Tuesday, August 9, 2011

சமச்சீர் கல்வி தீர்ப்பு -ஜெயலலிதாவுக்கே வெற்றி..!

சமச்சீர் கல்வியை பொறுத்தவரை 2 ஆம் வகுப்பு பாடம் என்பது ஒரு வாரத்தில் குழந்தைகள் மனப்பாடம் செய்து ஒப்பிக்கலாம் என்பது போல இருப்பதாக,பல பெற்றோர்களும் குறைபட்டுக்கொண்டனர்


.பள்ளிக்கு பாடநூல் வந்தபின் பெருவாரியான மக்களும் ஜெயலலிதா ஏன் இதை எதிர்த்தார் என்பதை புரிந்துகொள்வார்கள்..காரணம்,தி.மு.க வினர் மகா மட்டமான ஒரு கல்வி திட்டத்தை சமச்சீர் எனும் பெயரில் புகுத்தி,அதில் தங்கள் கவிதையை நுழைத்து ,10 வருசம் கழிச்சு வரப்போகும் மடையன், கலைஞர்னா இன்னொரு திருவள்ளுவர் னு நினைச்சுகிட்டும்னு தங்கள் வேலையை காட்டியிருந்தாங்க.அதையெல்லாம் பார்த்த புரட்சி தலைவி,இப்படி கூட ஒரு பொழப்பு பொழைப்பாய்ங்களா என வேதனைபட்டு அந்த பக்கங்களை கிழிக்க உத்தரவிட்டார்.


படத்தாயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள் பாராட்டு கூட்டம் நடத்துகிறோம் என சொல்லியும் வேண்டாம் என மறுத்தவர் ஆச்சே....புகழ்சிக்கு நாக்கை தொங்கப்போடுபவர்கள்தான் சமச்சீர் என்ற பெயரில் பாடத்திட்டத்தை மாற்றி தங்கள் கை வேலையை காட்டினர்.இதை புரிந்துகொள்ளாத நடுநிலையாளர்களும் இது தவறு என்றே வாதிட்டனர்.இன்று உச்சநிதிமன்றமும்...சமச்சீர்கல்வியை இன்றே...அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது..

போங்கய்யா போங்க....புரட்சி தலைவி,இதயதெய்வம் தமிழக முதல்வர் ,ஜெயலலிதா சம்ச்சீர் கல்விக்கு நேற்றே தீர்ப்பு வழங்கிவிட்டார்.சமச்சீர் கல்வி உறுதின்னு நேத்தே எங்களுக்கு தெரிஞ்சிடுச்சி...அப்படி பார்த்தா ஜெயலலிதாவுக்கேவெற்றி....தி.மு.க காரங்களுக்கு ரொம்ப குஷியா இருக்காங்க.. 

பல கோடி கொள்ளையடிச்ச,முக்கிய முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போனப்ப,மக்கள் அடைந்த மகிழ்ச்சியை இன்று ஒரு நாள் மட்டும் தி.மு.க வினர் அனுபவிக்கிறார்கள்..அனுபவித்துவிட்டு போகட்டும்...விடியற்காலை போலீஸ் வந்து கதவை தட்டுமே..நில அபகரிப்பு வழக்கில்..?அதுவரை சந்தோசப்படட்டும்.

உச்சநீதிமன்றமாம்...தீர்ப்பாம்..அடுத்தவருசம் சமச்சீரை திருத்தக்கூடாதா..அப்ப பார்த்துகிடுறோம்...ஜெய்ஹிந்த்

 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...