Wednesday, November 12, 2014

மின்னிலக்க மயமாகும் போக்குவரத்து கேமராக்கள்


மின்னிலக்க மயமாகும் போக்குவரத்து கேமராக்கள்
சிங்கப்பூரில் அடுத்­­­தாண்டு ஜூன் மாதத்­­­திற்­­­குள் அனைத்து சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புப் புகைப்படக்கருவிகள் அனைத்தும் மின்னிலக்கமயமாக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. படச்சுருள் பயன்படுத்தும் பழைய வகை புகைப்படக்கருவிகள், படச் சுருள் தீர்ந்த­­­தும் அதன் செயல்பாடு நின்று போகக் கூடும்.
இதனால் சாலைப் போக்குவரத்துக் கண்காணிப்­பில் தொடர்ச்சி அற்றுப் போகும். ஆனால், புதிய மின்­­­னி­­­லக்கக் கண்காணிப்புக் கருவிகள் மேம்பட்ட, உயர்­­­தர, தெளிவான படங்களை சாலையில் பொருத்­­­தப்­­­பட்ட இடத்­­­தி­­­லி­­­ருந்து 24 மணி­­­நே­­­ர­­­மும் உட­­­னுக்­­­கு­­­டன் போக்­­­கு­­­வ­­­ரத்து காவல்துறையினருக்கு அனுப்­­­பி­வைக்கும்.
பழைய கண்காணிப்­புப் புகைப்படக்கருவிகளுக்குப் பதிலாக 11 மெகா பிக்சல் வகையைச் சேர்த்த 120 மின்­­­னி­­­லக்க சாலை சிவப்பு விளக்கு கண்காணிப்புப் புகைப்படக்கருவிகள் பொருத்­­­தப்­படும். 2011ஆம் ஆண்டு முதல் சிவப்பு விளக்­­­கு­­­ எரியும் போது நடக்­­­கும் போக்­­­கு­­­வ­­­ரத்து விதி­ மீ­­றல்­­­களின் எண்­­­ணிக்கை அதி­­­க­­­ரித்து வந்­­­துள்­­­ளன.

சிங்கப்பூரை முன்னுதாரணமாக சுட்டிக்காட்டிய இந்திய அமைச்சர் வெங்கையா நாயுடு


ஆந்திர மாநிலத்தை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியாவுடன் கூட் டணி சேர சிங்கப்பூர் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்தியாவின் நகர்ப்புற மேம்பாடு, வீடமைப்பு, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் திரு வெங்கையா நாயுடு கூறினார்.
சிங்கப்பூரை முன்னுதாரணமாக சுட்டிக்காட்டிய இந்திய அமைச்சர் வெங்கையா நாயுடு
இந்திய அமைச்சர் வெங்கையா நாயுடு
பிஜிபி அரங்கில் நேற்று முன் தினம் திரு வெங்கையாவுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி யில் 600க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் கலந்து கொண் டனர். இந்தக் கலந்துரையாடல், விருந்து நிகழ்ச்சியை ‘கோபியோ’ எனும் இந்திய வம்சாவளியினருக் கான உலகளாவிய அமைப்பு, தெலுங்கு சமாஜம், இதர இந்திய அமைப்புகள் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ வருகை மேற் கொண்ட அமைச்சர் வெங்கையா, முன்பு இருந்த இந்தியாவிற்கும் இன்றைய இந்தியாவிற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாகச் சொன் னார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவிற்கு ஓர் ஆற்றலுள்ள தலைவருடன் ஒரு நிலையான அர சாங்கமும் கிடைத்துள்ளது என்று சொன்ன அமைச்சர், வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கவும் வெளி நாட்டினர் இந்தியாவில் தொழில் செய்வதை சுலபமாக்கவும் முயற் சிகள் எடுக்கப்படுகின்றன என் றார்.
படம்: நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவின் நகர்ப்புற மேம்பாடு, வீடமைப்பு, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் திரு வெங்கையா நாயுடுவுடன் (நடுவில்) குத்துவிளக்கேற்றுகின்றனர் (இடமிருந்து) ‘கோபியோ’ எனும் இந்திய வம்சாவளியினருக்கான உலகளாவிய அமைப்பு சிங்கப்பூர் கிளையின் தலைவர் டாக்டர் வி.பி. நாயர், இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ஆர். ஜெயசந்திரன், சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திருமதி விஜய் தாக்கூர் சிங் (வலக்கோடி). படம்: பேராசிரியர் சவுத்ரி

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...