Monday, February 20, 2017

ஒட்டக்கூத்தரும் கம்பரும்.



கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் நிரந்தரமாவே புலமைக் காய்ச்சல் இருக்குதுன்னு கர்ண பரம்பரைக் கதைகள் சொல்லுதுங்க.
ரெண்டு பேருமே இராமாயணம் எழுதினதாகவும், அதுல ஒட்டக்கூத்தர் தன்னோடது கம்பரோட படைப்புக்கு இணையா நல்லபடியா வரலைங்கிறதால,
தன்னோட படைப்பை எரிச்சிட்டதாகவும் சொல்லுறாங்க.
ஒரு நாள் ஆத்தோட படித்துறையில ஒட்டக்கூத்தரும் கம்பரும் தள்ளி தள்ளி நின்னு கால்மொகங் கழுவிட்டு இருந்தாங்களாம்.
அப்ப,
தண்ணி ஒட்டக்கூத்தர் நின்னுட்டு இருந்த இடத்துல இருந்து,
கம்பர் நின்னுட்டு இருந்த இடத்துக்கு போய்ட்டு இருந்துச்சாம்.
அதப் பாத்த ஒட்டக்கூத்தர் குசும்புத்தனமா,
'கம்பரே நான் கழுவின கழுநீர்தான் உமக்கு வருது பாத்தீரா'னு கிண்டலா கேட்டாராம்.
அதக் கேட்ட கம்பர்,
"அட ' நீரே' வந்து என் காலில் விழுந்தால்,
நான் என்ன செய்வது?"னு சொன்னாராம் பதிலுக்கு!
இதைத்தான், "நாய்க் கடிக்க, செருப்பு அடிக்க"னு சொல்லுறாங்களோ?
Image may contain: 1 person
இது என்னுடையது, 
இது உன்னுடையது என சுயநலம் கொள்வதிலல்ல வாழ்க்கை....
எதுவாயினும் அது நம்முடையது எனும் பொதுவுடைமையில் நிலைப்பது தான் உண்மையான வாழ்க்கை.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...