Thursday, February 16, 2017

#சசிகலாவின்_ஜெயில்_பயணம்!



கடந்த 10 நாட்களாக கூவத்தூர் சொகுசு விடுதியில் கோடிக்கனக்கில் செலவுசெய்து அடைத்துவைக்கப்பட்டுள்ள MLAக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக 3 முறை சந்தித்துபேசினார் சசிகலா.13.02.2017அன்று இரவுமுழுவதும் அவர்களுடனேயேதங்கினார்.
14.02.2017 அன்று காலை 10.30க்கு சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் மீதான வழக்கில் சசிகலா இளவரசி. சுதாகரன் குற்றவாளிகள் என தீர்ப்பு வந்தது. சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்துபோய் நொறுங்கிபோய் அங்கேயே பகல்முழுவதும் தங்கிவிட்டார். இரவு 9.30க்கு போயஸ் போனார்.இன்று ஜெயிலுக்கு போகவில்லை.15.02.2017 காலை 11.45க்கு ஜெயிலுக்கு போக புறப்பட்டார்.அவரை வழியனுப்பி வைக்க கட்சியின் மூத்த தலைவர்கள். M LA க்கள். மந்திரிகள் ஒருவரும் வரவில்லை.போயஸ் தோட்டத்திலும் அம்மா சமாதியிலும்கூட வழியனுப்பி கோஷமிட அவரது ஊர்க்காரர்கள்.சாதிக்காரகள்தான் பெரிய பெரிய மீசையோடு நின்று கொண்டு கோஷமிட்டனர்.
அம்மா இதுபோல பயணம் செய்யும்போது சாலையின் இருமருங்கிலும் கூடிநின்ற மக்கள் கோஷமிடுவார்கள்.மாவட்டங்களை
கடந்து போகும்போது மாவட்ட கழகம் சார்பில் நின்று வாழ்த்து முழக்கமிடுவார்கள்.
ஆனால் சசிகலா சென்ற வழியெங்கும் ஒரு ஈ.காக்கா கூட நின்று வரவேற்று வாழ்த்து முழக்கமிடவில்லை.

கள்ள பணக்காரர்களும்.கருப்பு பண முதலைகளும். விலை போனMLAக்களும். பதவி வெறியர்களும்தான் சசிகலாவை தாங்கிபிடிக்கிறார்களே தவிர அதிமுக கட்சி தொண்டர்கள்.பொதுமக்கள் நடுநிலை தமிழர்களில் எவரும் இவரை ஆதரிக்கவில்லை.மக்கள் ஆதரவில்லாத ஒரு நபர் தமிழகத்தின் ஆகப்பெரிய கட்சிக்கு பொதுச்செயலாளரா? 

மாலை 5.15க்கு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள கோர்ட்டில் கொள்ளைக் குற்றவாளிகளான சசிகலாவும், இளவரசியும் சரணடைந்தனர். 
O6.15க்கு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கைதி எண் 9234 குற்வாளி சசிகலாவுக்கும் கைதி எண் 9235 குற்றவாளி இளவரசிக்கும் வழங்கப்பட்டது.
மூன்றாவது குற்றவாளி சுதாகரன் பெங்களூரிலேயே ஒளிந்துகொண்டு உடல் நலமில்லை நாளைசரணடைவதாக போட்ட மனுவை நீதிபதி தள்ளுபடிசெய்து இன்னும் அரைமணி நேரத்தில் சரணடைய உத்தரவிட்ட அரைமணிநேரத்தில் சுதாகரன் சரணடைய சிறையில் அடைக்கப்பட்டார்.
பண நாயகம் வெல்லும் என்பது பகல் கனவானது.
தெய்வம் நின்று கொல்லும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...