Friday, November 14, 2014

தமிழன் மானத்தை விலை பேசும் வைரமுத்து

தருண் விஜயின் உண்மை முகம் பாரீர்!

“சமஸ்கிருதம்தான் இந்தியா. …சமஸ்கிருதத்தை நீக்கினால்
இந்திய உணர்வே அழிந்து விடும்…
பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும் சமஸ்கிருதம் தேவை…                                                     
உயர்பதவிகளைப்  பெற, சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்                            
என்ற நிலைமை முன்னொரு காலத்தில் நிலவியது.
அந்நிலையை மீண்டும் உருவாக்க வேண்டும்.”
(தருண் விஜய், டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக-23, 2013)
தமிழால் பிழைக்கும் வைரமுத்துவே, 
சமஸ்கிருத – வெறியனுக்கு தமிழ் மகுடம் சூட்டாதே! 
உனது பிழைப்புக்காக தமிழன் மானத்தை விலைபேசாதே!

தருண் விஜய்க்கு விழாவா? வெட்கமாயில்லை?

இருநூறாண்டுகளுக்கு முன்  ஆதிக்க சக்திகளால்
அழிக்கப்பட்ட தமிழையும், திராவிட மரபையும் மீட்டுத்தந்தார்
அயர்லாந்திலிருந்து வந்த கால்டுவெல் !
தமிழால் வயிறு வளர்க்கும் சினிமாக் கவிஞன் எவனும்
அவருக்கு விழா எடுக்கக்காணோம்!
கால்டுவெல்லையும், திராவிட மரபையும் அழிப்பதையே
தனது கொள்கையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் வடநாட்டுக்காரன்
“தமிழ் ஆதரவு” என்று நடித்தால் உடனே அவனுக்கு விழாவாம்!
ச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!


கயமையில் காங்கிரசை விஞ்சும் பாஜக!

  • ஈழத்தமிழின அழிப்புப் போரை எதிர்த்து
    அன்று  கும்பலோடு கோவிந்தா!
    இன்று ராஜபக்சேவுக்கு வக்காலத்து,
    சிங்களவெறி பிக்கு அநகாரிக
    தர்மபாலாவுக்கு
     இங்கே தபால்தலை வெளியீடு!
  • தமிழக மீனவர்களைக் காப்போம் எனப்பேசி
    ஓட்டுப் பொறுக்கிவிட்டு,
    தற்போது மீனவர்களுக்கு தூக்கு!
    படகு பறிமுதல், ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா என்று
    சு.சாமியின் திமிர்ப்பேச்சு!
  • இந்தி – சமஸ்கிருத திணிப்பு,
    பாடநூல்கள் ..!
    கூடவே தமிழுக்கு ஆதரவு என்று
    தருண் விஜய் நடத்தும் நாடகம்!
  • இத்தனைக்குப் பிறகும்
    காவிக் கிரிமினல்களைப் பாராட்ட
    மியூசிக் அகாதமிக்குப் போகும் தமிழன்,
    இளித்தவாயனா, இனத்துரோகியா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...