Sunday, November 30, 2014

வீட்டு வாடகை செலுத்தாமல் ஏமாற்றும் அதிகாரிகள்:கண்டிப்பான வசூலில் இறங்குமா அறநிலையத்துறை?

தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான வீடுகளில், ஒதுக்கீடு பெறும் அறநிலையத்துறை அதிகாரிகள், முறையாக வாடகை செலுத்தாமல் உள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில், ஏராளமானோர் வாடகை அடிப்படையில் குடியிருந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், அறநிலையத்துறை நிர்ணயித்த குறைந்தபட்ச வாடகையை கூட, செலுத்துவதில்லை; ஏமாற்றி வருகின்றனர். இதனால், கோவில்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
Top news
முறைப்படுத்த...:இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில், குடியிருக்கும் வாடகைதாரர்களை முறைப்படுத்தும் திட்டத்தை, அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதன்படி, பொது மக்களிடமிருந்து மட்டுமே, நிலுவை வாடகை வசூலிக்கப்படுகிறது. பிரபலமான பெரிய கோவில்களுக்கு சொந்தமான வீடுகளில் பல, அந்தந்த கோவில் பணியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாடகை அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன.இந்த வீடுகளுக்கு அதிகாரிகளும், பணியாளர்களும் முறையாக வாடகை செலுத்துவதில்லை.


சென்னையில் வடபழனி முருகன் கோவிலுக்கு, சொந்தமாக, நான்கு வீடுகள் உள்ளன. இதில், ஒரு வீடு, அறநிலையத்துறையின் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஒருவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்டது. 

சென்னையில்... வேறு இடத்தில் பணியில் உள்ள அவருக்கு, ஆணையரின் அனுமதியின்றி அந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.ஆனாலும், அந்த வீட்டுக்கு அவர், முறையாக வாடகை செலுத்தாததால், கடந்த, 1417, 1418 பசலி ஆண்டுகளில் (2007, 2008) மட்டும், 20,220 ரூபாய் வரை வாடகை நிலுவையில் உள்ளது. இதேபோன்ற பிரச்னை, தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் உள்ளதாக, பக்தர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

துாங்கும் தணிக்கை அறிக்கை:ஆலய வழிபடுவோர் சங்கத்தின் செயல் தலைவர்,டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:வடபழனிமுருகன் கோவில் போல, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியிருக்கும் அதிகாரிகள், வாடகை செலுத்தாமல் குடியிருந்து வருகின்றனர். இதனால், பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற வாடகைதாரர்கள் போல, இவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால், இதை சுட்டிக்காட்டும் தணிக்கை அறிக்கை மீது, அறநிலையத்துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...