Tuesday, February 21, 2017

மேலும் ஏறும் வரிச்சுமை.......

செங்கோட்டையன் உள்பட 3 தமிழக அமைச்சர்கள் பெங்களூர் சிறையில் சசியுடன் சந்திப்பு!
தமிழகத்திலிருந்து இனி வரும் காலங்களில் அதிமுகவில் உள்ள எல்லா அமைச்சர்களும் அடிக்கடி இன்னும் சொல்லப்போனால் வாரம் ஒருமுறை ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லிக் கொள்ளவும் புகார் சொல்லிக்கொள்ளவும் நான்தான் சசிக்கலாவுக்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கிறேன் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளவும் பெங்களுர் சிறைக்கு பயணம் மேற்கொள்ளுவர். எல்லா அமைச்சர்களும் எம் எல்ஏக்களும் ஏன் சிலநேரம் அதிகாரிகள் கூட பதவி உயர்வுக்கு சலுகைகளுக்கு இடமாற்றல் சலுகைகளுக்கு கர்நாடக சிறைநோக்கி செல்லக்கூடும். யார் கேட்பது ...இது ஒரு சாபக்கேடல்லவா ?அவர்கள் போவதை பற்றி நமக்கொன்றும் பொல்லாப்பில்லை. ஆனால் எல்லா சிலவுகளும் அரசு சிலவுகளாக காட்டப்பட்டு ஏற்கப்படும் ஏதாவது ஒரு நொண்டி சாக்கு ஒன்று பேருக்கு அரசு சார்பாக செல்லுவதாக..சொல்லி..இதனால் என்ன ஆகும் நம் வரிப்பணம் விளம்பரத்தில் விணாவது போல போக்குவரத்து சிலவில் விரயமாகும். எனவே இவை எலலாம் நம் தலையெழத்தென்று நினைத்துக்கொண்டு மேலும் மேலும் ஏறும் வரிச்சுமைகளை சுமக்கும் பொதிக்கழுதைகளாக தமிழ்நாட்டு மக்களாகிய நாமெல்லாம் இன்னும் நான்காண்டுகாலம் வாழக் கடமைபட்டவர்களாகிறோம்.


தமிழ் நாட்டின் தலைமை செயலகம் பெங்களுரில் உள்ள பரப்பன அக்ரஹாரத்திற்கு பிப்ரவரி 16 முதல் மாற்ற பட்டுள்ளது 😷

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...