Tuesday, February 14, 2017

பொருளைச் சேர்த்து விடுவதால் மட்டும் நம் வாழ்க்கை நிறைவு பெற்றுவிட மாட்டாது.

பகல் பொழுது முழுவதையும் நாம் பெரும்பாலும் பொருள் சேர்க்கும் முயற்சிகளிலேயே செலவழித்து விடுகிறோம்.
பொருளைச் சேர்த்து விடுவதால் மட்டும் நம் வாழ்க்கை நிறைவு பெற்றுவிட மாட்டாது.
மனைவி, மக்கள், நண்பர்கள், உறவினர்கள், இவர்களோடெல்லாம் கலந்து பழகி அளவளாகும் போதுதான் நிறைவுபெறுகிறது.
ஒவ்வொரு நாள் மாலைப் பொழுதையும் நாம் இவ்வாறு அளவுளாவுவதற்கு என்று ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
வாரத்தில் நான்கு நாட்களை மனைவி, மக்களுக்கும்,
மீதி மூன்று நாட்களை மற்றையோருக்கும் ஒதுக்கி வைக்கலாம்.
அவர்களோடு
வேடிக்கை விளையாட்டாகச் சிரித்துப் பேசி மகிழ்வுற்று இருப்பதே இவ்வாறு ஒதுக்கி வைப்பதன் குறிக்கோள்!!
அந்தச் சமயங்களில்,
வீட்டிலேயே கேரம், சதுரங்கம் போன்ற தீங்கற்ற விளையாட்டுக்களை விளையாடலாம்.
அல்லது பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்குச் சென்று, உல்லாசமாக பொழுதுபோக்கி விட்டு வரலாம்.
அல்லது நண்பர்கள், உறவினர்கள் இவர்களின் வீடுகளுக்குச் சென்று வரலாம்,
அல்லது இவர்களை நம் வீட்டில் வரவேற்கலாம்.
சமயப்பற்று உள்ளவர்கள், ஆலயங்களுக்குச் செல்லலாம்.
அல்லது
ஆத்திகச் சொற்பொழிவுகளுக்குப் போகலாம்.
இப்படி ஏதாவது ஒரு பொழுது போக்கில்,
நம் குடும்பத்தோடு,
அல்லது நண்பர்களோடு,
அல்லது உறவினர்களோடு ஈடுபட வேண்டும்.
இப்படி ஈடுபடுவது,
பகற்பொழுதில் நமது உடல் உழைப்பினால்,
அல்லது மன உழைப்பினால் ஏற்பட்டுள்ள களைப்பையெல்லாம் போக்கி விடும்.
அதற்காக, நாள்தோறும் இரவில் நீண்டநேரம்வரையில்,
இம்மாதிரிப் பொழுதுபோக்குகளிலேயே நாம் மூழ்கியிருக்கக் கூடாது.
அன்பான காலை வணக்கங்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம்!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...