அதிமுகவின் நாடி நரம்பு பற்றி அனைத்து ரகசியங்களும் தெரிந்தவர் சசியால் அவைத்தலைவராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையன்.
இவர்தான் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் விசுவாசியாக நீண்ட காலம் தாக்குபிடித்தவர்.
செங்கோட்டையன்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோ்தலில் போட்டியிட சீட் வாங்கி தந்தவர். செங்கோட்டையனுக்கு சசிகலாவே முதல்வர் பதவியை பெற்று தருவார் என்று ஆசையுடன் காத்து இருந்தார்.
முதல்வர் பதவி யாருக்கு என்று நடந்த பேரத்தில் அதிக தொகைக்கொடுத்து ஏலம் எடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும் கூறப்படுகிறது.
குளத்தை குழப்பி மீன் பிடிக்க நன்றாக தெரிந்தவர் செங்கோட்டையன். ஆனால் முதல்வர் சீட் பேரத்தில் இவரால் எதுவும் செய்யமுடியவில்லை. இதனால் இவரது ஆதரவாளா்கள் 18 போ் மனம் வெறுத்துபோய், எடப்பாடி பழனிச்சாமியிடமே சண்டைக்கு வந்துவிட்டனராம்.
இதனால் செங்கோட்டையனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரையும், நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்து செல்லவில்லையாம். பதவி ஏற்றும் செங்கோட்டையன் இறுக்கமாகதான் இருந்தாராம். ஆனால் நேற்று இரவு நாங்கள் இல்லை என்றால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் நீங்க தனி மெஜாரிட்டி காட்ட முடியுமா என்றும் சண்டையிட ஆரம்பித்தனா்.
இதனால் மனம் வெறுத்து போன அதிமுக சீனியர்கள் அந்த எம்எல்ஏக்களிடம் சமாதானம் பேசும் படலம் தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் செங்கோட்டையன் என்று கார்டன் தரப்பு முழுமையாக நம்புகிறதாம். இதனால் எம்எல்ஏக்கள் பெரும்பான்மையை நிரூபித்தவுடன் அமைச்சரவை பட்டியலில் இருந்து செங்கோட்டையன் நீக்கவும் படலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது சசி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் இடையே உட்பூசல் துவங்கி விட்டது என்று கூவத்தூர் வட்டார அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனா்.
No comments:
Post a Comment