Friday, February 17, 2017

சொத்துகுவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா தீர்ப்பை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம்! – உச்சக்கட்ட‍ பரபரப்பில் தமிழகம்

சொத்துகுவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா தீர்ப்பை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம்! –  உச்சக்கட்ட‍ பரபரப்பில் தமிழகம்

சொத்துகுவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா தீர்ப்பை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம்! –  உச்சக்கட்ட‍ பரபரப்பில் தமிழகம்
சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்ட 3பேர் மீதான தண்டனையை
உச்சநீதிமன்றம், இன்று உறுதி செய்த‌து பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிப தி குமாரசாமி பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன்மூலம், சசிகலா உள்ளிட் ட மூன்று பேரும் சிறைக்கு செல்வது உறுதியாகி உள்ளது.ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, 1996ல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மா ற்றப்பட்டு, நீதிபதி குன்ஹா, 2014 செப்., 27ல் தீர்ப்பு அளித்தார். ஜெ.,க்கு 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம்; மற்ற 3 பேருக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. உடனே 4 பேரும், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்க ப்பட்டனர். 21 நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்தவழக்கில் ஜெ., உள்ளிட்ட 4பேர் மூலம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதைவிசாரித்த பெங்க ளூ ரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நான்கு பேரையும் விடுவித்து, 2015 மே, 11ம் தேதி தீர்ப்பு அளித்தார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்தி ரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,  2016 ஜூன், 7 ம் தேதி அன்று தீர்ப்பு அளிப்பதை ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் (14.02.2017) இன்று, இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர்
இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோ ருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அவர்கள் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர் கள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. அவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரைகூறியதாவது
இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வோம். புதிய அ.தி.மு.க சட்டசபை தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் புதிய அரசு அமையும். பன்னீர்செல்வம் கட்சியில் இனி உறுப் பினராக இல்லை. தமிழகத்திற்கும் அதிமுகவிற்கு ம் அவர் துரோகம் இழைத்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா யார் முன்பு சரண் அடைய வேண்டும் ?
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொது செய லாளர் சசிகலாமீதான தண்டனை உறுதி செய்யப் பட்டதால், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கவேண்டும். இதன்படி அவர் பெங்களூரு கோர்ட் 48வது அறையில் நீதிபதி அசோக் நாராய ணன் முன்பு ஆஜராக வேண்டும் என பெங்களூரு கோர்ட் சிவில் பதிவாளர் ராதா கிருஷ்ணன் கூறியு ள்ளார். அவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஆஜராக வேண்டும்.

English Summery:
AIADMK General Secretary V K Sasikala was today convicted by the Supreme Court in the disproportionate assets case and will now have to serve her sentence of four years. The court observed that since she has already spent six months in jail during the trial of the case, she will now be spending three years and six months in jail. The two-judge bench comprising Justices P C Ghose and Amitava Roy directed Sasikala and the two relatives to surrender forthwith to the trial court in Bengaluru and serve the remaining part of four year jail term.  “Since the charges framed by the trial court have been restored against all of them they will surrender forthwith before the trial court and serve the remaining part of the sentence,” the bench said.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...