Friday, November 28, 2014

சைபீரியாவில் பனியில் உறைந்து போன விமானத்தை கூட்டாக இணைந்து தள்ளி அதில் பிரயாணித்த பயணிகள்!

இன்று புதன்கிழமை சுமார் 74 பயணிகளுடன் மாஸ்கோவுக்கு வடகிழக்கே சைபீரிய நகரான கிரஸ்னோயார்ஸ்க் இற்கு செல்லவிருந்த சைபீரியன் ஏர்லைன்ஸின் கட்டெக்காவியா விமானம் இகர்க்கா விமான நிலையத்தில் ஓடு தளத்தில் சுமார் 24 மணி நேரமாகக் காத்திருந்த போது அதன் பைலட்டுக்கள் பார்க்கிங் பிரேக்கை எடுக்கத் தவறிய காரணத்தால் Break pad கள் பனியில் நன்கு உறைந்திருந்தன.
இதனால் வேறு வழியின்றி விமானத்தினை இயங்கு நிலைக்குக் கொண்டு வருவதற்காக உள்ளே இருந்த பயணிகள் வெளியே இறங்கி மைனஸ் 52 டிகிரி உறைநிலையையும் பொருட்ப் படுத்தாது அதனைத் தள்ளத் தொடங்கினர். விமானம் திருப்பக் கூடிய நிலையை அடைந்து அதனைத் தாங்கிய டிரக் இனை மீட்கக் கூடிய வசதி ஏற்பட்ட பின் அதில் ஏறிய பயணிகள் பின்னர் எந்த வித சிரமும் இன்றி ஆசுவாசமாகப் பறந்தனர்.
வெளியே ஆளை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாது சீக்கிரமாக வீடு திரும்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக பயணிகள் அனைவரும் இணைந்து மேற்கொண்ட இந்த முயற்சி YouTube இல் வெளியாகி மிகவும் பிரசித்தமடைந்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...