Sunday, November 16, 2014

விவசாயமும் மின்சாரமும். ..தண்ணீர் இருக்கு.. கரண்ட் இல்லை.

ரெய்ச்சூரின் அருகில் உள்ள கர்நாடக கிராமத்தில் நேற்று விவசாயிகள் பவர் கட்டை எதிர்த்து ஸ்ட்ரைக்.. ( Killi Sugar, Ganadhal ஆகிய இடங்களில் அங்கே இருக்கின்றன. எந்த ஊர் என்று பர்ஃபெக்டாக ஓட்டுநரால் சொல்ல இயலவில்லை. ) நாம் போக வேண்டிய ஊருக்கு 40 கிலோமீட்டர் சுத்திப் போக வேண்டி வந்தது.

அதனால் பக்கா கிராமங்களை ஊடுருவிப் போகும்போது வருத்தமாக இருந்தது. பருத்திப்பஞ்சு பயிரிடப்பட்ட கரிசல்  நிலங்களைக் கடந்தோம்.சோலே என்று சொல்லக் கூடிய காபூலி சன்னாப் பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. நீர் பாய்ச்ச குழாய்கள் போடப்பட்டிருந்தன.

இங்கே ஹைதை நகரத்திலேயே தினப்படி காலை இரண்டு மணி நேரம் , மதியம் இரண்டு மணி நேரம் கரண்ட் கட் உண்டு. 

மோசமான குடிசையாகக் கூட கண்ணில் தட்டுப்படவில்லை அவர்களின் வீடுகள். எங்கே வசிக்கிறார்கள்.. ஹ்ம்ம்ம். ஐந்து பத்து கிலோமீட்டர்கள் தாண்டி வந்து பயிர் செய்கிறார்கள் போல. ஓரிரு ட்ராக்டர், அங்கங்கே சில பைக்குகள் தவிர வேறு ஏதும் ..ஏதுமே இல்லை.. பாதையோ ஒற்றையடிப் பாதைபோல.

அதைத் தாண்டினால் சில கிராமங்கள். மிகவும் மோசமான வறுமைக்கோட்டுக்குள் கீழே வாழும் கிராம மக்கள். அழுக்கடைந்த , கறுப்புப் பன்றிகள் உலவும் சுகாதாரமற்ற தெருக்கள். மழை பெய்து தேங்கிய மிச்ச சொச்ச நீரில் பிரண்டு கொண்டிருந்தன. 
பருத்திப் பஞ்சும் கரிசல் மண்ணும்

வெடித்திருக்கும் பருத்திப் பஞ்சு.

முன்பு கும்பகோணத்தில் இருந்தபோது அங்கே டிசம்பரில் குறுவைப் பயிருக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பார்கள். 

மரபணு மாற்றப் பயிர்கள், உரங்கள், பூச்சி மருந்துகள் என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கு இழப்புத்தான். இதில் எல்லாம் வெளிநாட்டு ஊடுருவல்களை அண்டவிடாமல்  நம் அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு தடுக்கணும்.

நம் விவசாயிகளின் வாழ்வைச் சிதைப்பதன் மூலமும், நம் பாரம்பரியப் பயிர்கள், ஆடு, கோழி, மாடு போன்ற உயிரினங்களில் இறைச்சி வகைகள் மட்டும் வளர்ப்பதன் மூலமும் அதிக பாலுக்காக ஊசி போட்டுக் கறப்பதன் மூலமும், மேலும் ஒரே முறை மட்டுமே பயிரிடப்பட்டு அதன் பின் அதன் மூலம் உள்ள வீரிய விதைகள் பெறப்படமுடியாப் பயிர்  ரகங்களை வளரும் நாடுகளில் உள்ள விவசாயிகளின் தலையில் கட்டுவதன் மூலமும் அந்நிய நாடுகள் கொழுத்த லாபம் சம்பாதிப்பதோடு மட்டுமல்ல. என்றும் அவைகளையே சார்ந்து இருக்குமாறு செய்கின்றன.

 மேலும்   வெளிநாட்டு உணவுவகைகள் தான் சிறப்பு என்று விளம்பரங்கள் செய்து இந்திய உணவு வகைகளை உண்ணும் மக்களின் மனதைத் திசைதிருப்பி நம் பயிர்களையும் உணவு வகைகளையும் அழிக்கிறார்கள். 
தண்ணீர் இருக்கு கரண்ட் இல்லை.

மின்சாரமும் தண்ணீரும் வழங்கப்பட்டால்தான் விவசாயம் செய்ய முடியும். விவசாயி வாழ்க்கை செழிக்கும் என்று சொல்லி கார் ட்ரைவர் தெலுங்கில் & ஹிந்தியில் வருத்தப்பட்டார்.

 இன்னும் இரு தினங்களில் இங்கே ஆந்திராவில் விவசாயிகள் பவர் கட்டை எதிர்த்துத் தர்ணா செய்யப் போறாங்க. கிட்டத்தட்ட 3 மாதங்களில் 300 விவசாயிகள் தற்கொலை. தீபாவளி அன்னிக்கு 13 விவசாயிகள் தற்கொலை.. எங்கே போயிட்டு இருக்கோம் நாம்.நமக்கு உணவைப் பாடுபட்டு உருவாக்கி வழங்கிட்டு அவங்க மரிப்பது என்ன கொடுமை..

நதி நீரையும் மின்சாரம் வழங்குவதையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் வைக்கணும்.. எந்த அரசியல் தலையீடும் குறுக்கீடும் இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் விவசாயத்திற்குத் தேவையான நதிநீர் வரத்தும், மின்சாரமும் அதன் பின்  மின் சலுகைகள் வழங்கவும் மற்ற சலுகைகள் வழங்கவும் உடனடியா அதிரடியா முடிவு எடுக்கப் படணும்.. இதைத்தான் அரசாங்கத்துக்கிட்ட கோரிக்கையா சொல்ல முடியுது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...