், மொபைல் போன், 'சிம்' கார்டு பெறுவதற்கும், ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ள முன்வந்துள்ள மத்திய அரசு, அடுத்த கட்டமாக, ஆதார் அடையாள அட்டை மூலம், விமான நிலையங்களில் நுழைவதை எளிதாக்க உள்ளது.
விமானங்களில் பயணம் செய்ய, விமான நிலையங்களில் நுழைவதை, ஆதார் அட்டை எளிதாக்க உள்ளது. விமான நிலைய நுழைவாயில்களில் உள்ள, ஸ்கேனர் கருவியில், ஆதார் அடையாள அட்டை வைத்துள்ள நபர், தன் கை பெருவிரல் ரேகையை பதித்ததும், அவரின் புகைப்படம், முகவரி போன்ற அனைத்து தகவல்களும், விமான நிலைய நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள, தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் முன் இருக்கும் கம்ப்யூட்டரில் தெரிந்து விடும்.

அதில் உள்ள விவரங்களை சரி பார்த்த, அடுத்த நொடியில், விமான நிலையத்திற்குள் அந்த பயணி சென்று விடலாம். இதற்காக, விமான நிலையங்களின் சர்வர்கள், பெங்களூருவில் உள்ள ஆதார் அடையாள அட்டை அமைப்பின் தலைமையக சர்வர்களுடன் இணைக்கப்படும்.
பெங்களூரு சர்வதேச விமான நிலையம் உட்பட, சில விமான நிலையங்களில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல், இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்கள், பிற சான்றுகளை காண்பித்து, விமான நிலையங்களுக்குள் செல்லும் இப்போதைய நடைமுறையும் தொடரும்.

முந்தைய அரசின் திட்டம்:முந்தைய, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டங்களில் ஒன்றான, ஆதார் அடையாள அட்டை திட்டத்திற்கு, இப்போதைய, பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி வரவேற்பு அளித்து உள்ளது.
இதையடுத்து, மத்திய அரசின் மானிய திட்டங்கள் உட்பட பல திட்டங்களுக்கான அடையாளமாக, ஆதாரமாக, இந்த அட்டையை பயன்படுத்திக் கொள்ள, அரசு முன்வந்துள்ளது.

கருத்து

1. இந்த காங்கிரஸ் ஆட்சிதான் இலங்கை தமிழர்களுக்கும் பங்களாதேஷ்காரர்களுக்கும் ஆடார் அட்டையை கொடுத்திருக்கிறார்களே அப்போ இந்திய குடிமகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனா ஆதார் இருந்தா போருமா ?

2. அலைய விடாமல் ஆதார் அட்டையை அனைவருக்கும் கொடுக்கப்பாருங்க. ஏற்கெனவே ரேசன் கார்டுக்கும் வாக்காளர் அடையாள அட்டைக்கும் அலைந்து தி்ரிந்து சோர்ந்து போயுள்ளார்கள். இதையாவது எந்த குழப்பமும் இல்லாமல் தரப் பாருங்கள்.

3. ஆதார் அட்டையை பயன்படுத்தி , பாஸ் போர்ட் வழங்கவும் அரசு பரிசீலிக்கலாம் ...இதனால் பாஸ் போர்ட் பெற எளிய வழிமுறை பிறக்கும்.பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு ஆதார் அட்டையை ஆதாரமாக ஏற்றுக் கொண்டு, போலிஸ் வெரிபிகேஷனை தவிர்க்கலாம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...