சமீபத்தில் Facebook இல் அதிக லைக்ஸ் பெற்ற 50 நகரங்களின் பக்கப் பட்டியல் இணையத்தில் வெளியானது. இதில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தின் பக்கம் 15 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் இனைப் பெற்ரு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஃபிரான்ஸின் பாரிஸ் நகரம் 9 மில்லியன் லைக்ஸ்களுடன் 2 ஆம் இடத்தையும் இலண்டன் 8.5 மில்லியன் லைக்ஸ்களுடன் 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
இப்பட்டியலில் அதிக லைக்ஸ்களைப் பெற்ற முதல் 10 நகரங்களில் 4 வட அமெரிக்க நகரங்களும் 2 தென் அமெரிக்க நகரங்களும் 4 ஐரோப்பிய நகரங்களும் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 4 ஆவது இடத்தினை 7 மில்லியன் லைக்ஸ்களுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பிடித்துள்ளது. இதற்கடுத்த இடங்களை முறையே சாவோ போலோ, லாஸ் வெகாஸ், இஸ்தான்புல், ரியோ டே ஜெனீரோ, பார்செலோனா ஆகியவை பிடித்துள்ளன. இப்பட்டியலில் அதிக லைக்ஸ் பெற்ற ஆசிய நகரமாக தென் கொரியாவின் சியோல் நகரமும் அதனையடுத்து இந்தியாவின் மும்பை நகரமும் இடம் பிடித்துள்ளன. மும்பை நகரம் குறித்த 50 நாடுகளிலும் 16 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதேவேளை இப்பட்டியலில் 32 ஆவது இடத்தைப் பிடித்துள்ள ஈரானின் டெஹ்ரான் நகரம் இத்தாலியின் மிலானையும் ரோம் மற்றும் மூனிச் ஆகிய நகரங்களையும் பின்னுக்குத் தள்ளி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 50 நாடுகளினதும் பட்டியலில் அமெரிக்காவின் 8 நகரங்கள் இடம் பிடித்துள்ள போதும் பிரிட்டனின் ஒரேயொரு நகரமான இலண்டம் மட்டுமே இடம் பிடித்துள்ளது. Facebook இல் தற்போது குறைந்தது 1.32 பில்லியன் பாவனையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment