நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சுயதொழில் தொடர்புடைய கட்டுரையை எழுதுகிறோம்.
கடந்த சில நாட்கள் முன்னர் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சார்பில் டீலர்களுக்கு விண்ணப்பங்கள் கேட்டுஇருந்தார்கள். இதற்கான கடைசி தேதி நவம்பர் 12, 2014.
நாமும் ஆர்வமாக இருந்ததால் சில தகவல்களை சேகரிக்க முற்பட்டோம். இறுதியில் சில தனிப்பட்ட காரணங்களால் தொடர முடியாமல் போய் விட்டது. ஆனாலும் சேகரித்த தகவல்களைப் பகிர்வது நமது வாசகர்களுக்கு பலனாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்த டீலர்களுக்கான விளம்பரம் ஏற்கனவே நமது செய்தி தாள்களில் தமிழ்லும் ஆங்கிலத்திலும் வெளிவந்து விட்டது. அதே போல் ஆன்லைன் தளத்திலும் முழு விவரங்கள் உள்ளன.
இந்த முறை தமிழ்நாட்டில் பரவலாக டீலர்கள் விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன என்று தெரிகிறது. அதனால் நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
டீலர்கள் இடத்தைப் பொறுத்து ரெகுலர், ரூரல் என்று பிரிக்கப்பட்டு உள்ளார்கள். அதாவது நெடுஞ்சாலை, நகர்புறத்தில் உள்ள பங்குகள் ரெகுலர் என்றும் அழைக்கப்படுகின்றன. மற்ற கிராமப்புறத்தில் உள்ளவை ரூரல் பிரிவில் வருகிறது.
ரெகுலர் டீலர்கள் ஒரு மாதத்திற்கு சராசரி விற்பனையாக 200 KL (200,000 லிட்டர்) பெட்ரோலை எதிர்பார்க்கலாம். மற்றவர்கள் 100 KL வரை எதிர்பார்க்கலாம்.
இது தவிர டீஸல், லுப்ரிகன்ட், ஆயில் போன்றவற்றையும் விற்றுக் கொள்ளலாம். சர்வீஸ் நிலையங்களையும் வைத்துக் கொள்ளலாம். இதில் தான் பாதி வருமானம் வருகிறது என்றும் தெரிகிறது.
இதற்கு 20 முதல் 30 சென்ட் நிலம் தேவைப்படுகிறது. SC/ST பிரிவினர்கள் நிலம் மட்டும் கொடுத்தால் போதுமானது. மற்ற செலவுகளை நிர்வாகம் கடனாக 11% வட்டியில் கொடுக்கிறது.
மொத்த செலவு தொகை என்று பார்த்தால் நிலம் வாங்கும் தொகையை தவிர்த்து 40 முதல் 50 லட்சம் வரை தேவைப்படும். சராசரியாக பார்த்தால் ஒரு பெட்ரோல் பங்கு திறக்க மொத்தமாக 80 லட்சம் முதல் ஒரு கோடி வரை தேவைப்படும்.
இனி இவ்வளவு செலவிற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதையும் உதாரணத்துடன் பார்ப்போம்.
ஒரு ரூபாய் பெட்ரோல்/டீஸல் விற்பனையில் ஒரு பைசா கமிசனாக கிடைக்கும். அப்படி என்றால், தற்போதைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 65 பைசாவும், ஒரு லிட்டர் டீசலுக்கு 55 பைசாவும் கிடைக்கும்.
ஒரு டீலருக்கு 200KL பெட்ரோலும் 100KL டீசலும் விற்பனையாவதாக கருதினால் கீழ் உள்ளவாறு வருமானத்தை கணக்கிடலாம்.
டீசல் மூலம் கிடைக்கும் வருமானம் = .55 * 100KL = 55000
டீசல் மூலம் கிடைக்கும் வருமானம் = .63 * 200KL = 126000
லுப்ரிகன்ட், ஆயில் = 30,000
சர்வீஸ் நிலையம் = 40,000
ATM, etc.. = 5000
மொத்த வருமானம் = தோராயமாக 2.55 லட்சங்கள்.
இனி எவ்வளவு செலவுகள் ஆகும் என்பதையும் பார்க்கலாம்.
பணியாளர் கூலி = 12 பேர் * சராசரியாக 8000 சம்பளம் = 96,000 ரூபாய்
மின்சாரம் மற்றும் மற்ற செலவுகள் = 20000 ரூபாய்.
மொத்த செலவு = 1..16 லட்சம் ரூபாய்
ஆக, நிகர வருமானம் = 2.55 - 1.16 = 1.39 லட்ச ரூபாய்.
இதில் 10% என்பதை கணக்கில் ஏற்படும் கழிமானம் என்று எடுத்துக் கொண்டால் கூட 1.25 லட்சம் கிடைக்கும்.
இப்பொழுது புரிந்து இருக்கும். பெட்ரோல் பங்கை வைத்து இருப்பவர்கள் ஏன் தொழிலதிபர்கள் என்று சொல்கிறார்கள் என்று.
இது அதிக அளவு ரிஸ்க் இல்லாத தொழிலும் நல்ல வருமானம் தரும் தொழில் கூட.. பெட்ரோல் பங்குகளுக்கு 10 வருடம் உரிமம் வழங்கப்படுகிறது. சொந்த இடமாக இருந்தால் அடுத்த வருடங்களுக்கு புதுப்பிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பணம் இருப்பவரகள் முயற்சி செய்யலாம்.

No comments:
Post a Comment