கலைஞர் தொலைக்காட்சிக்கு முறைகேடாக 200 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதில் கருணாநிதியையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கலைஞர் தொலைக்காட்சிக்கு முறைகேடாக 200 கோடி ரூபாய் பணம் கைமாறியுள்ளது என்று, டெல்லி அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதில் கருணாநிதியின் மகள் கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட பலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ள அமலாக்கப் பிரிவு, தற்போது கருணாநிதியின் மகள் செல்வியையும் விசாரிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கலைஞர் தொலைகாட்சி என்பது கருணாநிதியின் பெயரிலேயே இயங்கி வரும் தொலைகாட்சி. இதில் பணப்பரிமாற்றம் முறைகேடாக நடைபெற்று இருந்தால்
கருணாநிதியின் கவனத்துக்கு வராமல் எப்படி நடந்திருக்க முடியும் என்றும், எனவே,கருணாநிதியையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று அமலாக்கப் பிரிவுக்கு புதிதாக கோரிக்கை வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

No comments:
Post a Comment