Wednesday, February 22, 2017

சசிகலாவுக்கே போனஸாக அளிக்க வேண்டியவை தான் .

ஜெயாவுக்கும் தான் தண்டனை கிடைத்திருக்கு., அதனால் அவரின் படங்களை அரசு அலுவலகங்களில் இனி மாட்டி வைக்கக் கூடாது என்பவர்களுக்கு....
1991ல் தொடங்கி 1996 வரை நடந்த அனைத்து ஊழலை யும் ஜெயலலிதாவை முன்னிறுத்தி தங்களுக்காகவே செயது முடித்தது சசிகலா குடும்பம்தான் என்பதில் தமிழ் நாட்டு மக்களுக்கு ஐயமில்லை...இப்போது தண்டனை கிடைத்திருக்கும் வழக்கின் விவரங்களை ஆராய்ந்தால்கூட, ஆட்சி அதிகாரத்தில் ஜெயலலிதா அமர்ந்ததும் சதி வலையை பின்ன ஆரம்பித்தார். எந்த சட்ட சிக்கல்களையும் ஆராயாமல்ச, ஜெயாவின் நற்பெயர் கெளரவம் எதைப் பற்றியும் கவலைப் படாமல் சிகலாவும் அவர் குடும்பத்தினரும் அடித்த கொட்டங்களுக்கு அளவேயில்லை. அந்த காலகட்டத்தில் சசிகலாவின் செயல்களுக்குத் தான் இப்போது தண்டனை கிடைத்திருக்கிறது. சசிகலா கும்பல் ஜெயாவின் அதிகாரத்தை கேடயமாக பயன் படுத்திக்க கொண்டுள்ளனர். தனி ஆளான ஜெயாவுக்கு இந்த ஊழல்களின் விவரங்கள் தெரியவரும்போது 1996ல் ஆட்சி மாற்றம் வந்து விட்டது. . மேலும் சுதாகரனின் திருமணம், டான்சி நில பேரம், பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு என எல்லாவற்றிலும் ஆக்ரோஷமாக தன் ஊழல் கரத்தை வீசி நடை போட்ட சசி குடும்பம் அந்த 5 ஆண்டு காலத்தில் ஜெயாவின் பதவியை தான் கேடயமாக உபயோகப் படுத்தினர். தன்னை அறியாமலேயே இந்தக் கும்பலின் சதி வலையில் ஜெயலலிதா மாட்டி கொண்டுவிட்டார் என்பது தான் உண்மை. மக்களும் ஜெயாவின் மீது கோபம் கொண்டு ஆட்சி மாற்றம் கொண்டுவந்தனர்.
ஒவ்வொன்றாக ஊழல் வழக்குகள் நீதி மன்றத்துக்கு வரும்போது விழித்துக் கொண்ட ஹெயலலிதா முதல் வேலையாக நடராஜன் , சசிகலா, திவாகரன், சுதாகரன் அனைவரையும் வீட்டை விட்டு மட்டுமல்லாது கட்சியை விட்டும் வெளியேற்றினார்., இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் என்பதில் சந்தேகமில்லை...உண்மையில் அப்போதே மக்கள் ஜெயாவுக்கு ஆட்சி மற்றம் மூலமாக தண்டனை அளித்து விட்டனர். ஜெயாவும் மனம் மாறி மக்களை நாடி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். முன்பை விட அதைக்கமாக மக்களுக்காகவே உழைத்தார். பல உயரிய திட்டங்களை ஏழை மக்களுக்குக் கொண்டுவந்தார். மக்களின் நன்மதிப்பையும் பெற்றார்.
தற்போதைய சூழலில் ஜெயாவுக்கு கிடைத்திருக்கும் தண்டனை ஜெயா இறந்ததனால் மட்டுமல்ல....தர்மப் படியும் நியாய படியும் கூட cசசிகலா தன்னுடைய தண்டனைக்கு காலம் மட்டுமின்றி, ஜெயாவின் பெயரையும் புகழையும் கெடுத்ததற்காக அவரின் தண்டனைக் காலமும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்பது நியாயம்தானே...?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...