Tuesday, November 18, 2014

தெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்: அணுகுண்டு

என்ன, திடீரென்று அணுகுண்டைக் கையில்எடுத்துக் கொண்டீர்கள் என்று யாராவது கேட்கும் முன் நானே கூறிவிடுகிறேன்.
அணுகுண்டு பற்றிய சில தகவல்கள் என் நினைவுக்கு வந்ததன் காரணம் சமீபத்திய மூன்று விஷயங்கள் . 
  1.         ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் முதலில் 1945-ல் ஹிரோஷிமாவில் போடப்பட்டது. 
2.         ஆகஸ்ட் 9-ம் தேதி (1945)  இரண்டாவது அணுகுண்டு   நாகசாகியில் போடப்பட்டது
3.         நாகசாகியில் அணுகுண்டைப் போட்ட   விமானப்படை வீரர்களில்   ஒருவரான. THEODORE "DUTCH" VAN KIRK -NAVIGATOR  கடந்த மாதம் ஜுலை 28’ம் தேதி, தனது 93-வது வயதில் அமெரிக்காவில் காலமானார்.  (மற்றவர்கள் யாவரும் இவருக்கு முன்பே காலமாகி விட்டார்கள்.)

 
இனி அணுகுண்டு  பற்றி சில தகவல்கள்.
 1996’ ஆண்டு அமெரிக்கா செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அப்போது, வாஷிங்டன் நகருக்குப் போய், சுற்றிப்  பார்த்தேன். பிரபல ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகத்தில் ஒரு அரை நாள் செலவழித்தேன். அங்கு ஒரு கூடத்தில் ஒரு விமானத்தின் மூக்குப்பகுதி மட்டும் வைக்கப்பட்டிருந்தது.
அதுதான்  அணுகுண்டைப்  போட்ட, விமானத்தின் மூக்குப்பகுதி என்று ’போர்ட்’ வைத்திருந்தார்கள். அதன் பின்னால், சுவரில் 10, 12 அடி  அளவு பெரிய புகைப்படம் இருந்தது. அதில் 12 விமானப்படை வீரர்கள், ஒரு ராணுவ விமானத்தின் முன் நின்று கொண்டிருந்தார்கள்.
அணுகுண்டு LITTLE BOY

*அணுகுண்டு போட்ட விமானத்தின் பெயர்: ENOLA GAY ( இந்த வித்தியாசமான பெயரின் பின்னே சுவையான விவரம் இருக்கிறது. அது பின்னால்!)

*1970 வருஷ வாக்கில் ஒரு TIME  இதழில்  ‘25வருஷத்திற்குப் பிறகு’ என்கிற மாதிரி தலைப்பில் ஒரு குட்டிக் கட்டுரை வெளிவந்தது. அணுகுண்டு போட்ட விமானிகளைத் தேடிக் கண்டுபிடித்து, பேட்டி கண்டு  எழுதி இருந்தார்கள். அப்போது ஒரு சில வீரர்கள், தாங்கள் போட்ட  அணுகுண்டு  செய்த பயங்கர அழிவைப் பார்த்த நினைவால் மனப்பிரமை பிடித்தவர்கள் போல் ஆகிவிட்டார்கள்  என்கிற மாதிரி எழுதி இருந்தது. இந்தத் தகவலை தினமணி கதிரில் துணுக்காக எழுதி இருந்தேன். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...