Tuesday, February 28, 2017

மதப்பற்று- மதவெறி என்ன வித்தியாசம்?

மதப்பற்றுக்கும் மதவெறிக்கும் நூலளவே வித்தியாசம் என்று சொல்வர் சிலர். இரண்டையும் சம்பந்தமே இல்லாத இரு உணர்வுகள் எனக் கூறுவர் சிலர். இரண்டையும் ஒன்றாகவே நிறுத்திப் பார்ப்பர் சிலர். இது மூன்றாமவர்களுக்கான கட்டுரை.

மத உணர்வுகள் என்றென்றும் இந்த உலகில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. மனித வரலாறின் வழி நெடுக இது மாறியதில்லை.

மதம் என்பதை ‘கடவுளைச் சார்ந்து ஏற்படுத்தப்பட்ட ஒரு குழு’ எனக் கூறலாம். அதாவது அந்த மதத்தை பின்பற்றுவோர் எல்லாம், கடவுளைக் காரணம் காட்டி இயற்றப்பட்ட குழுவில் ஒரு உறுப்பினர்.

கடவுளைக் காரணம் காட்டாத குழுக்களுக்கு பல பெயர்கள் இருக்கின்றன. உதாரணமாக, சமூக சேவை அமைப்புகள், கட்சிகள், அழுத்தக்குழுக்கள், போராட்டக் குழுக்கள், தீவிரவாதக் குழுக்கள், என பல பெயர்களால் இவைகள் அழைக்கப்படுகின்றன.

கடவுள் இல்லை என்பதை நாமெல்லாரும் (அறிவுள்ள மனிதர்களாகிய நாம் எல்லோரும்)  அறிந்திருந்தாலும் கூட, (கடவுள் இருக்கின்றது என்னும் நம்பும் மக்களும் கூட அதை நேரிலே கண்டிராத பட்சத்திலும் கூட), கடவுள் என்ற ஒற்றை விசை மதக்குழுக்களை இதுகாறும் பிழைக்க வைத்துக்கொண்டிருந்தது. அந்த கடவுள் என்னும் பெயர்ச்சொல்லால் இந்தக் குழுக்களை (மதங்களை) நிலையாக எதிர்காலத்துக்கும் இழுத்துச் செல்ல, அதாவது பிழைக்கவைக்க முடியாமல் போவது காலத்தின் கட்டாயம்... எல்லாரும் படிக்கிறார்கள், அறிவு கொஞ்சம் வளருகிறது அல்லவா!!

ஆக.. மதங்கள்/மதவாதிகள், தங்களது அணுகுமுறையில் சில மாற்றங்களைக் கொணர எத்தனிக்கிறார்கள். அதாவது, கடவுள் அற்ற குழுக்களின் சில அணுகுமுறைகளை தம் குழுக்களின் அணுகுமுறையோடு, சேர்த்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, காலம் மாற மாற மதத்தைப் பரப்பும் தளத்தை மாற்றிக்கொள்வது.... (தற்காலத்தில் சமூக வலைதளங்கள்!!), மத உணர்வுகளில் அறிவியல் கலந்திருப்பதாக புருடா விடுவது!!!  இதனால், தமக்கு கிடைக்கப்போவது-அந்த கொஞ்ச நஞ்சம் படித்து யோசிக்க ஆரம்பித்துவிட்ட அந்த மக்கள்- என்ற பேராசையோடு அந்த அணுகுமுறை மாற்றத்தைக் கொண்டுவந்தும் விட்டார்கள். 

மதவாதிகளின் இந்த அணுகுமுறை அவர்களுக்கு நிறைய பலன்களை தந்தது... தந்து கொண்டிருக்கிறது. கொஞ்ச நஞ்சம் படித்த வாலிபர்கள் இந்த மாய வலையால் ஈர்க்கப்பட்டு, இவர்களும் மதம் என்ற நோயை மக்களிடையே பரப்புகிறார்கள். இதில் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்கள் இந்து மற்றும் இஸ்லாம் மத பசங்க தான். முகநூல் தளத்தில் இந்த இரண்டு குழுக்களும் கடவுளைப் பரப்பும் வேகம் மலைக்கவைக்கிறது. ஏன் இந்த வேகம்?? ஏன் இந்த மத உணர்வு?? ஏன் இந்த மத வெறி?? என கேள்வி எழுப்பிக்கொள்வது கட்டாயமாகிறது.

இந்த மாதிரி மதத்தைப் பரப்புபவன் எவனும் கடவுளைக் கண்டதில்லை என்பது உறுதி. என்னதான் அவன் விழுந்து விழுந்து கும்பிட்டாலும், ஒரு எழவும் நடக்கப்போவதில்லை என்பதை நாம் சொன்னாலும் அவன் நம்பப்போவதில்லை.

செத்தவன் ஒருவன் எழுந்து வந்து-இம்மையில் நான் செய்த வழிபாடுகளால் மறுமையில் எனக்கு சொர்க்கம் கிடைத்தது- என ஒரு நாளும் சொன்னதில்லை. அப்படி எவனாவது சொல்லியிருந்தால் நாம் எல்லோரும் அந்த செத்துப் பிழைத்தவனை குறுக்கு விசாரணை செய்து விட்டு பின் இம்மை, மறுமை போன்ற இழவுகளை நம்பித்தொலைக்கலாம். எவனோ ஒருவன் சொன்னானென்று நம்பும் மக்கள், கண் முன்னால் நடக்கும் அறிவியலை நம்ப மறுக்கிறார்கள்.

மதங்கள் எல்லாமே மக்களைப் பிரிக்கும் கோடுகள் என்பதை உணர்ந்து கொண்டால், மத உணர்வு வேறு, மதப்பற்று வேறு, மத வெறி வேறு என்று எவனும் சொல்லமாட்டான். இந்த மூன்று பதங்களுமே ஒன்றுதான். மதம் என்ற ஒன்று, இந்த மூன்று பதங்களுக்குமே பொதுவாக இருக்கிறது அல்லவே???! அந்த மதம்தான் மனிதர்களைப் பிரிக்கிறது! மனிதர்களைப் பிரிப்பதை விட மோசமான வக்கிரமான செயலை, வேறு எது செய்துவிட முடியும்??? 

மத வெறி என்பது வேற்று மதத்தானை கொல்லும் செயலுக்குக் காரணம்  மட்டுமல்ல. மதத்தை அடிப்படையாகக் காட்டி ஒருவன் செய்யும் தர்மம் கூட மதவெறியே.





வின்சென்ட் ஒரு ஏழை என்பதற்காக ஒரு குறிப்பிட்ட ‘குரூப்பில’ சொல்லி உதவி வாங்கித் தரும் ஜோசப்பும், சினிமா நடிகர் ஆர்யா, ஒரு முஸ்லிம் என்பதற்காக, அந்தப் பையனை ஏதோ மார்லன் பிராண்டோவை பாராட்டும் ரேஞ்சுக்கு பாராட்டும் முஸ்லிமும், ஆசிரியையைக் கொன்ற மாணவன் குறிப்பிட்ட மதத்தான் என்பதற்காக (கல்வி அமைப்பு, பெற்றோர் வளர்ப்பு, பாக்கெட் மணி மற்றும் சினிமாக்கள் என்று பல காரணங்கள் இருந்தும் கூட) அந்த ஆசிரியையின் நடத்தையையே  கொச்சைப்படுத்தும் மனிதனும்,  கேப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் மத நூலை மேற்கோள் காட்டிப் பேசும் மனிதனும் மதவெறி பிடித்தவனே. பின்ன.... அவனை வேறு என்னவென்று சொல்வது???

மதவெறி பிடித்து ஆயுதம் தாங்கி மற்றொரு மனிதனைக் கொல்கிறானே... அவன் என்ன 24 மணி நேரமுமா ஆயுதத்தைத் தாங்கி கொலை செய்து கொண்டா  இருக்கிறான்?? இந்த மாதிரி பேசிக் கொண்டிருக்கும் மனிதர்கள்தான் பின்னாளில் மதத்தின் காரணம் கொண்டு கொலை செய்கிறார்கள். கௌரவமான பணியில்/பதவியில் இருப்பவர்கள் கொலை செய்ய மாட்டார்கள்தான். ஆனால் கொலை செய்தவனுக்கு உதவிகள் செய்வார்கள்.


மத உணர்வு என்பதும் மதப் பற்று என்பதும், மத வெறி என்பதன் நீறு பூத்த வடிவங்கள். இது உண்மை எனத் தெரிந்தாலும் வரிந்துகட்டிக்கொண்டு விவாதிக்க வரும் சில இளங்கன்றுகள் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும். மதம் சாரா குழுக்களின் அணுகு முறைகளை, மதகுழுக்கள் பயன்படுத்த ஆரம்பித்ததன் விளைவுகளில் ஒன்றுதான்...... மதப்பற்று, மதஉணர்வு மற்றும் மதவெறி ஆகிய மூன்று பதங்களின் அர்த்தங்களும் ஒன்றாகிப் போன விபரீதம்!

அந்தக் கன்றுகளை மதமயமாக்கத்தான் இந்த அணுகுமுறை மாற்றங்களே கொணரப்பட்டன என்பதை அவர்கள் உணரவேண்டும் என இல்லாத அந்தக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்!
   
   After coming into contact with a religious man I always feel I must wash my hands.
   A casual stroll through the lunatic asylum shows that faith does not prove anything 
                                                                                                -Frederich Nietczhe


மதவாதிகளுடன் ஒவ்வொரு முறை பேசி முடித்தபின்னும், என் கைகளில் கறை படிந்ததாக எண்ணி, என் கைகளைக் கழுவிக்கொள்கிறேன்!

மனநல விடுதிகளின் பக்கம் சற்று நடந்து பார்க்கும்போதுதான் உங்களுக்குப் புரியும்... கடவுள் நம்பிக்கையால் ஒன்றையும் புடுங்க முடியாது என்று!!!

பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள‍ குறிப்புக்கள்.

பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள‍ குறிப்புக்கள்
மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளிப்பதும் சுலபமாகிவிடும், வாழ்க் கைப் பயணமும்
இனியதாகிவிடும். ஒருவர் சிற ந்த ஆளுமை அல்லது பர்ச னாலிட்டி என்பது அந்த மனிதர் உலக அளவில் பேமஸ் என்ப தாலோ அவருக்குச் சிக்ஸ் பேக் பாடி என்பதாலேயோ, பெரும் பணக்காரர் என்பதாலேயோ அமைவதில்லை.
ஒவ்வொருவருடைய தனித் தன்மைகளை வைத்தே அது தீர்மானிக்கப்படுகிறது. இன் றைய சூழலில் நடை முறை வாழ்க்கைக்குத்தேவையான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தேவை க்கு அதிகமாகவே நம்மிடம் புரையோடிக் கிடக்கிறது.
அவற்றைக்கையாளும் முறையி லும் நாம் கை தேர்ந்தவராகவே இருக்கிறோம். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள நம் சக மனிதர்களைக் கை யாள்வதில் நாம் சற்றே பின் தங்கியுள்ளோம்.
கடமையைத் தவறாமல்செய்து முடிக்கு ம் பெர்சனலிட் டியை நீங்கள் கையாள வேண்டும் எனில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண் டியவை,
* அவரிடம் வியாபாரரீதியாகப் பேசாதீர்கள். 

*அவர் செய்ய வேண்டிய வேலை யில் அவருடைய பொறுப்புகள் பற்றிமட்டும் அவரிடம்பேசுங்கள்.
*அவர்செய்யும் வேலையின் வெளி ப்பாடு எந்தளவு இப்ராஜெக்டை பாதிக்கும் என்பதைப் பற்றி அவரி டம் தெளிவாகப்பேசுங்கள்.
*அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் மற்றும் அதன் முக்கியத்து வம் பற்றி அவர் உணர்ந்து கொண் டாரா என்பதைத்தெளிவுபடுத்திக்கொ ள்ளுங்கள்.
* இத்தகைய பெர்சனாலிட்டி கொண் ட மனிதரின் குடும்பம் மற்றும் நண்ப ர்களைச் சந்திக்க நேர்ந்தால் அவரின் கடமை தவறாத பண்பை மனதாரப் பாராட்டுங்கள்.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனித ரும் எதிர்பார்ப்பதும், ஏங்கியிருப்ப தும் அங்கீகாரத்திற்கும் பாராட்டுத ல்களுக்கும்தான். இது கிடைக்காத வர்கள்தான் பெரும்பாலான நேரங் களில் விரக்தி அடைகிறார்கள். நி றுவனத்தின் பார்வையில் இருந்து ஒரு தலைவராக அவருடைய தேவைகளை அவர்கேட்கும் முன்பே பூர்த்தி செய்து விடுங்கள்.

உங்கள் ஸ்மார்ட்போன்… சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – தொழில்நுட்ப குறிப்புக்கள்.

உங்கள் ஸ்மார்ட்போன்… சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – தொழில்நுட்ப குறிப்புக்கள்

உங்கள் ஸ்மார்ட்போன்… சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – தொழில்நுட்ப குறிப்புக்கள்
உலகளவில் ஸ்மார்ட்போன்கள் உபயோகப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் 
அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் போனில் முக்கிய பிரச்ச னையே அது சீக்கிரம் சூடாகி விடுவது தான். அதை எளிதாக தடுக்க என்ன வழி?
பொதுவாக ஸ்மார்ட்போன்களில் 4G & 3G இணையம் அதி களவில் உபயோகப்படுத்தப்படுகிறது. பலர் இணைய Data வை அணைத்து வைக்காமல் உள்ளதால் போன் சூடாகி றது.
உபயோகப்படுத்தாத சமயத்தில் இணையத்தை அணை த்து வைத்தால் போன் சூடாவது குறையும்.
ஒரே நேரத்தில் அதிகளவு ஆப்ஸ்கள் செயல் பட்டிருந்தால் கூட போன் சீக்கிரம் சூடாகி விடும். தேவையி ல்லாததை ஸ்விச் ஆப் செய்து வைக்க லாம்.
செயல்மேம்படுத்துதல் (Processor Optimization) உங்கள் மொ பைலை பல விதங்களில் மேம்படுத்தியும் சூடாகின்றதா. பின்பு நீங்கள் செய்யவேண் டியது ரோம் (ROM) ஆப்ஸை நிறுவ வே ண்டும். இது உங்கள் போனை சூடாவதிலிருந்து காக்கும்.
சார்ஜ்செய்யும்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்தகூடாது. அப்படி பயன் படுத்தினால் போன் அதிக சூடாகும்.
பழையபேட்டரியை பயன்படுத்துவது மற்றும் தரத்தில் குறைவான பேட்டரியை பயன்படுத்துவதால் போன் சூடாகக் கூடும். தரமான பேட்டரி பயன் படுத்த வேண்டும்.

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்றால் என்ன?

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஆண்களுக்குத்தான் அதிக ம் வரும் என்பார்கள். இது பெண்க ளுக்கும் ஏற்பட வாய்ப்புண்டா?
நீங்க வேற… ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் வரு வதற்கு வாய்ப்புள்ளது. பெண்க ளுக்கு சுரக்கும் ஹார்மோன் கள்தான் இந்தப் பிரச்னை ஏற்படு வதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரையான பெண்களு க்குத்தான் அதிகம் வருகிறது.
கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்றால் என்ன?
கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்பது, கால்களில் உள்ள நரம்புகள் புடைத்துக் கொள்வது தான். ஆரோக்கியமான கால் களில் உள்ள நரம்புகள் இருதய த்திலிருந்து செலுத்தப்படும் ரத்தத்தை ஒரே சீராகச் செல்ல அனுமதிக்கும். அதே போல கால்களிலிருந்து இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராக நடைபெற வழி வகுக்கும். இதற்கு கால் நர ம்புகளில் உள்ள வால் வுகள் முக்கியப் பங்கு வகிக் கின்றன. இவை பழுதடைந்தால், நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு, அவை கால்களிலேயே தங்கிவிடும். இதனால் கால்கள் பாதிக்கப்படும். அல்லது கடுமையான வலி ஏற்படுத்தும். கால் நரம்புகளில் இருந்து ரத்தம் மீண்டும் இருதயத்திற்கு செல்லாத நிலையில் கால்கள் வீக்கமடையும்.
இவ்விதம் கால் நரம்புகளில் ரத்தம் தேங்குவதால் நரம்பு கள் சுருண்டு கொள்ளும். இதைத்தான் “வெரிகோஸ் வெயின் (Varicose Veins)” என்று ஆங்கிலத்தில் அழைப் பார்கள். இவர்களது கால்கள் வீக்கமடைவதுடன், நரம்புகள் சுருண்டு
கொண்டிருப்பதையும் காண முடியும். ரத்தம் தேங்கி விடுவதால் நரம்புகள் கருநீல நிறத்தில் காட்சி அளிக்கும். ஆரம்ப நிலை என் றால், சிறிய அளவில் மாறுபட்ட நிறத்திலான கோடுகள் சிலந்தி வலை போன்று காட்சியளிக்கும்.
பெரும்பாலோர் இது வெறும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை என்று நினைக் கிறார்கள். ஆனால் இது மருத்துவ ரீதி யில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு நோய். நரம்புகள் சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்பட்டால் கடுமையான வலி தோன் றும். சில சமயங்களில் உடலில் மிகுந்த களைப்பு ஏற்படும். இந்நோய் மிகவும் முற்றிய நிலையில் தோலின் நிறமே மாறும். தோலின் மீது கொப்புளங்கள் தோன்றும். கால்களிலும், கணுக்கால் களிலும் கொப்புளங்கள் தோன்றும். கொப்புளங்களிலிருந்து சில சமயம் ரத்தம் வெளி யேறும். சில சமயங்களில் ரத்தக் கட்டிகள் நரம்புகளில் ஏற்படக்கூட வாய் ப்புண்டு.
எத்தகைய பெண்களுக்கு கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்படும்?
உடல் பருமனான பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், அதிலும் குறிப்பாக அதிக குழந்தைகள் பெறும் தாய்மார்களுக்கு இப்பிரச் னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சில பெண்களுக்கு கருவுற்ற கா லத்திலேயே கால்களில் நரம்புகள் சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்ப டும். குழந்தை பிறந்தவுடன் இந்த நரம்புகள் மறைந்துவிடும். ஆனால் குழந்தை பெற்ற பின்னரும் தொடரும். பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு இப்பிரச்னை இருந்தால் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.
கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஏற்படாமல் தடுப்பது எப்படி?
தைத் தடுப்பது மிகவும் கடின மானது. காரணம், மனிதர்கள் கால் களில் தானே நடக்கிறோம்? இருப்பினும் இந்நோய் ஏற்ப டுவதற்கான வாய்ப்புள்ள சிலர் முன் கூட்டியே நடவடிக்கை எடுப் பதன் மூலம் அதைத் தடுக்க முடியும்.
உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வை த்திருத்தல்.
நீண்ட நேரம் நின்றபடியே பணிபுரி வதைத் தவிர்ப்பது.
நார்ச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உண்பது.
கால்களில் எப்போதும் காலு றை அணிவது என இப்பிரச் னை வராமல் தடுக்க முடி யும்!
கால் நரம்பு சுற்றிக் கொள் ளும் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வா? வேறு மாற்று வழிகள் ஏதேனும் உண்டா?
இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு இல்லை. நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.
காலுறை அணிதல்: நோய் ஆரம்ப நிலையில் இருப்பின், பிரத் யேகமாக தயாரிக்கப்பட்ட காலுறைகளை அணிந்து இந்நோயைக் குணப்ப டுத்தலாம்.
மருந்து மூலம் குணப்படுத்துதல்: மருந்து அளித்து குணப்படுத்தும் நிலையில் சில ருக்கு இருக்கும். அத்தகையோருக்கு மருந்து களுடன் பிரத்யேக காலுறை அணிந்து கொள் ளுமாறு அறிவுறுத்த ப்படும். இது உரிய பல னை அளிக்கும். இருப்பினும் கால்களில் முதலில் சுருண்ட நரம்புகளை முற்றிலுமாக பழைய நிலைக்குக் கொண்டு செல்லவோ, குண ப்படுத்தவோ இயலாது.
ஊசி மூலம் குணப்படுத்துதல்: இந்த சிகிச் சைக்கு ஸ்கெலரோதெரபி என்று பெயர். ஆனால் இந்த சிகிச்சை நீண்ட காலம் மேற்கொள்ள வேண்டியவை. இத்தகைய சிகிச்சை முறைகளை முழு அளவில் மேற்கொள்ளாவிடில் முழு அளவில் பயன் கிடைக் காது. மேலும் இத்தகைய சிகிச்சை முறைகளில் நரம்புகளில் ரத்தக்கட்டிகள் தோன்றும். சில சமயங்களில் இந்த ரத்தக் கட்டிகள் இருதயத்தை நோக்கி நகர்வதற்கான வாய் ப்புகளும் உண்டு. அல்லது நுரையீரல் போன்ற பகுதி சிக்கலை ஏற்படுத்தலாம்.
அறுவை சிகிச்சை: நோயுற்ற காலில் உள்ள பழுதடைந்த நரம்புப் பகுதிகளை வெ ட் டியெடுத்து நீக்கும் அறுவை சிகிச்சை முறை மிகவும் சிக்கலானது. மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும். மருத்துவ மனையில் இரண்டு வாரம் முதல் நான்கு வாரம் வரை தங்க வேண்டியிருக்கும்.
லேசர் சிகிச்சை: பழுதடைந்த நரம்புகளில் லேசர் ஃபிளமென்ட் மூலம் அடைப்பது நவீன முறையாகும். இந்த சிகிச்சை முறையிலும் சில பாதக அம்சங்கள் உள்ளன. லேசர் சிகிச்சையின் போது வெளியாகும் அதிகபட்ச வெப்பம், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அத்துடன் அருகிலுள்ள திசுக்களையும் இது சேதப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு.
ரேடியோ அலை சிகிச்சை (Radio Frequency Ablation (RFA – ஆர்.எஃப்ஏ.): இப்புதிய முறை பரவ லான வரவேற்பைப் பெற்றுள்ளது. கார ணம், இந்த சிகிச்சை முறையில் வலி மிகக் குறைந்த அளவில் இருக்கும். தவிர, மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறா மல், புற நோயாளிகளைப் போல சிகி ச்சை பெற்றாலே போதும். பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் மறத்துப் போவதற்கான ஊசி செலுத்தப்படும். இந்த சிகிச்சை முறையால் ரத்த அடைப்பு ஏற்படுவதில்லை. மேலும் அருகிலுள்ள திசுக்களும் பாதிக்கப் படாது. அதிக வெப்பமும் வெளியேறுவ தில்லை. பாதிக்கப்பட்ட நரம்புகள் மூடப்பட்டவுடன், அருகிலுள்ள ஆரோக்கியமான நரம்புகளில் ரத் தம் பாயத் தொடங்கும். இதனால் கால் கள் பழைய நிலைக்குத் திரும்பும்.

***ஜோதிட ஆசிரியர் சொல் **

நவகிரக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான முறைகள் !!!
நவகிரகங்களுக்கு என்று தனித்தனியாக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான வழிமுறைகள் உள்ளன.
சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.
சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்திரம் முத்துமாலை வெள்ளரலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.
அங்காரக பகவானுக்குச் செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்துச் சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி ஆகியவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுத்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.
புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தாமரை என்பவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். உடனடியாக புதக்கிரகதோஷம் நீங்கும்.
குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம் புஷ்பராகமணி, வெண்முல்லை என்பவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.
சுக்கிர பகவானுக்கு வெள்ளிக் கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்திரம் வைரக்கல் வெண்தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சுக்கிரக் கிரகதோஷம் நீங்கும்.
சனிபகவானுக்குச் சனிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம், நீலக்கல் நீலோற்பலம் (கருங்குவளை) என்பவற்றால் அலங்காரம் செய்து, சனிபவகானின் மந்திரங்களை ஓதி கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.
ராகு பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம் கோமேதக மணி நீலமந்தாரை இலுப்பைப்பூ என்பவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ராகுக் கிரகதோஷம் நீங்கும்.
கேது பகவானுக்கு ஏதாவதொருகிழமையில் அபிஷேகம் செய்வித்து, பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லிமலர் என்பனவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.

அதிமுக வின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா ராஜினாமாவா??? !!!

அதிமுக வின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா தனது பதவியை ராஜினாமா செய்கிறாராம்.4 அமைச்சர்கள் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சந்தித்ததின் பின்னணி....
★ பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலாவை தமிழக அமைச்சர்கள் இன்று 28.02.2017 சந்தித்த நிலையில், அ.தி.மு.க. வின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
★ ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் மன்னார்குடி மாஃபியா கும்பலின் வற்புறுத்தலால் முதல்வரானார். டிசம்பர் 5ல் நடந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு என்ற பெயரில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அ.தி.மு.க.வின் உண்மைத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை தமிழக நடுநிலையாளர்களும் எதிர்த்தே வந்தனர். சசிகலாவை பதவி வெறியர்கள் மட்டுமே ஆதரித்து வந்தனர்.
★ இதற்கிடையில் சசிகலாவுக்ககும், அவரது குடும்ப உறுப்பினர்களின் அதிகார பதவி வெறியால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியை இராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி, மிரட்டி , பதவியை பிடிங்கி கொண்டனர். பொறுமையின் சிகரமான பன்னீர் அவர்கள் பொறுத்தது போதுமென , அம்மாவின் ஆசியுடன் பொங்கி எழுந்தார். இதன் காரணமாக உள்கட்சிப் பூசல் ஏற்பட்டது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள அதிமுக போர்க்கொடி தூக்கியது.
★ அதிமுக வின் MLAக்கள் 124 பேர் GOLDEN BAY சொகுசு RESORT ல் அடைத்து வைக்கப்பட்டனர். இரண்டு பகல் ஒரு இரவு சசிகலா அந்த சொகுசு விடுதியில் MLA களோடு தங்கி இருந்தார். 14.02.2017 அன்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவும் அவர் குடும்பத்தினரும் கொள்ளையடித்த குற்றவாளிகள்தான் . உடனே அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டுமென தீர்ப்பு வந்தது.
★ 15.02.2017 அன்று சசிகலா தனது சிறைப்பயணத்தை தொடங்கும் முன் அவசர அவசரமாக தனது அக்கா வனிதாமணியின் மகனும், தனது அண்ணன் சுந்தர வதனத்தின் மருமகனுமான, அன்னிய செலாவனி மோசடி வழக்கில் 28 கோடிஅபராதம் கட்டிய குற்றவாளியான TTV.தினகரனை கட்சியில் சேர்த்து, அடுத்த 10 வது நிமிடத்தில் , அதிமுக சட்டதிட்ட விதிகளிலேயே இல்லாத ஒரு புதிய பதவி துணைப் பொதுச்செயலாளர் ஆக்கி அறிவித்தார் தற்காலிக பொ.செ. சசிகலா.
தனது அண்ணன் சுந்தர வதனத்தின் மகன் Dr. வெங்கடேஷையும் கட்சியில் சேர்த்து அறிவிப்பு செய்தார். இந்த இருவரையும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் சேர்க்காமல் அடித்து விரட்டி வைத்திருந்தார் அம்மா.
★ இதன் ஒருகட்டமாக சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது என்று அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட , அதிமுகவின் 12 MPக்களும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தனர்
★ இந்நிலையில் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், பிப்ரவரி 28-ம் தேதிக்குள் (இன்று) சசிகலா, பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சசிகலாவின் அக்கா மகன் TTV.தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
★ சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சசிகலாவை, K.A.செங்கோட்டையன்.திண்டுக்கல் சீனிவாசன்.செல்லூர் ராஜு.காமராஜ் ஆகிய அமைச்சர்கள் சந்தித்துபேசினர்.சசிகலாவால் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனும் இதற்கு முன் சந்தித்துப் பேசியியிருந்தார். அப்போது கட்சியின் உள்விவகாரங்களையும், தமிழக அரசியல் சூழ்நிலைகளையும் கேட்டறிந்த கொள்ளைக் குற்றவாளிசசிகலா, அதற்கான ஆலோசனைகளையும் தெரிவித்தார். மேலும் அப்போது, தேர்தல் ஆணைய விவகாரம், சிறை மாற்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் மறு சீராய்வு மனு உள்ளிட்டவைகள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும்,கட்சியின்உள்விவகாரங்கள், பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 
★ அதிமுக வின் சட்ட திட்ட விதிகளின்படி தேர்வு செய்யப்படாத வெறும் 2500 பேர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவின் பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது.
★ சிறை தண்டனைப்பெற்று ஜெயிலில் இருக்கும் ஒரு குற்றவாளி தலைவராக இருந்து , அவர் ஆலோசனையின்படி செயல்படும் இந்த அரசு கலைக்கப்பட வேண்டும். என இது போன்ற நியாயமான குற்றச் சாட்டுகளிலிருந்து தப்பிக்க குற்றவாளி சசிகலா தனது தற்காலிக பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்யும் நிர்பந்தத்தில் உள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நல்ல செய்தி விரைவில் வெளியாகும் என நம்புகிறோம்.

Monday, February 27, 2017

தேர்தல் ஆணையத்தை எதிர்கொள்வது.

