முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக, பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியதோடு, கடமை முடிந்து விட்டதாக இருந்து விட்டேன் என்ற பொய்யை, தி.மு.க., தலைவர் கருணாநிதி அவிழ்த்து விட்டிருக்கிறார். 'முல்லைப் பெரியாறு அணையில், முதல் கட்ட மாக, 142 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நீர் மேலாண்மையை கருத்தில் கொண்டு, முல்லைப் பெரியாறு அணை நீரின் அளவு, ஒழுங்குமுறை செய்யப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக, பிரமருக்கு தற்போது எந்த கடிதமும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது, அனைத்து தரப்பினரின் கடமை. இதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும்.'காவிரியின் குறுக்கே, கர்நாடகா, அணை கட்டுவதை தடுக்க முயற்சிக்கவில்லை' என்று, தமிழக அரசு மீது, கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.காவிரி ஒரு, பன்மாநில நதி என்பதால், கீழ் படுகை மாநிலமான, தமிழகத்தின் இசைவு பெறாமல், மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல், கர்நாடக அரசு, எந்த புதிய திட்டத்தையும் மேற்கொள்ள இயலாது.எனினும், மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா, புதிதாக இரண்டு அணைகள் கட்ட உள்ளதாக செய்திகள் வந்தன. இதுதொடர்பாக, கடந்த, 12ம் தேதி, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.மேலும், சட்ட வல்லுனர் களுடன் கலந்தாலோசித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
எனவே, இதுகுறித்து, தமிழக அரசுக்கு, கருணாநிதி எந்த ஒரு அறிவுரையையும் அளிக்கத் தேவையில்லை.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.
எனவே, இதுகுறித்து, தமிழக அரசுக்கு, கருணாநிதி எந்த ஒரு அறிவுரையையும் அளிக்கத் தேவையில்லை.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment