Sunday, November 9, 2014

பயனுள்ள பணி செய்யுங்கள்

* எந்த தொழிலையும் நேர்த்தியாகவும், நியாயமாகவும் செய்து பொருள் தேடுபவர்கள் மேன்மக்கள்.
* உள்ளத்திலே நேர்மையும் தைரியமும் இருந்தால் வாழ்வும் நேரான பாதையில் சென்று கொண்டிருக்கும்.
* நம்முடைய இஷ்டப்படி உலகில் ஒன்றும் நடப்பது இல்லை. எல்லாம் தெய்வத்தின் இஷ்டப்படி தான் நடக்கிறது.
* கடவுளுக்கு எல்லாம் ஒன்றே. எத்தனை கோடி உயிர்கள் உலகில் வாழ்ந்தாலும் சரி மடிந்தாலும் சரி கடவுளுக்கு எந்தவொரு பேதமும் இல்லை. 
* கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற உறுதி உள்ளத்தில் நிலைத்திருக்க வேண்டும். அது தான் உண்மையான பக்தி.
* மனிதன் அரைநிமிஷம் கூட சும்மா இருப்பது கூடாது. ஏதாவது பயனுள்ள வேலையில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.
* எதை விரும்புகிறோமோ அதுவே நமக்கு கிடைக்கிறது. எதை ஆதரிக்கிறோமோ அதுவே வளர்ச்சி பெறுகிறது.

* தாயைக் குழந்தை நம்புவது போலவும், கணவனை மனைவி நம்புவது போலவும் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
* கல்வி, அறிவு, புகழ், ஆயுள் முதலிய எல்லா நன்மைகளையும் கடவுளிடம் உண்மையுடன் கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.
* கேட்டவுடன் தெய்வம் யாருக்கும் கொடுப்பதில்லை. பக்தி பக்குவம் அடைந்த பிறகே எண்ணிய எண்ணம் ஈடேறும்.
* பக்தி மட்டும் போதாது. ஓயாமல் முயற்சியுடன் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருங்கள்.

* விடாமுயற்சியும், மன உறுதியும் உடையவனுக்கு உலகில் எதுவும் கஷ்டமாக இருப்பதில்லை.
* கவலை, பயத்தை வென்றவன் மரணத்தை வென்றவன் ஆகிறான்.
* கடவுள் எப்போதும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கிறார். அதை நிரப்பும் விதத்தில் மனதை திறந்து வைக்க வேண்டும்.
* தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள, எப்போதும் முயற்சிக்க வேண்டும்.
* அதிகாரம், ஆடம்பரம் எல்லாம் வெற்றிலைக்குச் சுண்ணாம்பு போல அளவாக இருப்பதே நல்லது.

மாறாத, நிலையான இன்பத்தை அடைவதே வாழ்வின் பயன்.
* மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ, அதுவரை உலகில் கலியுகம் இருக்கத் தான் செய்யும்.
* இன்று செய்ய வேண்டியதை நாளை செய்யலாம் என்று தள்ளி வைப்பது கூடாது.
* பேச்சில் ஒருவிதமாகவும், செயலில் வேறொரு விதமாகவும் உடையவர்களின் நட்பை கனவிலும் கொள்வது கூடாது.
* நம்பிக்கை என்னும் கடவுளை நமக்கு துணையாகக் கொண்டால் மட்டுமே நல்ல காலம் வரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...