அதிமுகவில் எத்தனையோ பேர் அல்லும்பகலும் உழைத்தவர்கள் இருக்க..ஏனிந்த TTV தினகரனுக்கு கட்சியில் இப்படிப்பட்ட பொறுப்பு கொடுக்கணும்?
எனக்கு இதிலே உடன்பாடு கிடையாது. ஒருவேளை அவரை பற்றி எனக்கு தெரியாமல் இருக்கலாம்..
கட்சிக்கு அவரது சேவை என்ன என்று யாரேனும் அறிந்தால் எனக்கு தெரிவிக்கலாம். அம்மா அவர்கள் இதே தினகரனை கட்சியிலிருந்து வெளியேற்றியதும்..
அதன் பின்னர் அம்மாவின் மரணம் வரை அவரை அனுமதிக்கவே இல்லை என்பதும் அறிவேன்..தற்போது எப்படி அவரால் இப்படிப்பட்ட பொறுப்புக்கு வர முடிந்தது?
இந்த இரண்டரை மாத இடையே அவரது பணி என்ன என்று நான் அறியவில்லை..கட்சியில் மூத்த தலைவர்கள் யாருக்குமே துணிவில்லையா? அல்லது எதிர்ப்பையாவது ஏன் தெரிவிக்கவில்லை?
தனி நபர் குரோதம் என்னிடம் இல்லை..தனிநபர் வெறுப்பும் என்னிடம் கிடையாது..
ஆனாலும் மாபெரும் இயக்கத்தில் இப்படி பலரும் விமர்சனம் செய்யும் அளவுக்கு பொறுப்புக்கு வருவோர் பற்றி சிந்திக்க வேண்டாமா?
கட்சியில் நல்ல உழைப்பாளி என்றால் அதனை ஏற்க தயக்கமே இல்லை..அம்மாவுக்கு எதிரான போக்கை தற்போதைய கட்சியின் பொறுப்பாளர்கள் கடைபிடிக்கின்றார்களோ?
இனி அம்மா வரவே மாட்டார்கள்..பதவி ஒன்றே குறிக்கோள் என்று செயல்படுகின்றார்களா?
புரியவில்லை..தெரியவில்லை..குழப்பமே மிஞ்சுகின்றது..
என்னை பொறுத்தவரை அன்றும் இன்றும் என்றும் அம்மா அவர்களை தவிர யாருக்கும் துதி செய்யமாட்டேன்..
அதனால் கேட்கின்றேன்..சொல்வீர்களா? யார் இந்த தினகரன் என்று?
No comments:
Post a Comment