Thursday, November 27, 2014

கறுப்பு பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் பிரச்னையில்லை: அருண் ஜெட்லி தகவல்



 கறுப்பு பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் எந்தவித பிரச்னையில்லை என கூறியுள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி, எப்போது வெளியிடுவது என்பதில் தான் பிரச்னை என கூறினார். 
பல்வேறு தொடர் அமளி, அவை ஒத்திவைப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கறுப்பு பணம் விவகாரம் தொடர்பான விவாதம் பிற்பகலில் இருஅவைகளிலும் துவங்கியது. அப்போது, பா.ஜ., அரசிற்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் சரமாரி கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தனர். ராஜ்யசபாவில் பேசிய காங்கிரஸ் எம்.பி., ஆனந்த் சர்மா, பாபா ராம்தேவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல விவகாரங்களில், பல முறை அவரை உதாரணம் காட்டி பேசினார்.

லோக்சபாவில் கறுப்பு பணம் மீதான விவாதத்தை துவக்கி வைத்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுங்கள். கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வருவது தொடர்பாக எத்தனை நாடுகளுடன் பிரதமர் பேசி உள்ளார் என்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும். எங்களின் நடவடிக்கை குறித்து கேள்வி கேட்ட பா.ஜ., இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது. 100 நாட்களில் கறுப்பு பணத்தை கொண்டு வருவதாக கூறினார்களே, அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகியும் இன்னும் கறுப்பு பணத்தை திரும்பக் கொண்டு வர நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.


ராஜ்யசபாவில் பேசிய காங்கிரஸ் எம்.பி., ஆனந்த் சர்மா, வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைளையும் முந்தைய அரசு முறையாக எடுத்தது. ஒரு பொறுப்பான அரசு வெளிநாட்டு வங்கிக் கணக்கு குறித்த சரியான புள்ளிவிபரங்களை பெற்று, அது தொடர்பாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். உலகம் முழுவதும் சுமார் 40 முதல் 50 நாடுகளில் வரிஏய்ப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு முன், கறுப்பு பண விவகாரத்தில் காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பா.ஜ., குற்றம்சாட்டி வந்தது. இப்போது அவர்களும் அதையே தான் செய்கிறார்கள் என குற்றம்சாட்டி உள்ளார். இந்த விவாதத்தின் நிறைவாக, மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட உள்ளது.
காங்கிரசின் குற்றச்சாட்டுக்களால் இரு அவைகளிலும் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரசும், ஐதராபாத் விமானநிலையம் பெயர் மாற்ற விவகாரம் தொடர்பாக காங்கிரசும் ராஜ்யசபாவில், சபாநாயகர் இருக்கை முன் வந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். 

இதன் பின்னர் ராஜ்யசபாவில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிதேர்தல் விவாதமாக இருந்த கறுப்பு பண விவகாரத்தை , பார்லியில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டுள்ளோம். ஐ.மு., அரசிடமிருந்து ஏராளமான பணிகளை தற்போதைய அரசு செய்கிறது. கறுப்பு பணத்தை திருப்பி கொண்டு வர வேண்டும் என விரும்புகிறோம். இது அனைவரின் விருப்பமாக உள்ளது. இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் எந்த உத்தரவும் பிறப்பிப்பதை ஐ.மு., அரசு விரும்பவில்லை. சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது என்பது அரசின் முதல் முடிவு. சுவிஸ் வங்கியில் உள்ள 627 வங்கிக்கணக்குகள், ஜெர்மனி மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஐ.மு., தே.ஜ., இடையே உள்ள மோதலை விட கறுப்பு பண விவகாரம் முக்கியம். கறுப்பு பணம் பதுக்கியவர்களின் விபரங்களை வெளியிடப்ப்பட்டவுடன், அரசு உடனடியாக செயல்பட்டது. தற்போது, யாரும் கறுப்பு பணத்தை நேரடியாக கொண்டு செல்வதில்லை ஹவாலா மூலமும், மற்ற வழிகளிலும் கொண்டு செல்கின்றனர். இது திருடப்பட்ட பணம் என்பதால் சுவிஸ் அரசு விபரங்களை தர மறுக்கிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் நமக்கு உதவும். 427 வங்கிக்கணக்குகள் குறித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 250 பேர் வெளிநாட்டில் வங்கிக்கணக்கு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது கறுப்பு பணம் வெளியிடுவதா என்பதில் பிரச்னை இல்லை. எப்போது வெளியிட வேண்டும் என்பதில் தான் பிரச்னை. கறுப்பு பணம் இந்தியாவில் பதுக்கப்பட்டிருந்தால், அது இந்தியாவிற்கு கிடைத்திருக்கும். ஆனால், வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு அரசும் அதிகாரிகளை வெளிநாட்டு அதிகாரிகளை விசாரிப்பதை அனுமதிக்காது. கறுப்பு பணம் பதுக்கியவர்கள் குறித்த விபரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளோம். வெளிநாட்டு ஒப்பந்தத்தை நாம் மீறவில்லை என்பதை நாம் உறுதி செய்துள்ளோம். எந்தவித ஆதாரமும் இல்லாமல், கறுப்பு பணம் பதுக்கியவர்களை வெளிப்படையாக அறிவித்தால், அந்த நாள் மிகவும் திரில்லக இருக்கும் என கூறினார்.
ஜெட்லியின் பேச்சில் திருப்தியில்லை எனக்கூறி காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் ராஜ்யசபாவிலிருந்து வெளிநடப்பு செய்தன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...