ஜெயலலிதா கைநாட்டும் சசிகலா பதவியும்...! - ஆணையத்தை நெருக்கும் பன்னீர்செல்வம் தரப்பு.
தேர்தல் ஆணையத்தை எதிர்கொள்வது குறித்துத்தான் சசிகலா உறவினர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ' அ.தி.மு.கவின் சட்டவிதிகளுக்கு மாறாக, பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்தார் சசிகலா. ஜெயலலிதாகு இருந்தபோது அ.தி.மு.க என்ன நிலையில் இருந்ததோ, அப்போது இருந்த கட்சியின் நிலையைத்தான் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கணக்கில் எடுத்துள்ளனர். இது சசிகலாவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, அ.தி.மு.க நிர்வாகிகளால் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் தலைமைக் கழகத்தில் இருந்து கடிதம் அனுப்பியிருந்தனர். அந்தக் கடிதத்தில், 'பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. அவரது நியமனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர். "எம்.ஜி.ஆர் வகுத்திருந்த கட்சியின் விதிகளுக்கு மாறாக, சில நிர்வாகிகளால் முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. இதை எதிர்த்து தொடக்கத்தில் இருந்தே குரல் கொடுத்து வருகிறார் சசிகலா புஷ்பா எம்.பி. தற்போது பன்னீர்செல்வம் அணியினரும் சசிகலாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்குச் சென்றுள்ளனர்.
இன்று மதியம் ஆணைய அதிகாரிகளை சந்தித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன். இந்த சந்திப்பில் சசிகலா தொடர்பான சில விஷயங்கள் பேசப்பட்டுள்ளன" என விவரித்த பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், "ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. இதில் வேட்பு மனுத்தாக்கலின்போது அளிக்கப்படும் பி ஃபார்மில் பொதுச் செயலாளர் என்ற இடத்தில் ஜெயலலிதாவின் கைநாட்டு இடம்பெற்றிருந்தது. இதைப் பற்றி அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோதும், 'அவரால் கையெழுத்து போட இயலவில்லை' என்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
Image may contain: 1 person, closeup
அந்தநேரத்தில் ஜெயலலிதாவின் கைநாட்டுக்கு ஆணையத்தின் அனுமதியைப் பெற்றுத் தந்தவர்களைத்தான், தற்போது கார்டனில் உள்ளவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் மூலம் சசிகலாவை பொதுச் செயலாளர் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்ள வைக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளனர். இதை அறிந்து குடியரசுத் தலைவர் உள்பட அனைத்து தரப்பினரையும் பன்னீர்செல்வம் அணியினர் சந்திக்கச் செல்கின்றனர். 'கார்டனில் உள்ளவர்களை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஜெயலலிதாவை வைத்துக் கொண்டே அனைத்து ஏமாற்று வேலைகளையும் செய்தவர்கள்தான் இவர்கள்.
அவரது உயிருக்கு என்ன ஆனது என்ற தகவலை ஒட்டுமொத்தமாக மறைத்துவிட்டனர். முன்னாள் முதல்வரின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும். அவர்களை ஊக்குவித்தால் தமிழக மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும்' என்பதை மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பின்போது வலியுறுத்துகின்றனர். கடந்த பிப்ரவரி 3-ம் தேதி சசிகலாவுக்குக் கடிதம் எழுதிய தேர்தல் ஆணையம், 'பொதுச் செயலாளராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்புங்கள்' எனத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் விவாதித்து வருகிறார் தினகரன்.
விவகாரம் வேறு திசையில் செல்வதால், டெல்லி லாபி மூலம் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வேலையிலும் தினகரன் தரப்பில் களமிறங்கியுள்ளனர். இவ்வளவு அவசரம் காட்டக் காரணமே, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது அ.தி.மு.க சார்பில் களமிறங்கும் வேட்பாளருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் பி ஃபார்ம் வழங்கப்பட வேண்டும். சசிகலா அளிக்கும் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளுமா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறி. அந்த விண்ணப்பத்தை நிராகரிக்கும் வேலைகளில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் களமிறங்கும் வாய்ப்புகளும் அதிகம். சுப்ரமணியன் சுவாமி மூலமாகவே அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆலோசித்து வருகின்றனர்" என்றார் விரிவாக.
"அ.தி.மு.கவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டு, வரும் மார்ச் மாதம் 21-ம் தேதியுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. ' தற்போது வரையில் சட்டவிரோதமாக பொதுச் செயலாளர் பதவியில் நீடிக்கிறார். அவர் கட்சியில் சேர்க்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆனாலும், கட்சி விதிகளின்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் தேர்தல் நடத்த வேண்டும்' என்பதுதான் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் கோரிக்கை. ' கட்சி விதிகளின்படி அவைத் தலைவர்தான் தேர்தலை நடத்த வேண்டும். சட்டவிரோதமாக கட்சிப் பதவியில் அமர்ந்து கொண்டு, நிர்வாகிகளை நீக்கும் வேலைகளில் இறங்கினார். கட்சியை விட்டு நீக்குவதற்கு அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. எனவே, அவைத் தலைவர் மதுசூதனனும் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆணையம் உத்தரவிட வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றனர்.
கார்டனில் உட்கார்ந்து கொண்டு அரசு இயந்திரத்தை வழிநடத்துகின்றவர்களால் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு எந்த லாபமும் இல்லை என்பதையும் பா.ஜ.க நிர்வாகிகள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். வரப் போகும் நாட்களை சசிகலா உறவினர்கள் மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டியது வரும்" என்றார் விரிவாக.
'ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி லாபி வெல்லுமா? நடராசனின் மூவ் பலனிக்குமா?' என்ற பட்டிமன்றமே அ.தி.மு.க நிர்வாகிகள் மட்டத்தில் நடந்து வருகிறது.

அவசர செய்தி...............

மக்களே நமக்கு துரோகம் ஆரம்பித்துவிட்டது. கர்நாடகா சிறையில் சசிகலாவிற்கு எந்த சலுகையும் கிடையாது என்று சொன்னவர்கள் வீட்டு சாப்பாடுதான் எனக்கு வேண்டும் என்று கேட்டதனால் கர்நாடாக அரசாங்கம் சென்று சசிகலாவிடம் பேரம் பேசியுள்ளார்கள். எப்படி என்றால் உனக்கு நீ கேட்கும் வசதிகள் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்றால் காவேரி அணை குறுக்கே அணை கட்டபோகிறோம், உங்களுடைய MLAக்கள் யாரும் இதுபற்றி வாயை திறக்ககூடாது என்றதும் இந்த சசிகலா அம்மையாரும் சரி என்று கூறிவிட்டார்களாம். இப்போது பூமி பூஜை போடப் போகிறார்களாம் சீக்கிரம் அனைவருக்கும் இதை தெரியப்படுத்துங்கள்.
இதை தடுத்து நிறுத்தவேண்டும். ஒரு MLA-வும் ஊருக்குள்ளே வரவிடக்கூடாது. நமது தண்ணீரை தாரை வார்த்துக் கொடுத்தவர்கள் யாரையும் விடக்கூடாது.

வரி? முதலில் சட்டத்தை மாற்றுங்க.

10 லட்சம் சம்பாதிக்கிறேன், 3 லட்சத்துக்கு வரி கட்ட சொல்லிரீங்க சரி கட்டிட்டேன்.
மீதி உள்ள ரூபாய்க்கு வீடு வாங்க போறேன்,
அதுல்லையும் பத்திர பதிவுன்னு 14% வாங்குரீங்க,
நகை வாங்க போறேன் அங்கேயும் வரி.
சாப்பிட போறேன் அங்கேயும் வரி.
மக்களை சாகடிச்சி புடுங்குரீங்க.
கார் வாங்கும்போதே வரியும் சேர்த்து புடுங்குரீங்க அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கம் வசூலிக்கிரீங்க...
இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை கொடுத்தா!
நீ அதை தூக்கி கார்ப்பரேட் கம்பெனிக்கு லோன் கொடுப்பிங்க, கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பண்ணுவிங்கா!
கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடி கணக்கில் வரி பணத்த செலவழித்து விழா நடத்தி விருது கொடுப்பிங்க
லட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே அதை மீட்க என்ன நடவேடிக்கை எடுத்ததிங்கனு கேட்ட புரியாத & புரிஞ்சுக்க முடியாதபடி ஒரு பதில் சொல்லுவிங்க,
இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா? பதுக்கத்தான் செய்வான்.
*முதலில் சட்டத்தை மாற்றுங்க. எல்லா சிஸ்டத்தை மாற்றுங்க.*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 *

தோஷம் போக்கும் 108 சிவாலயம்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள 108 சிவாலயம் ராமலிங்க சுவாமி திருக்கோவில், ‘கீழை ராமேஸ்வரம்’ என்று அழைக்கப்படுகிறது. 108 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் பிரமாண்டமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால், இத்தலம் சிறப்பு பெற்று விளங்குகிறது. மூலவர் ராமலிங்கசுவாமி. 106 சிவலிங்கங்கள் பக்தி பரவசமூட்டும் வகையில் மூன்று வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் தென்புறம் அனுமன் காசியில் இருந்து கொண்டு வந்த, அனுமந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாள் நாமம் பர்வத வர்த்தினி. தென்னகத்தில் மிகப்பெரிய (6 அடி உயரம்) சூரிய பகவான் சிலையும் கோவிலின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ளது.

ராமபிரானின் தோஷம் நீங்கப்பெற்ற இத்திருத்தலத்துக்கு வந்து இங்குள்ள ராமலிங்கத்தையும், சனி பகவானையும் வழிபட்டால் அனைவரின் தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறலாம் என்று தலபுராணம் கூறுகிறது.

அனுமன் காசியில் இருந்து எடுத்து வந்த சிவலிங்கம் கோவிலின் தென்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வசிஷ்ட முனிவர் காசியில் இருந்த லிங்கம் ஒன்றை காணவில்லை என்பதை அறிந்து சூரிய பகவானிடம் கேட்டார். அதற்கு அவர், தான் பார்க்கவில்லை என்று கூறினார். அதை நம்ப மறுத்த முனிவர் சூரியனுக்கு சாபமிட்டார். சாபம் நீங்குவதற்கு சூரியன் கண்டியூரிலுள்ள அரசாப விமோசன பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபட பாதி சாபம் நீங்கப் பெற்றது. பின்னர் ஐயாறப்பர் சுவாமியின் வழிகாட்டுதலால் பாபநாசத்துக்கு வந்து வழிபட சூரிய பகவானின் முழு சாபமும் நீங்கியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.



சூரியனுக்கு சாபமிட்டு கோபத்துடன் வசிஷ்ட முனிவர் வரும் போது, அங்கிருந்த அரசமரத்தில் காக உருவில் இருந்த சனீஸ்வர பகவான் சிரித்தார். முனிவர் அவரிடம் ‘எதற்காக சிரித்தாய்?’ என்று கேட்க, அதற்கு சனீஸ்வரன், ‘ஒரு குரங்கு லிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்றது’ என்று கூறினார். இதனால் கோபம் அடைந்த முனிவர், இதுவரை உண்மையைக் கூறாமல் மறைத்த காரணத்தால் சனி பகவானுக்கும் சாபம் கொடுத்தார்.

சனி பகவானும் தன்னுடைய சாபம் தீர கண்டியூர் அரசாப விமோசன பெருமாள் ஆலயத்துக்கு வந்து தரிசித்து பாதி சாபம் நீங்கப்பெற்றார். பின்னர் ஐயாறப்பர் வழிகாட்டுதலின் பேரில் பாபநாசத்துக்கு வந்து வழிபட்டதும், முழு சாபமும் நீங்கியது. ராமபிரானின் உத்தரவுபடி இக்கோவிலின் கிழக்குபகுதியில் சூரியபகவான் அருகே சனீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 

கும்பகோணத்தில் இருந்து மேற்கே 15 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

மன நிம்மதி வேணும்ன்னு...

