தனியார் Mobile நிறுவனங்கள் வந்த பிறகு BSNL (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்த BSNL நிறுவனத்திற்கு புத்துணர்ச்சி வந்துள்ளது. BSNL நிறுவனம் ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை இனி நீங்கள் Online-ல் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த வசதியை முதன் முதலில் நவம்பர் 1, 2011- ல் ஆந்திராவில் அறிமுகப்படுத்தியது BSNL நிறுவனம். மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த வசதியின் மூலம் 1.2 லட்சம் பேர் புதிதாக சேர்ந்தனர். இந்த மாபெரும் வரவேற்ப்பை அடுத்து இந்த வசதியை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளது BSNL நிறுவனம். இந்த வசதியின் மூலம் 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என BSNL கணித்துள்ளது.
BSNL நிறுவனத்தின் சேர்மன் R.K. Upadhyay அறிவிப்பு கீழே
ஆன்லைனில் விருப்பமான BSNL நம்பரை தேர்வு செய்ய:
சென்னை வாடிக்கையாளர்கள்-http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/ch/gsm_choice.asp
தமிழ்நாட்டின் இதர பகுதியினர் -http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/tn/gsm_choice.asp
இதர மாநிலத்தில் வசித்தால் –http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/choose_ur_no.html
நீங்கள் இருக்கும் பகுதிக்கு ஏற்ப உள்ள link-ல் click செய்து BSNL தளத்திற்கு செல்லவும். அங்கு இடது புறத்தில் நம்பர்களின் பட்டியல் இருக்கும். இதில் ஒவ்வொரு link-ல் சுமார் 98,000 நம்பர்களுக்கு மேல் உள்ளது. அதில் உங்கள் பிடித்த விருப்பமான நம்பரை தேர்வு செய்த பின்னர் மேலே உள்ள RESERVE NUMBER என்பதை click செய்யவும்.
அதில் உள்ள Reserve Number அழுத்தியவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய தொடர்பு மொபைல் எண்ணை கொடுத்து கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும்.
உங்கள் மொபைல் எண்ணுக்கு 7 இலக்க பின் நம்பர் SMS வரும், ஒருவேளை SMS வரவில்லை என்றால் அங்கு கொடுத்துள்ள 7 இலக்க PIN நம்பரை அதில் type செய்து கொள்ளவும். அந்த PIN நம்பரும் முக்கியமானது குறித்து வைத்து கொள்ளுங்கள்.
அந்த PIN நம்பரை கொடுத்து Submit பட்டனை அழுத்தினால் உங்கள் நம்பர் பதிவு செய்யப்படும்.
இனி நீங்கள் அருகில் இருக்கும் BSNL அலுவலகத்தை 72 மணி நேரத்திற்குள் சென்று பதிவு செய்யப்பட மொபைல் எண்ணையும், அந்த PIN நம்பரையும் கொடுத்து மற்றும் எப்பொழுதும் போல ID PROOF, ADDRESS PROOF கொடுத்து உங்கள் எண்ணை வாங்கிக் கொள்ளுங்கள்.
SMS மூலமாகவும் BSNL நம்பரை பதிவு செய்யலாம்:
NLIST <Space> Circle Code <space>1-5 digits
Example: NLIST<space>CHN<space>00117
என்ற பார்மட்டில் BSNL வாடிக்கையாளர்கள் – 53734, மற்ற வாடிக்கையாளர்கள் – 9494453734 என்ற எண்ணுக்கும் SMS அனுப்பி உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை பதிவு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment