ஆவியில் வேகவைத்துச் சாப்பிடும் எந்த உணவுமே, உடலுக்கு நன்மையைத் தரக்கூடியதுதான். அதிலும், கேழ்வரகில் செய்யும் இட்லி, உடலுக்கு ஊட்டத்தைத் தரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம்.
கேழ்வரகு இட்லி
செய்முறை: தலா 200 கிராம் கேழ்வரகு, இட்லி அரிசி எடுத்துக் கொள்ளவும். இதனுடன், 100 கிராம் பச்சரிசி சேர்த்து, நன்றாகக் கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். 400 கிராம் உளுந்தைத் தனியாக ஊற வைக்கவும். ஊறிய உளுந்தில் தண்ணீர் தெளித்து அரைக்கவும். அரிசியையும் கேழ்வரகையும் அரைத்து எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, இட்லி தட்டில் மாவை ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.
பலன்கள்
கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், வயதானோர் என அனைவரும் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment