சீனா பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டியுள்ள பிரமாண்ட அணையால் இந்தியாவுக்கு ஆபத்து என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
திபெத்துக்கு உற்பட்ட பிரம்மபுத்திரா நதியில் சீன அரசு அணைக்கட்டத் துவங்கும் முன்னரே இந்தியா அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால்,சீன அரசு அனல் மின் திட்டத்துக்காகவே இந்த அணையைக் கட்டுவதாக தெரிவித்தது. ஆனால் அந்த அணை மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளதாகவும், இந்த அணையில் மழைக்காலத்தின் போது, தேக்கி வைக்கப்படும் நீரைத் திறந்துவிட்டால் இந்தியாவின் அருணாச்சல பிரதேஷ் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத் திட்டமிட்டே சீன அரசு மிகப் பிரமாண்டமாக இந்த அணையைக் கட்டியுள்ளது என்று மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment