திருப்பூர்:
திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் கே.என்.விஜயகுமார்.
எம்.எல்.ஏ. விஜய குமாரின் தந்தை கருப்புசாமிக்கு 2 மனைவிகள். இதில் முதல் தாரத்தின் மகன் விஜயகுமார் எம்.எல்.ஏ. ஆவார். 2-வது மனைவி அங்காத்தாளுக்கு (வயது 80) ஒரு மகன் உள்ளார்.
எம்.எல்.ஏ. விஜயகுமாரரின் தாய் சிறுவயதிலேயே காலமாகி விட்டார். கருப்பு சாமியும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
தற்போது அங்காத்தாள் திருப்பூர் அருகே வெங்கமேட்டில் உள்ள பூர்வீக வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் விஜயகுமார் எம்.எல்.ஏ. தற்போது சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்து வருகிறார்.
இதற்கிடையே நேற்று மாலை விஜயகுமார் எம்.எல். ஏ.வின் சித்தி அங்காத்தாள் உடல்நலக் குறைவால் இறந்தார். இதையொட்டி கூவத்தூரில் உள்ள விஜய குமார் எம்.எல்.ஏ.வுக்கு உறவினர்கள் செல்போனில் தகவல் கொடுத்தனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து உறவினர்கள் போன் செய்த போது ‘சுவிட்சு ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
விஜயகுமார் எம்.எல். ஏ.வின் இந்த செயல் உறவினர்களை மிகவும் வேதனை அடைய செய்தது.
பின்னர் இரவில் எப்படியாவது வந்து விடுவார் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று காலை வரையிலும் எம்.எல்.ஏ. வரவில்லை. இதைதொடர்ந்து அங்காத்தாளுக்கு விஜய குமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர்கள் இறுதி சடங்குகளை செய்தனர். பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தாயின் இறுதி சடங்கில் விஜயகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்காதது உறவினர்களை மட்டுமின்றி தொகுதி மக்களையும் வேதனையடைய செய்துள்ளது.
பணமா? பாசமா?
No comments:
Post a Comment