வரிச்சலுகை தரும் நாடுகள் மற்றும் இந்தியா இடையே, குற்றம் புரிந்தவர்களை கையாள்வது தொடர்பான, ஒப்பந்தங்கள் இல்லாததால், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள, கறுப்பு பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, சிறப்பு புலனாய்வு குழுவிடம், மத்திய அரசு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ள கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை, மத்திய அரசு நியமித்துள்ளது.இந்தக் குழுவில், மத்திய நேர்முக வரிகள் வாரியம், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் உட்பட, பல விசாரணை நிறுவனங்களின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அதிகாரிகள், சிறப்பு புலனாய்வு குழுவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்திய அரசு, 37 நாடுகளுடன், பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்களை செய்துள்ளது. இந்தப் பட்டியலில், வரிச்சலுகை தரும், மால்டா, பெர்முடா, மொனாக்கோ, கேமேன் தீவுகள் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் உட்பட, பல நாடுகள் இடம் பெறவில்லை. அதனால், இந்த நாடுகளில், இந்தியர்கள் பலர், தங்களின் கறுப்பு பணத்தை பதுக்கி இருந்தாலும், அதுபற்றி விசாரணை நடத்த இயலவில்லை. எனவே, வரிச்சலுகை தரும் நாடுகள் அனைத்துடனும், பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன், இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம், வரி தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருந்தாலும், அந்த ஒப்பந்தங்களும், அந்த நாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவோ, அவற்றை பறிமுதல் செய்யவோ உதவும் வகையில் இல்லை. கறுப்பு பணத்தை டிபாசிட் செய்திருப்பவர்கள் குறித்த தகவல்களை மட்டுமே அறிந்து கொள்ள உதவுகின்றன. எனவே, இந்த விவரங்களை எல்லாம், சிறப்பு புலனாய்வு குழு, மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். குற்றவாளிகளை கையாள்வது தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ள, துாதரக ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment