Monday, May 30, 2016

உலக புகையிலை மறுப்பு தினம்.

பெருமிகு மிகு சொந்தங்களே! வணக்கம்.!
இன்று 31.5.16  
உலக புகையிலை மறுப்பு
தினம்.
உலகில் எத்தனையோ வகை போதைப்
பொருள்கள் பயன் படுத்தப் படுகின்றன.
அதில் புகையிலையால் வரும் கேடு மிக
மோசமானது. அதுவும் புகைப்பிடிப்பவா்
களால் பரவும் கேடு மிகக் கொடுமையானது.
மற்ற போதைப் பொருள்கள் அவன் அழி
வான். அவனால் அவன் குடும்பம் துன்பப்
படும். புகைப்பிடிப்பவரால், அவா் வெளி
யேற்றும் விஷப் புகையால் அவருக்குச்
சம்பந்தமில்லாதவா்களெல்லாம் பாதிக்கப்
படுகிறாா்கள்.
இந்த தீய பழக்கத்தால் புற்று நோய் வநது
லட்சக்கணக்கில் செத்து மடிகிறிா்கள்.
இந்த புகைப் பிடிக்கும் பழக்கத்தை கை
விட்ட ஒவ்வொரு விநாடிகளிலும் கிடைக்
கும் நன்மையையும், உடல் ஆரோக்கியத்
தையும் பாருங்கள்.
20 நிமிடங்களில்
+ ரத்த அழுத்தம் இயல்பாகும்.
+ இதயத் துடிப்பு இயல்பாகும்.
8 மணி நேரத்தில்
+ ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான
காா்பன் மோனாக்சைடு வெளியேறும்
+ ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்பாகும்
2 நாட்களில்
+ நரம்புகள் திரும்ப வளர ஆரம்பிக்கும்
+ நாக்கில் சுவை மொட்டுக்கள் மீண்டும்
உயிா் பெறும்.
2 முதல் 12 வாரங்களில்
+ உடலில் மேல் தோள் மேம்படும்
+ ரத்த ஓட்டம் மேம்படும்
+ சுவாச செயல்பாடு மேம்படும்.
+ நடை எளிதாகும்.
1 முதல் 9 மாதங்களில்
+ இருமல் சைனஸ் இருக்கம் தளரும்
+ மூச்சிறைப்பு குறையும்.
+ உடல் சகதி மேம்படும்.
+ நோயத்தொற்று ஏற்படும் தன்மை குறையும்.
1 ஆண்டில்
+ புகைப்பிடிப்பதால் ஏற்படும் இதயக்
கோளாறு ஆபத்து 50 சதவிகிதம்
குறையும்.
2 ஆண்டில்
+ பக்கவாதம் ஏற்படும் சாத்தியம் குறையும்.
+ வாய், தொண்டை, உணவுக் குழாயில்
புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியம்
குறையும்.
10 ஆண்டுகளில்
+ புகைப் பிடிக்காதவருக்கான சராசரி
ஆயுட்காலம் மீண்டும் கிடைக்கும்.
+ புற்று நோயாக மாற வாய்ப்புள்ள செல்
கள், இயல்பான செல்களாக மாறும்.
15 ஆண்டுகளில்
+ புகைப்பிடிப்பதால் ஏற்படும் இதயக்
கோளாறு முழுமையாக நீங்கும்.
என்ன நண்பா்களே.! இன்றைய புகையிலை
மறுப்பு தினத்துக்கு நல்ல தகவலா? படிப்ப
தோடு நில்லாமல் அனைவருக்கும் பகிரவும்

என்ன படிக்கலாம்...?

திறமை, ரசனை,வேலைவாய்ப்பை மனதில் கொண்டு தேர்வு செய்யுங்கள்...!
பிளஸ் 2 வகுப்பில் 60ரூ முதல் 80ரூ வரை மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்கள் என்ன படிக்கலாம் என்பதில் தெளிவு தேவை.இன்ஜினியரிங் படிப்பைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், விண்ணப்பித்த அனைவருக்குமே சீட் கொடுத்தும், மீதம் காலியாக இருக்கிறது என்பதுதான் உண்மை.எனவே, இன்ஜினியரிங் சீட் வாங்குவதைவிட, அப்படிப்பை வெற்றிகரமாக முடிப்பதுதான் இன்றைக்கு சிரமமான விசயமாக இருக்கிறது. எனவே, இன்ஜினியரிங் படிப்பை சிறப்பாக வெற்றிகரமாக முடிக்கக்கூடிய சக்தி தனக்கு இருக்கிறதா என்பதை தெளிவாக ஆராய்ந்து, பிறகு முடிவெடுப்பது சிறப்பாக இருக்கும்.மெடிக்கல் படிப்பை பொறுத்தவரை, தமிழகத்தில் குறைந்தளவு கல்லூரிகளே இருப்பதால், மிக அதிகளவு மதிப்பெண் வாங்கியவர்களுக்கான படிப்பாக மட்டுமே அது இருந்து வருகிறது. எனினும், MBBS என்கிற ஒரேயொரு படிப்பிற்கு மட்டும், நாம் முயற்சி செய்வதைத் தாண்டி, மருத்துவத்தில் உள்ள மற்ற படிப்புகளிலும் கவனம் செலுத்தினால், சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்றே அதிகரிக்கும். MBBS போலவே, அதே காலஅளவில் உள்ள மாற்று மருத்துவம் சார்ந்த சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி ஆகியவற்றின் மருத்துவப் பட்டப் படிப்புகளும் சமீப ஆண்டுகளில் புகழ்பெற்று வருகின்றன.தவிர, BDS எனப்படும் பல் மருத்துவப் படிப்பு, MBBS சொல்லித்தரப்படுகிற கல்லூரிகளைவிட, சற்று அதிகமான கல்லூரிகளில், தமிழகத்தில் உள்ளதால், இவற்றில் சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்றே அதிகம். கூடவே, B.Pharm எனப்படும் மருந்தியல்,B.Sc(Nursing), B.P.T எனப்படும் பிசியோதெரபி, கண் மருத்துவம் சார்ந்த ஆப்டோமெட்ரி ஆகியவையும், மருத்துவம் சார்ந்த நாம் கவனிக்க வேண்டிய படிப்புகளாகும்.மருத்துவத்தில், மனிதர்களுக்கான மருத்துவம் தாண்டி, கால்நடைகளுக்கான மருத்துவம், காலம்காலமாக புகழ்பெற்ற ஒன்றாகும். B.V.Sc. . எனப்படும் வெர்ட்னரி சயின்ஸ் படிப்பு, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியிலும், இந்தப் பல்கலையின் கீழ் இயங்கும் நாமக்கல் கல்லூரியிலும் சொல்லித் தரப்படுகிறது. தவிர, B.F.Sc.. எனப்படுகிற மீன்வளம் சார்ந்த விசயங்களை பட்டப் படிப்பாக சொல்லித் தருவதற்கென, தூத்துக்குடியில் அரசு மீன்வளக் கல்லூரி ஒன்றும் உள்ளது. இந்தக் கல்லூரியும், கால்நடை மருத்துவப் பல்கலையின் கீழ்தான் செயல்படுகிறது. இது, சமீப ஆண்டுகளில் வரவேற்பை பெற்றுவரும் இன்னொரு புதிய படிப்பாகும்.வேளாண் துறை சார்ந்த படிப்பான B.Sc. (Agriculture), , எப்போதுமே வரவேற்புள்ள ஒரு படிப்பாகும். கோவையிலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ், கோவையில் மட்டுமல்லாது, திருச்சி, பெரியகுளம் என பல்வேறு இடங்களில் உள்ள உறுப்புக் கல்லூரிகளிலும், இந்தப் படிப்பு சொல்லித் தரப்படுகிறது. வேளாண் கல்லூரிகளில், சமீப ஆண்டுகளில் அதிகம் நாடப்படும் இன்னொரு படிப்பு, Horticulture எனப்படும் தோட்டக்கலை சார்ந்த படிப்பாகும்.தவிர, கோவை வேளாண் பல்கலையில், ஒருசில சிறப்பு இன்ஜினியரிங் பட்டப் படிப்புகளும் சொல்லித் தரப்படுகின்றன என்பது பலர் அறியாத செய்தி. B.Tech(BioTechnology), Food Process Engineering, Agricultural IT போன்ற இந்த இன்ஜினியரிங் படிப்புகளுக்கு, நீங்கள் நேரடியாக கோவை வேளாண் பல்கலைக்கு, தனியாக ஒரு விண்ணப்பம் போட வேண்டும்.இடையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு, மீண்டும் சமீப ஆண்டுகளில் சட்டப் படிப்பிற்கான மவுசு கூடிவருகிறது. சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களிலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு சட்டப் படிப்பில் சேர +2வில் நீங்கள் எந்த குரூப் எடுத்திருந்தாலும் போதுமானது.இப்படியான தொழிற் படிப்புகளுக்கான கல்லூரிகள் ஒருபுறம் இருந்தாலும், B.A., B.Sc., B.Com. போன்ற படிப்புகளை வழங்கும் கலை அறிவியல் கல்லூரிகளும், நூற்றுக்கணக்கில் புகழ்பெற்று விளங்குகின்றன. எனினும், இந்தக் கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு காலத்திலிருந்த வழக்கமான படிப்புகளிலிருந்து மாறுபட்டு, இன்று நிறைய புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. சொல்லப்போனால், இன்ஜினியரிங் கல்லூரியிலுள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோடெக்னாலஜி போன்றவை, B.Sc. படிப்புகளாக, கலை அறிவியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தவிர, சயின்ஸ் பாடங்களில்கூட, சிறப்புத் துறைகளாக மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பிளான்ட் பயாலஜி என சிறப்பு பட்டங்கள் தரப்படுகின்றன. சத்துணவு, இந்திய சுற்றுலா, ஹோம் சயின்ஸ், உளவியல் என பெண்களை மையப்படுத்தி, நிறைய சிறப்பு பட்டப் படிப்புகள், குறிப்பாக, மகளிர் கல்லூரிகளில் சொல்லித்தரப்படுகின்றன.கலை, அறிவியல் கல்லூரிகளில் மிகவும் பிரபலமான இன்னொரு படிப்பு B.Com. . என்றாலும், அதோடு சேர்ந்த படிக்க வேண்டிய இன்னும் சில கோர்ஸ்களை நம் மாணவர்கள் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அதாவதாக, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் எனப்படும் CAகாஸ்ட் அக்கவுன்டன்ட் எனப்படும்ICWAI மற்றும் கம்பெனி செக்ரட்டரி எனப்படும் ACS ஆகிய மூன்றும்தான் அவை.ஒருகாலத்தில், பட்டப் படிப்பை முடித்தப் பிறகுதான், இவற்றை முயற்சி செய்யவே முடியும். ஆனால் இன்று, +2 முடித்து பட்டப் படிப்பில் சேர்ந்தவுடனேயே இவற்றுக்கான தொடக்கநிலைத் தேர்வுகளை எழுத முடியும் என்பதால், பட்டப் படிப்பை படித்துக்கொண்டே ஒரே நேரத்தில், இந்தத் தேர்வுகளையும் எழுதுவதால், மூன்றாண்டு காலம், விரயமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதை, ஒரு காலத்தில், பல வீடுகளில் அனுமதிக்கவே மாட்டார்கள். ஆனால் இன்று, திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அத்தனைப் படிப்புகளும், தொலைக்காட்சித் துறைக்கும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதால், அந்த எதிர்ப்பு நிலை மாறியுள்ளது. சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு சொல்லித் தரப்படுகிறது. அதேபோல், சென்னை அடையாறில் உள்ள அரசு இசைக் கல்லூரியில், இசை மற்றும் நடனம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் படிப்புகள் சொல்லித் தரப்படுவதோடு, இன்று பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் அரசு இசைக் கல்லூரிகள் உள்ளன.உங்களின் ஓவியத் திறமையை மட்டுமே வைத்து பட்டப் படிப்பில் நுழையும் வாய்ப்பு உள்ளது தெரியுமா? சென்னை எழும்பூரிலுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு ஓவிய நுண்கலைக் கல்லூரியிலும், கும்பகோணத்திலுள்ள இதே அரசுக் கல்லூரியிலும் BFAஎனப்படும் Fine Arts பட்டப் படிப்பு, பல்வேறு சிறப்பு பிரிவுகளில் சொல்லித் தரப்படுகிறது. இதில் சேர, உங்களது ஓவியத் திறமையைப் பரிசோதிக்கும் நுழைவுத்தேர்வு ஒன்று நடத்தப்பட்டு, அதன்மூலம் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள். இரண்டுமே அரசுக் கல்லூரிகள் என்பதால், கல்விக் கட்டணமும் மிகக் குறைவுதான். இன்று தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் பல்வேறு ஆர்ட் டைரக்டர்களும் இக்கல்லூரிகளின் மாணவர்களே!
சமீப ஆண்டுகளில் பலரது கவனத்தையும் ஈர்த்துவரும் படிப்புகளில், முக்கியமான இன்னொரு படிப்பு பேஷன் டெக்னாலஜி. சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக் கல்லூரியான NIFT எனப்படும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு கல்வி நிறுவனமாகும். இங்கு பல்வேறு பிரிவுகளில் ஆடை வடிவமைப்பு, ஆடை உற்பத்தி போன்ற டிசைனிங் கோர்ஸ்கள், பட்டப் படிப்புகளாக சொல்லித் தரப்படுகின்றன.சமையல் சார்ந்த படிப்பான கேட்டரிங் டெக்னாலஜி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பும், எப்போதுமே நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் படிப்புகளாகும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கப்பல், விமானம் என உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து வேலைபார்க்கும் வாய்ப்பை கேட்டரிங் படிப்புகள் தருவதால், அதுசார்ந்த ரசனை உள்ளவர்கள் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். அதேபோல், பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் விளம்பரம் என, ஊடகத்துறை வளர்ச்சி, இன்று சிறப்பாகவே இருந்து வருவதால், மீடியா படிப்புகளான B.Sc. Visual Communication, Mass Communication, Public Relations, Journalism, Electronic Media போன்ற பட்டப் படிப்புகளும், நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய படிப்புகளாகும்.எனவே, காலங்காலமாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரேமாதிரியான படிப்புகளையே தேர்ந்தெடுக்காமல், உங்கள் ரசனை மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, வித்தியாசமான ஒரு பட்டப் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பதே சிறப்பாக அமையும்.

