Thursday, February 23, 2017

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!


1973-ம் வருடம் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், “இவ்வளவு பெரிய மாளிகையில் தனியாக வசிக்கிறீர்களே... போரடிக்கவில்லையா?” என்ற கேள்விக்கு, “யார் சொன்னது நான் தனியாக வசிக்கிறேன் என்று! என் வீட்டில் நான், என் சித்தி, சித்தப்பா, என் 7 குழந்தைகள் மற்றும் 12 வேலையாட்கள் வசிக்கிறோம்” என பதில் தர நிருபருக்கு அதிர்ச்சி. “நான் குழந்தைகள் எனச் சொன்னது நான் வளர்க்கும் நாய்களை!” என ஜெயலலிதா விளக்கிய பிறகே குழப்பம் தீர்ந்தது. இப்படி மனிதர்களிடமிருந்து பேதம் பார்க்காமல் நாய்கள்மீது அத்தனை பிரியம் கொண்டிருந்தார் அவர். 
 ஒருமுறை படப்பிடிப்பில் ஓய்வாக அமர்ந்திருந்த போது அங்கிருந்த தெரு நாய்களை ஸ்டுடியோ ஊழியர்கள் விரட்டியடித்ததை ஜெயலலிதா கண்டார். மீண்டும் ஷாட்டுக்குக் கிளம்பியபோது காலில் ஏதோ உறுத்த குனிந்து பார்த்தவர் அதிர்ச்சியடைந்தார். பிறந்து 2 மாதமே ஆன நாய்க்குட்டி, `என்னை விரட்டாதே’ என்பதுபோல பரிதாபமாகப் பார்க்க, அதை காரில் ஏற்றி வீட்டுக்குக்கொண்டு வந்தார் ஜெயலலிதா. ‘பூச்சி’ என அதற்குப் பெயரும் சூட்டினார். 8 மாதங்களுக்குப்பின் ஜெயலலிதா படப்பிடிப்புக்குச் சென்றிருந்த நிலையில் ஒருநாள் வேலையாள் ஒருவர் கதவைத் திறக்க தன் எஜமானியைப் பார்க்காமல் பல நாட்கள் ஆன ஆர்வத்தில் ஜெயலலிதாவின் கார் நிற்கும் இடத்துக்கு ஓடி வந்தது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஜீப் அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே இறந்தது. வீடு திரும்பியபின் தகவலைக் கேட்டு கதறி அழுத ஜெயலலிதா, வேலையாட்களை உச்ச ஸ்வரத்தில் திட்டித் தீர்த்தார். “என்னதான் பாலும் தேனுமாகக் கொடுத்து பாசத் துடன் பூனைகளை நீங்கள் வளர்த்தாலும் வீட்டையோ, ஊரையோ காலி செய்துகொண்டு கிளம்பும்போது அது உங்களைப் பின்தொடர்ந்து வராது. அடுத்து அங்கு வருபவர்களுடன் நேசத்தைத் தொடரும். நாய் அப்படியில்லை... ஒருநாள் உணவிட்டாலும்கூட அது காலம் முழுவதும் உங்களைச் சுற்றிச்சுற்றி வரும். எங்குச் சென்றாலும் உங்களைப் பின்தொடர்ந்து வரும். அதுதான் நாய்களின் நன்றி குணம். அதுதான் நான் நாய்களை வளர்க்கக் காரணம்.”
தான் வளர்த்த நாயிடம்கூட நன்றியை எதிர்பார்த்த ஜெயலலிதாவுக்குத் தன்னால் வளர்க்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து குறைந்தபட்ச நன்றியாவது கிடைத்ததா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...