Sunday, November 9, 2014

கிரானைட் முறைகேட்டில் கருணாநிதி குடும்பம் ஈடுபட்டது உண்மையா?



கருணாநிதியின் குடும்பத்தார், கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டதை, சகாயம் தெளிவுபடுத்தி இருந்ததை, சுட்டிக் காட்டி இருந்தேன். அதற்கு அவர் பதில் என்ன?' என்று, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்த அவரது அறிக்கை:சகாயம் விசாரணை கமிஷன் அமைக்க வேண் டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தபோதே, தற்போது வெளியிட்டுள்ள உத்தரவை, அ.தி.மு.க., அரசு வெளியிட்டிருக்க வேண்டாமா என்று, கருணாநிதி கேட்டுள்ளார்.கிரானைட் முறைகேட்டில், விசாரணை முழுவதும் முடிந்து விட்டது. புதியதாக ஒருவர் விசாரணை செய்தால், ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளில் கால தாமதம் ஆகும். எனவே தான், 'சகாயம் நியமனம் அவசியம் இல்லை' என, தமிழக அரசு, நீதிமன்றங் களில் முறையிட்டது என, ஏற்கனவே தெளிவாக கூறி உள்ளேன்.இதை கருணாநிதி படிக்கவில்லையா என்பது தெரியவில்லை. கிரானைட் முறைகேடு தொடர்பான, உயர் நீதிமன்ற உத்தர வில், முந்தைய தி.மு.க., ஆட்சியில், மதுரை கலெக்டர் எப்படிப்பட்ட விசாரணை மேற்கொண் டார் என்பதை, தோலுரித்து காட்டி உள்ளது.

மாவட்ட கலெக்டரிடம் இருந்து, இரண்டே நாட்களில் அறிக்கை பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.இரண்டே நாட்களில், மதுரை மாவட்டத்தில் உள்ள, 175 குவாரிகளை யும் ஆய்வு செய்ய முடியுமா? இவ்வாறு ஆய்வு செய்து முறைகேடே இல்லை என்று தெரிவித்தது, 'முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைத்தது போல' என்பதை, உயர் நீதிமன்ற தற்போதைய ஆணை தெளிவாக்கி விட்டது.மேலும்,
கருணாநிதியின் பேரன் பங்குதாரராய் உள்ள, 'ஒலிம்பஸ் கிரானைட்ஸ்' நிறுவனம் சட்ட விரோதமாக கிரானைட் எடுத்திருந் ததை உறுதி செய்ததாக, சகாயம் தெரிவித்திருந்தார்.இதன் மூலம், கருணாநிதியின் குடும்பத்தார் கிரானைட் கொள்ளை யில் ஈடுபட்டதை, சகாயம் தெளிவுபடுத்தி இருந்ததை, சுட்டிக் காட்டி இருந்தேன். அதற்கு கருணாநிதி பதில் என்ன?இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...