கட்டணங்கள் கடுமையாக உயரும் சேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு

ஜூன் 1 முதல் சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால் பலவிதமான கட்டணங்கள் கடுமையாக உயரப் போகின்றன.கடந்த, 2015ல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சேவை வரியை, 12.36 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார். அது கடந்த ஆண்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வந்தது. அதன்பின், நவம்பர் 1 முதல், ‘தூய்மை பாரதம்‘ திட்டத்துக்காக, 0.5 சதவீதம் கூடுதலாக சேவை வரி விதிக்கப்படுகிறது.இந்நிலையில், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், ‘கிரிஷி கல்யாண்’ எனப்படும், வேளாண் மேம்பாட்டு திட்டங்களுக்கு செலவிடுவதற்காக, சேவை வரி, மேலும் 0.5 சதவீதம் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜூன் 1 முதல் சேவை வரி விகிதம் மீண்டும் உயர்கிறது. அது இனி, 15 சதவீதமாக இருக்கும்.சேவை வரி உயர்வதால், கோடிக்கணக்கான மொபைல் போன் வாடிக்கையாளர்கள், இனி கூடுதல் கட்டணத்தை செலவிட வேண்டும். அதேபோல, குளிர்சாதன வசதி உடைய உணவகங்களில் சாப்பிடுவோரும், ‘பார்’களுக்கு செல்வோரும் கூடுதலாக செலவிட வேண்டும். மேலும், ஓட்டல்களில் தங்கும் கட்டணம், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கும் போது பத்திரப்பதிவு கட்டணம், விமான கட்டணம், கிரெடிட் கார்டுசேவை கட்டணம் உள்ளிட்டவையும் அதிகரிக்கின்றன.
நிறுவனங்கள் மீதான வரி மக்கள் தலையில் ஏற்றப்படும் கொடுமை
பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பில் உள்ள சில தனியார் துறைகளிடம், அவர்கள் அளிக்கும் சேவைக்காக மத்திய அரசு, சேவை வரி வசூலிக்கிறது. ஆனால், இதை நுகர்வோர் தலையில் தான் அந்த நிறுவனங்கள் கட்டுகின்றன. சேவை வரி, 1999ம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் கீழ், மறைமுக வரி விதியாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.மத்தியில், பாஜக ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில், சேவை வரி 2.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.நாட்டின் சுகாதாரம், விவசாய வளர்ச்சி போன்ற பிரதான துறைகளில் மத்திய அரசு தனது பொது முதலீட்டைப் படிப்படியாக சுருக்கிக் கொண்டது.
அதற்குப் பதிலாக மக்களின் தலையில் வரிச் சுமையை ஏற்றி, அதற்கான செலவினங்களை ஈடுகட்டப் போவதாக கூறுகிறது.மத்திய அரசு தூய்மைபாரதம் என்ற பெயரில் செஸ் வரியாக 0.5 சதவீத வரியை உயர்த்தியதைப் போல கிரிஷி கல்யான் செஸ் மூலம் சேவை வரியின்அளவு 15 சதவீதமாக உயர்ந்து மக்களின் பணத்தைத் தொடர்ந்து பறிக்க தயாராகிவிட்டது. இந்தவரிகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்காக என்றாலும், வாங்கும் சம்பளத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை வரியாக மட்டுமே செலுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜூன் 1ஆம் தேதி முதல் கிருஷி கல்யாண்வரி உள்பட 15 சதவீத சேவை வரி அமலாக்கப்படுவதால் மொபைல் சேவைக்கான கட்டணத்தைச் செலுத்தும் போதும் நாம் 15 சதவீதம் என்ற அதிகளவிலான சேவை வரியைச் செலுத்த வேண்டி இருக்கும்.
ஜூன் 1ஆம் தேதிக்குப் பின் ஹோட்டல், பிட்சாஹட், டாமினோஸ் போன்ற உணவகங்களிலும் 15 சதவீத சேவை வரி வசூல் செய்யப்படும்.பயணம் விமான டிக்கெட், ஆன்லைன் மூலம் பஸ் டிக்கெட் புக்கிங், ரயில் டிக்கெட் புக்கிங் எனப் பல்வேறு பயணச் சேவைகளிலும் 15 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டி இருக்கும். குறிப்பாகப் பிசினஸ் கிளாஸ் பயணிகளின் விமானக் கட்டணங்கள் உயரும்.இன்சூரன்ஸ், வங்கியில் லோன் பெறும்போது சேவைக் கட்டணம் என அனைத்து விதமான வங்கிமற்றும் இன்சூரன்ஸ் சேவைகளுக்கு 15 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுகிறது.சேவை வரி உயர்வினால் கேப் மற்றும் டாக்ஸிகட்டணங்களும் உயரும். இதனால் ஆன்லைன் மற்றும் மொபைல் செயலி மூலம் டாக்ஸி புக் செய்வது கடும் கட்டண உயர்வாக மாறும்.டிடிஎச் சேவை, பியூட்டி பார்லர், இன்சூரன்ஸ், பங்குச் சந்தையின் வர்த்தகக் கட்டணங்கள், கொரியர் சேவை, சலவை சேவை ஆகியவற்றின் கட்டணங்களும் உயர உள்ளது.அதுமட்டுமல்லாமல் குளிர்பானங்கள், பிளாஸ்டிக் பைகள், மதுபானம், சிட் ஃபண்ட், லாட்டரி, இசைக் கச்சேரி, திரைப்படம் மற்றும் தீம் பார்க் கட்டணங்களும் உயரப் போகின்றனசிகரெட் மீதான சேவை வரியை மீண்டும் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் சிகரெட் விலை ஜூன்1ஆம் தேதி முதல் உயரும் எனத் தெரிகிறது.

டுபாக்கூர் இயற்கை அங்காடிகளின் ஸ்தல புராணம்...

ஊரெங்கும் ஆர்கானிக் கடைகள், இயற்கை அங்காடிகள் வந்தவண்ணம் இருப்பதால் முதலில் எவையெல்லாம் ஆர்கானிக், எவையெல்லாம் டுபாக்கூர், உண்மையில் இந்த சந்தை நெறிப்படுத்தப்பட்டிருக்கிறதா என்று பார்ப்போம்.
மத்திய அரசு, NPOP எனப்படும் National programme for Organic Production பரிந்துரைகள் மூலம் APEDA வாயிலாக (Agricultural & Processed Food Products Export Development Authority) ஆர்கானிக் சான்றிதழ் வழங்கும் முகவாண்மை அமைப்புகளுக்கு (Certifying agencies) அனுமதி அளிக்கிறது. இது உலகளாவிய தரத்தில் இருப்பதால் ஐரோப்பிய யூனியன் மற்றும் சுவிட்சர்லாந்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவுக்கான தரம் அவர்களது USDA (United States Dept of Agriculture) வாயிலாக NOP (National Organic Program) மூலம் தரப்படும் பரிந்துரைகளின்படி நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தியாவில் ECOCERT, INDOCERT, India Organic, Bureau Veritas, OneCert, SGS Organic, ISCOP, Aditi, IMO Control, Control Union, Vedic Organic, FoodCert, NOCA, InterTek, Lacon Quality போன்ற பல சான்றிதழ்களும் தமிழக அரசின் TNOCD (TN Organic Certification Dept.) மூலமும், மேலும் அந்தந்த மாநில அரசுகளின் துறைகள் மூலமும் Accreditation வழங்கப்படுகிறது.
முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மேற்கண்டவற்றில் ஏதோ ஒரு சான்றளிப்பு நிறுவனத்தில் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் எந்தவொரு இரசாயன இடுபொருட்களையும் பயன்படுத்தாமல் இருந்து அதன்பின்னர் மேற்கொள்ளப்படும் மண், நீர் மற்றும் விளைபொருட்களின் ஆய்வுகளில் இரசாயனங்கள், MRL எனப்படும் Maximum Residue Limits-க்கு கீழ் இருக்கும்பட்சத்தில் மட்டுமே சான்றிதழ் கிடைக்கும். இல்லாவிடில் மேலும் ஒன்றிரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இவ்வாறு சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் பண்ணையில் பயிரிடப்படும் பயிர்களை அந்தந்த சான்றளிப்பு முகவாண்மை மூலமாக APEDA-வின் TraceNet-இல் பதிவு செய்துகொள்வதோடு உள்ளூர் கிராம நிர்வாக அதிகாரியின் சிட்டா அடங்கலிலும் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட நிலத்தின் சர்வே என்னுடன் GPS Coordinates-ம் ஏற்றப்பட்டு ஒரு உத்தேச மகசூல் நிர்ணயிக்கப்படும். அதாவது ஒரு ஏக்கர் ஆர்கானிக் வாழை பயிரிட பதிவு செய்துகொண்டால் நடவு செய்த தேதி முதல் தோராய அறுவடைக் காலம் மற்றும் மகசூல் TraceNet-இல் குறிக்கப்படும். அந்த பண்ணையிலிருந்து இந்த பயிரை அறுவடை செய்து இன்னாருக்கு, இத்தனை டன், இன்ன வாகனம் மூலம் அனுப்பப்பட்டது என்ற Transfer Certificate (TC) வாங்கிச்செல்லும் நபர்/நிறுவனம் மீது தரப்பட்டால் மட்டுமே அது ஒரு ஆர்கானிக் விளைபொருளாக ஏற்றுக்கொள்ளப்படும். அதனால் ஒரு ஏக்கருக்கு சான்றிதழை வைத்துக்கொண்டு, ஐநூறு டன் விளைபொருளை விற்று ஏமாற்றமுடியாது.
உங்களுக்கு விற்கப்படும் பொருள், ஆர்கானிக் என்று பிரீமியம் விலை கோரும்பட்சத்தில் TraceNet வாயிலாக அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ள TC இருக்கிறதா என்று கேட்டு உண்மையை அறிக. மேலே குறிப்பிடப்பட்டுள்ள சான்றளிப்பு நிறுவனங்களின் வணிக இலச்சினை பொறிக்கபட்டதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்க.
பல கடுமையான சோதனைகளைத் தாண்டி சந்தைக்கு வரும் ஆர்கானிக் பொருட்கள் மிக அதிக பிரீமியம் விலைக்குத்தான் விற்கப்படுகின்றன. IMO Control சான்றிதழ் கொண்ட ஆர்கானிக் தேயிலை 50 கிராம் இன்று சந்தையில் 450-500 ரூபாய்க்குக் கிடைக்கிறது. சாதாரண த்ரீ ரோசஸ் தேயிலை 50 கிராம் எவ்வளவு என்று உங்களுக்கே தெரியும். அதிலும் ஒரு பச்சைநிற தவளையின் படத்தை வணிக இலச்சினையாகக் கொண்ட Rainforest Alliance சான்றளிப்பு பெற்ற பொருட்களின் விலையைத் தேடி பார்க்கவும். சும்மா ஏசி அறைக்குள் ஒரு கீற்றுக்கொட்டகையைப் போட்டு, 'நாங்கள் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை அதனால் இதெல்லாம் ஆர்கானிக்' என்பதெல்லாம் எந்த வகையில் வரும் என்று தெரியவில்லை. ஆர்கானிக் இறைச்சிக்காக வளர்க்கப்படும் பறவைகள், விலங்குகள் free-range ஆக இருக்கவேண்டும் என்பதோடு Adequate facilities for expressing behavior in accordance with the biological and ethological needs of the species என்பது கட்டாயம். ஆனால் இன்று நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி என்று மக்களை அரைமெண்டலாக்கி விற்கப்படும் நாட்டுக்கோழிகள் பண்ணையில் வளர்க்கப்படுபவையே.
உதாரணமாக ECOCERT சான்றளிப்பு வாங்க மூன்றாண்டுகள் காத்திருப்பதோடு ஆண்டுக்கு ஏக்கருக்கு 7000 ரூபாய் கட்டணம் செலுத்தி சான்றிதழை உயிர்ப்புடன் வைத்திருந்தால்தான் சந்தையில் பிரீமியம் விலை கிடைக்கும். எத்தனை சராசரி விவசாயிகள் இதை செய்யக்கூடும்? இன்று சந்தையில் கிடைக்கும் 99% பொருட்கள் ஆர்கானிக் என்ற வறட்டு நம்பிக்கையில் உற்பத்தி செய்யப்படுபவை, அல்லது வாடிக்கையாளர்களின் ஈகோவை நிரப்ப போலியாக விற்கப்படுபவை. வேண்டுமானால் ஓர் ஆர்கானிக் கடையில் சென்று எத்தகைய சான்றிதழ் இருக்கிறது, எங்கே உற்பத்தி செய்யப்படுகிறது, TC இருக்கிறதா விசாரித்துப் பாருங்கள். அரிதிலும் அரிதாக சான்றிதழ் வைத்திருப்பவர்கள் எந்த கூச்சலும் இல்லாமல் அவர்களுக்கான வாடிக்கையாளர்களுடன் போய்க்கொண்டே இருப்பார்கள். இன்று இயற்கை விவசாயம் என்பது பாதுகாப்பான வங்கி சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு, வீடுகள் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருப்பவர்களுக்கு, பைனான்ஸ் அதிபர்களுக்கு ஒரு Status Quo மட்டுமே. கொஞ்சம் அப்பாவி விவசாயிகள் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்கப்பட்டதாலும், தங்களுடைய ஆண்ட பரம்பரை அதிகாரம் கண் முன்னே சிதைந்து வருவதாலும் என்ன செய்வதென்றே தெரியாத கையறு நிலையில் நாட்டுமாடு, A2 பால், இயற்கை விவசாயம் என்ற காலங்கடந்த சித்தாந்தங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு போவோர் வருவோரையெல்லாம் திட்டிக்கொண்டு உள்ளனர்.
உரங்களாகட்டும், பூச்சிக்கொல்லி மருந்துகளாகட்டும் ஓவ்வொன்றும் பலதரப்பட்ட ஆய்வுகளைக் கடந்துதான் சந்தையில் விற்கபடுகிறது. இடையிலும் பல சோதனைகளும், பயனாளிகளின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் மறு ஆய்வு முடிவுகளின்படி தடை செய்யப்பட்டுவிடுகிறது. அப்படியெனில் இத்தனை நாளாக விற்றதை என்ன செய்வது ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அறிவியல் ஆய்வுகள் ஒரு துறையில் சமகால உச்சகட்ட மனித புரிதல்களின்படி செய்யப்படுகிறது. பின்னாளில் அதன் புரிதல் அதிகரிக்கும்போதுதான் சில கண்டுபிடிப்புகளின் பலவீனங்கள் தெரியவரும். அத்தகைய சூழலில்தான் தடைகள் நடைமுறைக்கு வருகின்றன. உதாரணமாக மகிழ்வுந்துகளில் Takata நிறுவன Airbags வெடிக்கும்போது இரும்புத்தூள்களை மிக அதிக வேகத்தில் வீசியெரிவதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் 'இன்றைய அறிவியல் புரிதல்களின் உச்சபட்ச கருத்தாக்கங்களை வைத்துதான் இதை வடிவமைத்திருக்கிறோம், இனிமேல்தான் நீங்கள் கேட்கும் கோணத்தில் ஆய்வு செய்து ஏர்பேக்-களை வடிவமைக்க வேண்டும்' என்று சொல்லிவிட்டது. சிறு தவறுகள் இருக்கிறது என்பதற்காக அதை முற்றிலும் ஒதுக்க முடியாது. அப்படிப் பார்த்தால் தமிழகத்தில் அதிக சாவுகளை உண்டாக்கும் ஆட்டோமொபைல் முழுவதையும் தடைதான் செய்யவேண்டும்!
ஆக, இன்று காளான்போல் முளைத்திருக்கும் திடீர் குபீர் இயற்கை அங்காடிகள், ஆர்கானிக் விவசாய வல்லுனர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில், தங்களின் சமூகத்தின் மீதான தார்மீக கோபத்தை பலவாறு வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களிடம் சென்று நீங்கள் இந்த சான்றிதழ் மேட்டரைக் கேட்டு கிளறிவிட்டால் என்ன நடக்கும்? இந்த அரசுகள் பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கத்தால் இயற்கை விவசாயம் செய்பவர்களை நசுக்க சான்றளிப்பு என்ற பெயரில் லைசென்ஸ் ராஜ் கால அரசைப்போலவே நடந்துகொள்கின்றன. இடையில் மானே தேனே பொன்மானே என அமெரிக்க ஏகாதிபத்தியம், தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவன அடிமைகள், மூளைச்சலவை செய்யப்பட்ட முட்டாள்கள் என ஒரு சிறப்பான லெக்சர் கிடைக்கும்.
எந்தவொரு பரப்புரைக்கும் மயங்காமல் இதையெல்லாம் தாண்டினால் அது நிச்சயம் ஜென் நிலையே!

அமெரிக்காவில்...பிரமாண்டான கோவில்!!!

ஓர் இனத்தின் அடையாளத்தை உலகுக்கு காட்டும் முக்கிய அம்சங்களில் கோவில்களும் அடங்கும். உலகின் முக்கிய இனங்களின் தொன்மையை அந்த கோவில்களின் சிற்பங்களிலும் அதன் வரலாற்றையும் கண்டே நாம் பெருமைக் கொள்கிறோம்.

அவ்வகையில் நிலப் பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய கோவிலாக உருவெடுத்து, கூடிய சீக்கிரத்தில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா காணவிருக்கிறது நியூ ஜெர்சியில் உள்ள அக்‌ஷர்தாம் கோவில். 150 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோவில் 162 ஏக்கர் பரப்பளவில் நிமிர்ந்து நிற்கிறது. தற்பொழுது உலகின் மிகப் பெரிய கோவிலாக திகழ்வது தமிழ்நாடு, ஸ்ரீரங்கத்தில் 155.92 ஏக்கர் பரப்பளவில் வீற்றிருக்கும் ஸ்ரீ ரங்கசுவாமி கோவிலாகும்.
டெல்லி மற்றும் காந்திநகர் இந்தியாவில் உள்ள கோவில்களின் சாயலில் கட்டப்படும் இந்தக் கோவில் சுவாமி நாராயணின் திருத்தலமாகும். போச்சன்ஸ்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புருசோத்தம் சுவாமி நாராயண் ஷன்ஸ்தா தலமையில் 2013 -ல் தொடங்கப்பட்ட இந்தக் கோவில் தற்பொழுது பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டாலும் இதன் கட்டுமாணப் பணி 2017- இல் தான் முடியும்.
வடக்கு மற்றும் தென் இந்தியாவின் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ஏறக்குறைய 2.000 சிற்பிகளின் வேலைப்பாட்டில் சிற்பங்களும் தூண்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கைவண்ணங்கள் நியூ ஜெர்சிக்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டன. இவை அனைத்தும் இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 13,000 பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்டவை.
இந்த கோவிலின் முக்கிய கோபுரம் 134 அடி உயரமும் 87 அடி நீளமும் கொண்டது. 108 தூண்களைக் கொண்ட இந்தக் கோவிலில் 3 முக்கிய கற்பக் கிரகங்களும் இந்து சில்பா சாஸ்த்திரத்தின் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுள்ளன. ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ள இந்த வடிவமைப்பு நியூ ஜெர்சியின் கடும் குளிர் பருவத்தை எதிர்கொண்டு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு மாடிகளைக் கொண்ட இந்தக் கோவிலில், இந்திய வரலாற்றையும் இந்து சமயத்தையும் எடுத்துரைக்கும் தகவல்கள் நிரம்பிய கண்காட்சி கூடமும், இளைஞர்களுக்கான நடவடிக்கை கூடமும் பிரத்தியேகமாக ஒதுக்கப்படுள்ளது.
நியூ ஜெர்சியில் அதிகரித்து வரும் இந்து மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் இந்து சமயத்தையும் இந்தியர்களின் கலச்சாரத்தியும் பிறருக்குத் தெரிவிக்கும் முக்கியச் சுற்றுலாத்தலமாகவும் இது திகழ்கிறது.



நண்பர்களைைப் பற்றி் பாறைல எழுந்துங்க இல்லன்னா மணலில் எழுந்துங்க ஆனா ஃபேஸ்புக் சுவற்றில் மட்டும் எழுதாதீங்க .

ராமுவும் சோமுவும் நண்பர்கள்..ஒரு நாள் இருவரும் கடற்கரைக்கு சென்றனர்..அங்கே அற்ப காரணத்திற்காக இருவருக்கும் கருத்து வேறுபாடு..கோபத்தில் ராமு சோமுவைப் பளார் என்று அறைந்து விட்டான்.இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சோமு துக்கம் தாளாமல் தனியாக போய் உட்கார்ந்துகொண்டு "இன்று என் நண்பன் ராமு என்னை அடித்து விட்டான்" என்று மணலில் எழுதினான்..கடலலை வந்து அதை அழித்து விட்டது..மனவேதனையோடு உட்கார்ந்திருந்த சோமுவை திடீரென்று ஒரு பெரிய அலை அடித்து இழுத்துக் கொண்டு போனது..இதைப் பார்த்த ராமு பதறி ஓடிப் போய் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கடலில் குதித்து சோமுவைக் காப்பாற்றினான்.."இன்று என் நண்பன் ராமு என் உயிரைக் காப்பாற்றினான்" என்று அருகில் இருந்த பாறையில் செதுக்கி வைத்தான்..

இப்படித்தான் அடுத்தவர்கள் நமக்கு செய்யும் தீங்குகளை மணலில் எழுதி மறந்து விட வேண்டும் ..அடுத்தவர்கள் செய்த உதவிகளை மட்டும் மனதில் எழுதி வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல வேண்டும்.
அடுத்தவர்களுடன் பிரச்சனை வந்தால்,அவர்களைக் குறித்த எதிர்மறை விஷயங்களை நினைக்காமல் அவர்கள் நமக்கு செய்த நல்ல விஷயங்களை ,உதவிகளை,நிகழ்ந்த இனிமையான உரையாடல்களை மட்டும் அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டிருந்தால் அது மீண்டும் உறவுகளைப் புதுப்பிக்க வில்லையென்றாலும் நம் உற்சாகத்தை இழக்க செய்யாமல் செய்யும்.. மனதும் காற்றில் பறப்பது போல் லேசாக இருக்கும்..
அவர்களிடம் இறு(ரு)க்கமாக இல்லாமல் லூசாக இருந்தாலே மனதும் லேசாக இருக்கும் என்றும் !

காசியின் சிறப்பு!!!...........

காசியில் கருடன் பறப்பதில்லை!!!
காசியில் கருடன் பறப்பதில்லை, கவுளி ஒலிப்பதில்லை ஏன்???
இராவண சம்ஹாரம் முடிந்ததும் ராமேஷ்வரம் வந்த ஸ்ரீராமர் சிவபெருமானை பூஜிக்க விரும்பி லிங்கம் ஸ்தாபிக்க நினைத்தார்.
ஹனுமானை அழைத்து காசிக்குப்போய் ஒருசிவலிங்கம் எடுத்துவா என்று கட்டளையிட்டார்.
காசிக்குச் சென்ற ஆஞ்சநேயர் அங்கு அதிகமாக லிங்கம் இருந்த இடத்துக்குச் சென்று எது சுயம்பு லிங்கம் எப்படிக் கண்டு எடுத்து செல்வது என்று தடுமாறினார்!
அப்போது ஒரு சிவலிங்கத்துக்கு மேலே கருடன் வட்டமிட்டார்!
அதுதான் சுயம்புலிங்கம் என்று கண்டு கொண்ட ஆஞ்சநேயர் இதை எடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தார்.
அதை ஆமோதிப்பது போல் பல்லி சத்தமிட்டு ஆதரித்தது.
அந்த சுயம்புலிங்கத்தை எடுத்துக் கொண்டு அவர் வெளியே வரும்போது காலபைரவர் இது என் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
என்னைக் கோட்காமல் நீ எப்படி எடுத்துச் செல்லலாம் என்று கூறி தடுத்தார்.
அவரோடு வாக்குவாதம் செய்யும்போது கவுளி என்ற பல்லியும் கருடனும் ராமர் காரியத்துக்கு உதவி செய்தார்கள் என்று ஹனுமன் கூறினார்!
என் கடமைக்கு குந்தகம் உண்டாக்கிய பல்லியே நீ இனி காசியில் ஒலிக்கக் கூடாது!
ஏ கருடா!
நீ காசியில் பறக்கக் கூடாது என்று காலபைரவர் சாபம் இட்டார்!
எனவே இப்போதும் கருடன் காசியில் பறப்பதில்லை!
கவுளி சப்தமிடுவதில்லை இந்த அதிசயம் இன்றும் காசியின் அதிசயம்!
காசி விசுவநாதர் கோயில் (ஹிந்தி:काशी विश्वनाथ मंदिर, காசி விஸ்வநாத் மந்தீர்) என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம் வாராணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பெற்றாலும் பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது.
விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.
தல வரலாறு
தசாஸ்வேமேத் (காட்) நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு கோயில் பக்கம் செல்கிறது. இந்தக்கோயில் 1785இல் மகாராணி அகல்யா பாயினால் (இந்தோர்) கட்டப்பட்டது.
தலபெருமை
இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்துகொள்கின்றனர். சிவனை இலைகளைப் போல் நிறைய நல்ல பாம்புகளுடன் அலங்கரித்த நிழல்கள் இருக்கும்போது அவர் தலையில் கங்கை நீரை ஊற்ற வைத்தும், ஐந்து தடவை செய்யும் ஆரத்தி முக்கியமானது. பூஜை நடக்கும்போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசிக்கும்போது கோயிலின் உள்ளே நுழைய மிகவும் உற்சாகம் கொடுக்கிறது.
கோயில் அமைப்பு
இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது. காலையிலும் மாலையிலும் விசுவநாதருக்கு பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காசி விசுவநாதரால் காசி முக்கிய ஸ்தலமாக இருக்கிறது. கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது.
அன்னபூர்ணா கோயில்

அன்னபூர்ணா கோயில் காசி விசுவநாதர் கோயிலின் அருகே உள்ளது. இது பதினெட்டாவது நூற்றாண்டில் கட்டப்பெற்றது. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் வலப்புறம் இக்கோயில் உள்ளது.
காசி விசாலாட்சி கோயில்
காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வழியே காசி விசாலாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லலாம்.
கங்கா ஆர்த்தி
வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் தினமும் கங்கை ஆறுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்பெறுவது கண்கொள்ளாக்காட்சியாகும். இந்நிகழ்வை கங்கா ஆர்த்தி என்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கங்கா ஆர்த்தியை ஆர்வமுடன் பார்க்க வருகின்றார்கள்.
கட்டுப்பாடு
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெண்கள் சேலை அணிந்துதான் கோவிலுக்குள் வர வேண்டும். டவுசர், கை பகுதி இல்லத மேல் சட்டை அணிந்து கோவிலுக்குள் வர அணுமதி கிடையாது.
சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன். அவன் அசுவமேத யாகம் செய்தான். இதனால் இந்திரன் தனது பதவி பறிபோய்விடும் எனப் பயந்து அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத் துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். ஆனால் முனிவரின் கோபப்பார்வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முத்தி அடைய வில்லை. அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.
கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை, ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான். அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பின் பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே காசியின் சிறப்பு ஆகும்.


Sunday, May 29, 2016

திருந்துங்கடா...

இன்று மதுரையில் இருந்து சென்னை செல்லும் தனியார் பேரூந்துகள் எல்லாம் 2000, 3000 என்று விலை வைத்து விற்கிறார்களே, இதற்கு எதுவும் செய்ய முடியாதா?
 எதை ஏலம் விடுவது, எதை முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிப்பது , எதை தகுதியின் அடிப்படையில் அளிப்பது என்பது குறித்து தெளிவான நடைமுறைகள் உள்ளன

உதாரணமாக,
அண்ணா பல்கலைகழகத்தில் இளங்கலை பொறியியல் (B.E., B.Tech.,) மாணவர் சேர்க்கை தகுதியின் அடிப்படையில் (மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்படவேண்டும்). யார் அதிகம் மதிப்பெண் பெற்றுள்ளார்களோ, அவர்கள் விரும்பிய பாட பிரிவு அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். அப்படித்தான் நடக்கிறது. அது தான் சரி . . . . யார் அதிகம் பணம் அளிக்கிறார்களோ, அவர்
களுக்கு இடங்கள் வழங்கப்படகூடாது. இடங்களை ஏலம் விட்டால் அரசிற்கு அதிகம் பணம் கிடைக்கும். ஆனால் அது முறையல்ல . . . . அண்ணா பல்கலைகழகத்தில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் அரசிற்கு வருடத்திற்கு இத்தனை கோடி நஷ்டம் என்று யாராவது கணக்கு காண்பித்தால் அதை நம்பி ஏமாறாதீர்கள்

அதே போல்
கல்லூரி விடுதியில் அறைகள் என்பது முதலில் வருபவருக்கு முன்னுரிமை (First Come First Serve) என்ற அடிப்படையிலேயே வழங்கப்படவேண்டும். அப்படித்தான் நடக்கிறது. அது தான் சரி . . . . யார் அதிகம் பணம் அளிக்கிறார்களோ, அவர்களுக்கு கல்லூரி விடுதி அறைகள் வழங்கப்படகூடாது. விடுதி அறைகளை ஏலம் விட்டால் அரசிற்கு அதிகம் பணம் கிடைக்கும். ஆனால் அது முறையல்ல . . . . அண்ணா பல்கலைகழகத்தில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அறைகள் ஒதுக்கப்படுவதால் அரசிற்கு வருடத்திற்கு இத்தனை கோடி நஷ்டம் என்று யாராவது கணக்கு காண்பித்தால் அதை நம்பி ஏமாறாதீர்கள்
அதே போல்
விடுதி உணவகத்திற்கு வாங்கப்படும் உணவு மூலப்பொருட்களோ, அல்லது பிற பொருட்களோ ஏலம் அடிப்படையில் வாங்கப்பட வேண்டும். எதை ஏலம் விடுவது, எதை முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிப்பது , எதை தகுதியின் அடிப்படையில் அளிப்பது என்பது குறித்து தெளிவான நடைமுறைகள் உள்ளன
அனைத்திற்கும் ஏலம் தான் தீர்வு என்று நினைப்பது மூடத்தனம்
பேரூந்து இருக்கைகள் என்பது முதலில் வருபவருக்கு முன்னுரிமை (First Come First Serve) என்ற வகையிலேயே வழங்கப்படவேண்டும். அது தான் நியாயம். ஏலம் (Auction) விட்டால் பேரூந்து நிறுவனத்திற்கு அதிகம் லாபம் கிடைக்கும். ஆனால் நஷ்டப்படபோவது மக்கள் தான்
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையே தவறு. அந்த முறையே ஊழல். ஏலம் என்பதே சரியான நடைமுறை என்று உங்களை எல்லாம் முட்டாளக்கி, உங்களுக்கு குறைந்த செலவில் சேவைகள் கிடைக்க செய்ததை தவறு என்று சொல்லி, தனியார் பெரு முதலாளிகளுக்கு அதிகம் லாபம் கிடைக்கும் ஏல முறையே சரி என்று உங்களை நம்ப வைத்தார்கள் . . .அதன் நீட்சியே இன்று நீங்கள் 500 ரூபாய் பேருந்து பயணத்திற்கு 3000 கொடுக்க வேண்டி உள்ள நிலை உள்ளது. இந்த பதிவுக்கு சம்பந்தமேயில்லாத 2ஜி பிரச்சினை உங்கள் மூளைக்கு வந்துபோனால் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என அர்த்தம்.

சாப்பிட்ட‍பிறகு பாதாம் பதமாய் சாப்பிட்டு வந்தால்… – (பாதகமில்லாத சாதகமான உணவு)

சாப்பிட்ட‍பிறகு பாதாமை பதமாய் சாப்பிட்டு வந்தால்… – (பாதகமில்லாத சாதகமான உணவு)

சாப்பிட்ட‍பிறகு பாதாமை பதமாய் சாப்பிட்டு வந்தால்… – (பாதகமில்லாத சாதகமான உணவு)
புரதமும் கொழுப்பு சத்தும் அதிகமுள்ள ஒருவகை எண்ணெய் வித்துதான் பாதாம். இது கொட்டை
வகையினைசார்ந்தது  100கி. பாதாம் பருப்பில் 58% கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமி ல்லாத சாதகமான உணவு இது என்றே மருத்துவர்கள் கூறுகி ன்றார்கள். 

தினமும் நீங்கள் சாப்பிட்ட பிறகு 4 பாதாம் பருப்புக்க ளை எடுத்து வாயில்போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் சாப்பிட்ட பிறகு உங்கள் உடலில் சுரக்கும் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்க்க உதவுகிறது.
சர்க்க‍ரை நோயாளிகள், உடல்மெலிய விரும்புவர்கள் மற்றும் இதயநோ யினால் பாதிக்க‍ப்பட்டவர்கள் உட்பட பலருக்கும் ஏற்ற தொரு மருந்துணவு ஆகும். இன்னும் சொல்ல‍ப்போனா ல், நீரிழிவுநோயாளிகள் தினமும் 5பாதாம் பருப்புக்க ளை சாப்பிட்டு வந்தால் அந்நோய்களின் வீரியம் குறை ந்து விரைவில் அந்நோய்களிலிருந்து விடுபட வாய்ப்பு அதிகம். இந்த பாதாம் பருப்புக்களை ஊற வைத்தோ , அப்ப டியே சாப்பிட்டும் வரலாம்.
பாதாம்பருப்பு  நன்மை என்றாலும் சிலரது அதாவது உங்களது உடலுக்கு இது உகந்ததாக என்பதை உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து அவரது ஆலோசனைப்படி உட் கொள்ள‍வும்.

புருவ அழகு – எந்த மாதிரியான முக அமைப்புக்கு எந்த மாதிரியான புருவம் அழகாக இருக்கும்- விரிவான குறிப்பு

எந்த மாதிரியான முக அமைப்புக்கு எந்த மாதிரியான புருவம் அழகாக இருக்கும்- விரிவான குறிப்பு

புருவ அழகு – எந்த மாதிரியான முக அமைப்புக்கு எந்த மாதிரியான புருவம் அழகாக இருக்கும்- விரிவான குறிப்பு
புருவ அழகு; கண்களும்தான். இதில், புருவத்தின் அள வைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக
அழகு கொடுக்க முடியும்.
வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத் தமாக இருக்காது. முகத்திற்கு தக்க படி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியி ன் அளவு ஆகியவற்றிற்கு தக்க படி, புருவத்தை அமைக்க வேண்டும்.
முகத்திற்கே பல வடிவம் இருக்கிறது. சதுர முகம், நீண்ட முகம், முக்கோண முகம், வட்டமுகம் போன்றவை குறிப் பிடத்தக்கவை. இந்த முக அமைப்புக் கு பொருத்தமானதாக, புருவம் இருக்க வேண்டும்.
அதாவது . . .
சதுரமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு,
சதுரமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, லே சாக ஒரு கோடு போல புருவ அமைப்பு இருந்தால்,அது அழகாக இருக்காது. புருவம் பெரிதாக அழுத்தமாக இருந்தா ல் அழகு அதிகரிக்கும். புருவ முடிகளின் வரிசையில் உள் பக்கமாக இருப்பவற்றைத்தான் அகற் ற வேண்டும். அதுதான் முகத்தின் சதுரத் தன்மையைத் குறைத்துக் காட்டும்.
நீள்வட்ட முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு,
நீள்வட்ட முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, இவர் கள் புருவம்  லேசாக மேலேற வெளிப்புறம் கொ ஞ்ச மாகவே கீழிறங்க வேண்டும். பார்ப்பதற்கு, தூரத்தில் பறக்கும் பறவை மாதிரி இருக்கும். வெளிப்பு றமாக இருக்கும் தேவையற்ற முடி யை அகற்றி விடுங்கள். முடியுமிட த்தில் மிகவும் மெலிதாக இருக்கட் டும்.
வட்ட முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு
வட்ட முக அமைப்பு கொண்ட பெண் களுக்கு புருவம் மிகவும் நீளம் குறைந்ததாய் இருக்க வேண்டும். பருமனாக ஆரம்பித்து, அடுத்தடுத்து க் குறுகிக் கொண்டே இருக்க வேண் டும். வெளிப்புற முடிவில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி விடுங்கள்.
நீளமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு:
நீளமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, எவ்வ ளவுக்கெவ்வளவு நேராக, வளையாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. புருவத் தின் ஓரத்தில் மட்டும் மிகச்சிறு அளவு வளைந்து விடுங்கள்.
புருவம் தீட்ட. . .
புருவம் தீட்டப் பொதுவாக ஐப்ரோ பென்சில்களைப் பயன்படுத்துவதே நல்லது. விரல் நுனியில் மை தொ ட்டு இழுக்கும் பழக்கத்தைத் தவிர்த்து விடவும். ஐப் ரோ பென்சிலை எவ்வளவு மெல்லிய தாக முடியுமோ அவ்வளவு மெல்லிய தாகப் பயன்படுத்தவும். உட் புறமிருந் து வெளிப்புறமாகத்தான் பென்சிலால் புருவம் தீட்ட வேண்டும். ஒவ்வோர் இழையாக இட, இப் புருவம் பொலிவு பெறும். அழுத்தமான தடித்த கோடுகள் ‘செயற் கை’ என்று காட்டிக் கொடுத்துவிடும்.
புருவத்தின் அழகை மேம்படுத்தும்போது,
புருவத்தின் அழகை மேம்படுத்தும்போது, கண் அழகை யும் கவனத்தில் கொள்ள வேண்டும். கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தா ல், புருவங்களுக்கு இடையில், அதி க இடைவெளி இருப்பதே அழகாக இ ருக்கும். நெருக்கமான கண்களைக் கொண்டவர்களுக் கு, அடர்த்தியாக புருவம் இருந்தால், அது அழகை குறை த்து விடும்.
மூக்கில் இருந்து, கண்கள் அதிக இடைவெளியாக இருந்தால்,
மூக்கில் இருந்து, கண்கள் அதிக இடைவெளியாக இ ருந்தால், புருவங்களுக்கு இடையேயான தூரம், குறை க்கப்பட வேண்டும். முக அழகுக்கு பொருத்தமில்லாத பெரிய நெற்றியை கொண்டவர்கள், புருவத்தின் அள வை பெரிதாக்கினால், நெற்றி அளவு சிறிய தாகத்தெரியும். சிறிய நெற்றியை கொ ண்டவர்கள், நெற்றியை பெரிதாக்க, புருவத்தின் அளவை குறைக்க வேண் டும்.
பிரஷ் செய்யத் தொடங்கும்போது
பிரஷ் செய்யத் தொடங்கும்போது முதலில் வெளிப்புற மிருந்து உட்புறமாகப் பிரஷ் செய்ய வேண்டும். அப்போதுதான் புருவத்துக் கிடையில் படிந்திருக்கும் பவுடர் போன் றவைநீங்கும். பிறகு பிரஷை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தம் செய்த பிறகு கீழிருந்து மேலாக தொடர்ந்து உள்ளிரு ந்து தொடங்கி வெளிப்புறமாக அதாவது புருவத்தின் போக்கில் பிரஷ் செய்தால் மிக நன்றாக அமைந்துவிடும்.
புருவம் மிக சிறியதாக இருப்பவர்கள்,
புருவம் மிக சிறியதாக இருப்ப வர்கள், புருவத்தில் ஆமணக்கு எண்ணெய் தேய்த்தால், புருவம் அடர்த்தியாக வளரும்.
புருவங்களை த்ரெட்டிங் செய் யும் போது . . .

பெண்கள் கூந்தலுக்கு அடுத்த படியாக எப்போதும் ஆர் வம் காட்டுவது புருவங்களின் மீது தான். இதற்கு டீன் ஏஜ்… மிடில் ஏஜ்.. ஓல்டுஏஜ்.. என்று எந்தவயதும் விதிவிலக் கல்ல! டீன் ஏஜ் காலத்தில், ஹார்மோன் மாற்றம்காரணமாக புருவங்களில் புசு புசு வென காடு போல் முடி வளர்வது இயற்கையே.
ஆனால், `அழகாக இல்லையே’ என் று அதன்மீது கை வைக்க ஆரம்பித்து விடுகிறோம். அந்த வகையில், புருவங்களை த்ரெட்டி ங் செய்யும் போதுமிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் -குறிப்பாக டீன் ஏஜ் பெண் கள். த்ரெட்டிங் என்பதை செய்ய ஆரம்பித் தால், அதன் பிறகு முடிகள் கம்பிபோ ல் திக்காக வளர ஆரம்பித்துவிடும்.
அதுமட்டுமல்ல. ஒருதடவை த்ரெட்டி ங்செய்தால், தொடர்ந்துசெய்து கொ ண்டே இருக்க வேண்டும். இல்லை யென்றால் புருவங்களில் இருக்கும் முடிகளுடைய வளர்ச்சி தாறுமாறாக மாறி, முக அழ கையே கெடுத்து விடும். மழிக்கப்பட்ட இட ங்களில் முடிக்கால்கள் தோன்றி நம் முகத்தையே விகார மாகக் காட்டி பயமு ருத்தும்.
புருவத்தில் முடி குறைவாகவும் மெல்லியதாகவும் இ ருந்தால், விளக்கெண்ணை வைத்து தினமும் இரண்டு வேளை நன்றாக புருவத்தை நீவி விடவும். இதன் மூலம் பலவீனமா ன புருவம் பலமான / அடர்த்தியா ன புருவமாக மாறிவிடும். அதன் பின் சீராக்கி வடிவமைத்தால், கண் களின் அழகையும் முக அழகையும் அது அதி கரிக்கும்.
இரவில், புருவத்தின் மேல் கோல்டு கிரீம் தடவிக் கொண்டு படுக்கவும். இது ஏ.சி. அறையி ல் இருப்பதால் ஏற்படும் வறட்சியைப்போக்கும். எந்த ஒரு காரணத்துக்காகவும் சருமம் வறட் சி அடையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரை கள், பால், தயிர், மோர் போன்றவை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து க் கொள்ள வேண்டும். எல்லாம் சரி! ஆனா, த்ரெட்டிங் செய்யாமல இருக்க முடியலையே…! என்பவர்களுக்கு … இதோ சில டிப்ஸ்கள்!
* த்ரெட்டிங் போகும் முன்பாக கண்களைச் சுற்றி எண் ணெய் தடவிக்கொள்ள வேண்டும். பிறகு கழுவிவிட்டு, த்ரெட்டிங் செய்தால்… புருவம் வில் போன்ற அழகான வடிவத் துக்கு மாறிவிடும். த்ரெட்டிங் செ ய்துகொள்ளும் போது தசையெ ல்லாம் சுருங்கக் கூடாது என்ப தற் காக கண்களை கையால் அழுத்திக் கொண்டு தான் செய் வார்கள்.
முதன் முறையாக செய்து கொள்பவர்களுக்கு எரிச்சலு டன் வலியுடன் வீக்கமும் உண்டாகும். இந்த வீக்கம் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும். வீக்க த்தைப் போக்க, ஒரு நாள் வைட்ட மின்-ஈ ஆயில், மறுநாள் பாதாம் ஆயில், இன்னொரு நாள் வெண் ணெய், தேங்காய் எண்ணெய், ஆயி ல் க்ரீம் என மாறி மாறி பூசினால் வீக்கம் மறையும்.
அத்துடன், கண்களும் அழகாகத் தோற்றமளிக்கும். சில பெண்களு க்கு இரு புருவத்துக்கும் இடையே முடி சேர்ந்து கூட்டுப் புரவம் என்பதாக இருக்கும். பொட்டு வைத்தால் கூடஅழகாகத்தெரியாது. இக்கூட்டுப் புருவ முடிகளை அகற்ற.. கஸ்தூரி மஞ்சள் தூள், கிழ ங்கு மஞ்சள் தூள், கடலை மாவு ஆகி யவற்றை தலா ஒரு டிஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து பேஸ்ட் ஆக்கு ங்கள்.
இதை மூக்கின்நுனி பகுதியியல் இருந்து புருவம் வரை `திக்’காக பூசி, அரை மணி நேரம் கழித்து மெல்லிய காட்டன் துணியால் ஒற்றி எடுங்கள். இப்ப டித் தொடர்ந்து செய்து வரும் போது அந்த இடத்தில் முடிகள் உதிர்ந்து, முகம் பளிச்சிடும்.
உங்கள் அழகு புருவங்களை மெருகேற்ற‍. . . (இதை உங்களு க்கு நீங்களே செய்யலாம்)
புருவங்கள் முகத்தின் சிறந்த அம்சங்களில் ஒன்று. புருவங்கள் அழகாக இருந்தால் உங்கள் கண்களில் அழகு கூடும், முகமே புது பொ லிவு பெறும். ஆனால் புருவங் களை சரியாக வடிவமைப்பதே பலருக்கு பெரும் பிரச்சனையா க உள்ளது!புருவங்களை உங்க ள் முகத்துக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்க குறிப்பு:
தேவையான பொருட்கள்:
டுவீஜர் (புருவத்தில் உள்ள தேவை இல்லாத முடிக ளை அகற்ற)

புருவத்திற்கான பிரஷ் (பல் தேய்க் கும் பிரஷ் கூட உபயோகிக்கலாம்)
ஆஸ்ட்ரின்ஜென்ட் (சருமத்தை மிருது வாக்கி, வலியை குறைக்க)
கண்ணாடி (அவசியம் தேவை)
சிறிய கத்தரிக்கோல் (புருவத்தின் முடியை சரி செய்ய)
ப்ரோ பென்சில்
முதலில் புருவத்தை மேல் நோக் கி பிரஷ் செய்துவிடவும். புருவத்தி ன் வளைவை விட நீளமாக உள்ள முடிகளை கத்தரியால் வெட்டி விடவும். புருவங்கள் கண்களி ன் ஒரு முனையில் ஆரம்பித்து மறு முனையில் முடிய வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.நீங்கள் எந்த வடிவத்தில் உங்கள் புருவத் தை வடிவமைக்க விரும்புகிறீ ர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். ஆஸ்ட்ரி ங்ஜென்ட்டை புருவத் தின் மேல் தடவவும்.புருவத்தின் மேல் பக்கத்திலிரு ந்து முடியை எடுப்பதை தவிர்க்க வேண்டும். புருவத்தின் கீழ் உள்ள முடிகளை ஒவ்வொன்றாக டு வீஜரால் எடுக்கவும். ஒரு பக்கம் புரு வத்தை சரிசெய்த பிறகு மறுபக்கமும் அதே வடிவத்தில் அமை ய வேண்டும் என்பதை கவனத்தில் வைக்கவும். அடி க்கடி கண்ணாடியில் சரி பார்க்கவும்.ஐபுரோ பென்சிலா ல் புருவத்தில் உள்ள காலியான இடங்களை நிறப்ப வும்.
கவனம்: மிக மெல்லியதாக புருவத்தை அமைப்பதை தவிர் க்கவும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...