ஒருத்தரு , மன நிம்மதி வேணும்ன்னு...
ஒரு சாமியாரை பார்க்க போயிருக்காரு..
சாமியார்ட்ட
, "வாழ்க்கை அமைதியா , சந்தோஷமா போகணும் , அதுக்கு நா என்ன செய்யணும், சாமி "னு கேட்டுருக்காரு.
சாமியார், " உங்க, மனைவியோட சமையலை புகழ்ந்து பாராட்டியிருக்கிறீங்களா" னு கேக்கவும்
இவரும் ,
"கல்யாணமாயி, இந்த இருவது வருஷத்தில ஒரு நா கூட அவ சமையலை புகழ்ந்து பாராட்டுனதில்ல" னு ரொம்ப மெதப்பா பதில் சொல்லிருக்காரு..
சாமியார், "அடுத்த தடவ சாப்பிடும் போது மனைவியின் சமையலை புகழ்ந்து பாருங்கன்னு" அட்வைஸ் செஞ்சு அனுப்பி வைச்சிருக்காரு...
வீட்டுக்குப்போனவருக்கு அவரு மனைவி, சப்பாத்தியும் குருமாவும் மனைவி பரிமாறியிருக்காங்க !!
அத சாப்பிட்டு, கணவரும், ரொம்ப குஷியாகி , சப்பாத்தி, குருமா இரண்டையும் ஒரேடியா புகழ்ந்து, மனைவியையும் புகழ்ந்து தள்ளிட்டாரு...
இந்த திடீர் புகழ்ச்சி கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மனைவிக்கு கோபம் வந்ததுச்சாம் !
கையில் இருந்த கரண்டியால் அவரு தலையில் "டங் டங்" என்று அடிச்சுக்கிட்டே
"இந்த இருவது வருஷமா என்னைப் புகழாத நீங்க, இன்னிக்கி பக்கத்து வீட்டிலிருந்து வந்த சப்பாத்தியையும் குருமாவையும் புகழ்ந்து பாராட்ட எப்படித் தோணிச்சுனு " ???... கேட்ட... மனைவியப்பார்த்த
கணவர் " ஙே.." என்று மயங்கினான்
கல்யாணம் பண்ணவனுக்கு ஏதுடாஆ நிம்மதி?
😃😄😂

🙏உமீழ் நீர்:உயிர் நீர்🙏

*_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!!_
_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_
_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_
_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் , அதிக அளவு எடுத்துக் கொண்டனர்!!```_
_```வாழ்வதற்காக உண்டனர்! உண்பதற்காக வாழ்ந்தனர்!```_
_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_
_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_
_```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_
_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_
_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_
_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_
_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது. உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_
_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_
_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_
_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_
_```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_
_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_
_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_
_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_
_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_
_```இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் என்னைத் தீவிரமாகத் தேடி அலைவார்கள். அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும். எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்!
நொறுங்கத் தின்னா நூறு வயசு..

எம்.எல்.ஏ க்கள் பலர் ஓ.பி.எஸ் பக்கம் தாவ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீபக் நிலைமைதான் நமக்கும்: ஓ.பி.எஸ் பக்கம் தாவும் முனைப்பில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ க்கள்!
ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்கிற்கு நேர்ந்த நிலைதான், தங்களுக்கும் ஏற்படும் என்ற சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ க்கள் பலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதனால், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ க்கள் பலர் ஓ.பி.எஸ் பக்கம் தாவ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக இளைஞர் பாசறை தலைவர் பதவி, ஆர்.கே நகர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு ஆசைகளை விதைத்து, தீபக்கை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது சசிகலா தரப்பு.
அவரும் அதை நம்பி, ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சையில் கூட சசிகலாவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வந்தார்.
ஒருகட்டத்தில், ஆர்.கே.நகர் வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதாக தினகரன் கூறியதை அடுத்து, கொந்தளித்த தீபக், அந்த முகாமுக்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்.
அதை கருத்தில் கொண்டு, தங்களுக்கு அளித்த வாக்குறுதியையும், சசிகலா தரப்பு மீறிவிடும் என்று கூவத்தூர் முகாம் எம்.எல்.ஏ க்கள் பலர் கருதுகின்றனர்.
கூவத்தூரில் முரண்டு பிடித்த எம்.எல்.ஏ க்களிடம், மூன்று உறுதிமொழிகள் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, மாவட்டத்தில் அரசு சார்பில் நிறைவேற்றப்படும் ஒப்பந்தங்களில், எம்.எல்.ஏ க்கள் சொல்பவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
அந்தப் பணிக்கு அமைச்சர்கள் வேறு யாரையாவது நியமித்தாலும், எம்.எல்.ஏ க்களுக்கு தேவையான தொகை வந்து சேரும். தவிர, வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய் பணம் அன்பளிப்பாக வந்து சேரும்.
முதல்கட்டமாக, ஐந்து கோடியைக் கொடுக்க இருக்கிறோம். பணமதிப்பு நீக்க விவகாரத்தால் சிக்கல் இருப்பதால், அதற்குரிய வகையில் தங்கம் வழங்கப்படும் என்று பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, வீடுகளுக்கே சென்று முதற்கட்ட தொகையை விநியோகம் செய்தனர் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு, எதிர்பார்த்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இன்னும் இரண்டு பங்கு வந்து சேரவில்லை என்று அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
எந்தப் பரிவர்த்தனை நடந்தாலும் வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரிகள் கண்கொத்திப் பாம்பாக கவனித்து வருவதுதால், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ க்களின் தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதனால், படிப்படியாக வழங்கினால் சிக்கல் வராது என சசிகலா தரப்பு கருதுகிறது.
இந்த நிலையில், தீபக் விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், அவரை போல சசிகலா தரப்பு தங்களையும் ஏமாற்றிவிடும் என்று எம்.எல்.ஏ க்களின் பலர் நினைக்கின்றனர்.
மேலும், சசிகலா தரப்பு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்களுக்கு தொகுதி மக்கள் கொடுக்கும் ராஜ மரியாதையும் அவர்களை மிரள வைத்துள்ளது.
அதனால் சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ க்களில் பலர், ஓ.பி.எஸ் பக்கம் தாவலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...