அதிமுக வின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா தனது பதவியை ராஜினாமா செய்கிறாராம்.4 அமைச்சர்கள் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சந்தித்ததின் பின்னணி....
★ பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலாவை தமிழக அமைச்சர்கள் இன்று 28.02.2017 சந்தித்த நிலையில், அ.தி.மு.க. வின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
★ ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் மன்னார்குடி மாஃபியா கும்பலின் வற்புறுத்தலால் முதல்வரானார். டிசம்பர் 5ல் நடந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு என்ற பெயரில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அ.தி.மு.க.வின் உண்மைத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை தமிழக நடுநிலையாளர்களும் எதிர்த்தே வந்தனர். சசிகலாவை பதவி வெறியர்கள் மட்டுமே ஆதரித்து வந்தனர்.
★ இதற்கிடையில் சசிகலாவுக்ககும், அவரது குடும்ப உறுப்பினர்களின் அதிகார பதவி வெறியால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியை இராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி, மிரட்டி , பதவியை பிடிங்கி கொண்டனர். பொறுமையின் சிகரமான பன்னீர் அவர்கள் பொறுத்தது போதுமென , அம்மாவின் ஆசியுடன் பொங்கி எழுந்தார். இதன் காரணமாக உள்கட்சிப் பூசல் ஏற்பட்டது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள அதிமுக போர்க்கொடி தூக்கியது.
★ அதிமுக வின் MLAக்கள் 124 பேர் GOLDEN BAY சொகுசு RESORT ல் அடைத்து வைக்கப்பட்டனர். இரண்டு பகல் ஒரு இரவு சசிகலா அந்த சொகுசு விடுதியில் MLA களோடு தங்கி இருந்தார். 14.02.2017 அன்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவும் அவர் குடும்பத்தினரும் கொள்ளையடித்த குற்றவாளிகள்தான் . உடனே அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டுமென தீர்ப்பு வந்தது.
★ 15.02.2017 அன்று சசிகலா தனது சிறைப்பயணத்தை தொடங்கும் முன் அவசர அவசரமாக தனது அக்கா வனிதாமணியின் மகனும், தனது அண்ணன் சுந்தர வதனத்தின் மருமகனுமான, அன்னிய செலாவனி மோசடி வழக்கில் 28 கோடிஅபராதம் கட்டிய குற்றவாளியான TTV.தினகரனை கட்சியில் சேர்த்து, அடுத்த 10 வது நிமிடத்தில் , அதிமுக சட்டதிட்ட விதிகளிலேயே இல்லாத ஒரு புதிய பதவி துணைப் பொதுச்செயலாளர் ஆக்கி அறிவித்தார் தற்காலிக பொ.செ. சசிகலா.
தனது அண்ணன் சுந்தர வதனத்தின் மகன் Dr. வெங்கடேஷையும் கட்சியில் சேர்த்து அறிவிப்பு செய்தார். இந்த இருவரையும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் சேர்க்காமல் அடித்து விரட்டி வைத்திருந்தார் அம்மா.
★ இதன் ஒருகட்டமாக சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது என்று அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட , அதிமுகவின் 12 MPக்களும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தனர்

★ இந்நிலையில் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், பிப்ரவரி 28-ம் தேதிக்குள் (இன்று) சசிகலா, பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சசிகலாவின் அக்கா மகன் TTV.தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
★ சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சசிகலாவை, K.A.செங்கோட்டையன்.திண்டுக்கல் சீனிவாசன்.செல்லூர் ராஜு.காமராஜ் ஆகிய அமைச்சர்கள் சந்தித்துபேசினர்.சசிகலாவால் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனும் இதற்கு முன் சந்தித்துப் பேசியியிருந்தார். அப்போது கட்சியின் உள்விவகாரங்களையும், தமிழக அரசியல் சூழ்நிலைகளையும் கேட்டறிந்த கொள்ளைக் குற்றவாளிசசிகலா, அதற்கான ஆலோசனைகளையும் தெரிவித்தார். மேலும் அப்போது, தேர்தல் ஆணைய விவகாரம், சிறை மாற்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் மறு சீராய்வு மனு உள்ளிட்டவைகள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும்,கட்சியின்உள்விவகாரங்கள், பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
★ அதிமுக வின் சட்ட திட்ட விதிகளின்படி தேர்வு செய்யப்படாத வெறும் 2500 பேர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவின் பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது.
★ சிறை தண்டனைப்பெற்று ஜெயிலில் இருக்கும் ஒரு குற்றவாளி தலைவராக இருந்து , அவர் ஆலோசனையின்படி செயல்படும் இந்த அரசு கலைக்கப்பட வேண்டும். என இது போன்ற நியாயமான குற்றச் சாட்டுகளிலிருந்து தப்பிக்க குற்றவாளி சசிகலா தனது தற்காலிக பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்யும் நிர்பந்தத்தில் உள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நல்ல செய்தி விரைவில் வெளியாகும் என நம்புகிறோம்.

No comments:
Post a Comment