திருச்சியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இன்று திடீரென அகற்றப்பட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சி.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா. இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.
ஜெயலலிதா குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அவரது படத்தை அரசு அலுவலகங்களில் இருந்து எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், திருச்சியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இன்று திடீரென அகற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment